திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

வெற்றிகள் அருள்வாள் ஶ்ரீபகளாமுகீ!

அம்பாள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அம்பாள்!

அதர்வண வேதத்தில் பகளா சூக்தம், யஜுர் வேதத்தில் ஆபிசாரிகப் பிரகரணம் ஆகியவற்றில், இந்த தேவியின் தன்மை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

`பகளாமுகி அம்பிகை வழிபாட்டு விரத நியதிகள் குறித்த வழிகாட்டல் வேண்டும்' என்று 10.8.21 தேதியிட்ட இதழில் கோவில்பட்டி வாசகர் எம்.ராஜா, கேட்டிருந்தார். பகளாமுகீ தேவியின் மகிமை குறித்து, சென்னை காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் அளித்திருக்கும் தகவல்கள் இங்கே...

தசமஹா தேவியர்களில் எட்டாவது சக்தியாக விளங்கி அருளுபவள் ஸ்ரீபகளாமுகீ தேவி. அசுரனை தண்டிக்கும் கோலத்தில் இந்த தேவியை தியானிப்பது மரபு. இதுபோன்று தீமைகளை அழிக்கும் தெய்வங்களை நாம் வணங்கும்போது, நம்மில் இருக்கும் அசுரத்தன்மை விலகி, நம்மைச் சுற்றி இருக்கும் தீமைகளும் போக்கப்படுகின்றன.

அசுரர்கள், தேவர்களை அழிக்க சில ஆபிசார பிரயோகங்கள் செய்த வஸ்துக்களைப் புதைத்து விட்டுச் சென்றனர். புதைத்துவிட்ட சென்ற வஸ்துக்களை ‘க்ருத்யா' என்று கூறுவர். அவற்றை அழிக்கும் வாக்கு அல்லது சொல்லுக்கு, ‘வலகஹனம்' என்று பெயர். வலகா என்பது ‘பலகா’ என மறுவி, பிறகு ‘பகளா’ என்று அமைந்தது. அதனுடன் ‘முகி’ சேர்ந்து ‘பகளாமுகீ’ என்ற பெயர் ஏற்பட்டது. ‘முகி’ என்பதற்கு பிளப்பது என்று பொருள். அதாவது, தீயவற்றைப் பிளக்கும் சக்தியாக பகளாமுகீ தேவியானவள் போற்றப்படுகிறாள்.

வெற்றிகள் அருள்வாள் ஶ்ரீபகளாமுகீ!

அதர்வண வேதத்தில் பகளா சூக்தம், யஜுர் வேதத்தில் ஆபிசாரிகப் பிரகரணம் ஆகியவற்றில், இந்த தேவியின் தன்மை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. ‘பகளா’ எனில் பேசக்கூடிய சக்தியை அளிப்பவள் என்றும் கூறப்படுகிறது. இந்த பராசக்தியானவள் மந்நாராயணருக்கும் ஸ்ரீசிவபெருமானுக்கும் உதவினாள் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த அன்னையின் சக்தியானது நல்லோருக்கு வெற்றியை அளிக்க வல்லது. பிறர் செய்யும் தீய செயல்களில் இருந்து நம்மைக் காக்க வல்லது. மஞ்சள் வண்ணப் பூக்களால் இந்த தேவியை அர்ச்சித்தால், வேண்டிய பலன் கிடைக்கும். கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம்.

ஶ்ரீபகளாமுகீ காயத்ரீ

ஓம் பகளாமுக்யை வித்மஹே ஸ்தம்பின்யை ச தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத்

மூல மந்திரம்: ஓம் பகளாமுக்யை நம: