Published:Updated:

ஆலயங்கள்... அற்புதங்கள்!

ஆலயங்கள்... அற்புதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயங்கள்... அற்புதங்கள்!

திருக்கயிலையை வலம் வந்த புண்ணியம்!

ஆலயங்கள்... அற்புதங்கள்!

திருக்கயிலையை வலம் வந்த புண்ணியம்!

Published:Updated:
ஆலயங்கள்... அற்புதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயங்கள்... அற்புதங்கள்!

மண மாலை அருளும் மஞ்சள் மாலை!

காஞ்சிபுரம் வேலூர் சாலையில் அமைந்துள்ளது காவேரிப்பாக்கம். காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தூரம்; வேலுரிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரம். இவ்வூரின் அருகில் ரங்கநாதர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது.

இங்கு, திருமணம் ஆகாத ஆண்கள் 116 விரலி மஞ்சளால் கோக்கப்பட்ட மாலை, 5 தேங்காய்கள், ஒரு கிலோ நெய் மற்றும் ஒரு கிலோ நல்லெண்ணெய் சமர்ப்பித்து ரங்கநாதருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் கல்யாணம் கூடிவரும். அதேபோல், கன்னிப்பெண்கள் இத்தலத்தில் அருளும் ரங்கநாயகித் தாயாருக்கு தேனால் திருமஞ்சனம் செய்து வழிபட்டால் மணப்பேறு வாய்க்கும். குழந்தை வரம் வேண்டுவோர் இந்தத் தாயாருக்கு பால் அபிஷேகம் செய்து, வாசற்படியில் நெய்யினால் மெழுகி சர்க்கரையால் கோலமிட்டு வணங்கவேண்டும்.

திருக்கயிலையை வலம் வந்த புண்ணியம்!

திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி கோயிலின் வெளி மதிலைச் சார்ந்த பிராகாரத்தை வலம் வந்தால் அசுவமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும். அதற்கு அடுத்த கொடுமுடி பிராகாரத்தை வலம் வந்தால், திருக்கயிலையை வலம் வந்த பலன் கிடைக்கும். அடுத்துள்ள பிரணவப் பிராகாரத்தை வலம் வந்தால் பிள்ளை வரம் முதலான சகல செல்வங்களும் கிடைக்கும்!

`ருத்ராட்சமணி’ கவசம்!

கும்பகோணம் அருகிலுள்ளது தேப்பெருமாநல்லூர். இங்கு கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு விஸ்வநாத சுவாமியை தரிசித்து வழிபட்டால் பிறவிப்பிணி அகலும் என்பது ஐதிகம். சூரிய தேவன் நாள்தோறும் தன் கிரணங்களால் வழிபடும் ஸ்வாமி இவர்.

இங்கு மூலவருக்கு 22,000 ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்துக் கவசமிடுகிறார்கள். பிரதோஷம், சிவராத்திரி முதலான சிவபெருமானுக்கு உகந்த திருநாள்களில் இந்த விசேஷக் கவச அலங்காரத்தில் அருளும் விஸ்வநாதரை தரிசிப்பதால் விசேஷ பலன்கள் வாய்க்கும் என்கிறார்கள் இப்பகுதி பக்தர்கள்.

ஆலயங்கள்... அற்புதங்கள்!

அண்ணாமலை அற்புதம்!

திருவண்ணாமலை ஆலயத்தின் மூன்றாம் பிராகாரத்தில் ஸ்தல விருட்சமான மகிழ மரத்தை தரிசிக்கலாம். இந்த விருட்சத்தின் கீழ் நின்று பார்த்தால், ஆலயத்தின் ஒன்பது கோபுரங்களையும் ஒருசேர தரிசிக்கும் பாக்கியம் வாய்க்கும்.

அதேபோல் அண்ணாமலை ஆலயத்தின் கொடிமரத்தின் வட புறத்தில் இருக்கும் செந்தூர விநாயகரையும் பக்தர்கள் அவசியம் தரிசிக்கவேண்டும். இந்தத் தலத்தில் அண்ணாமலையாரும் கிரிவலம் வருவது சிறப்பம்சம். தை மாதம் மாட்டுப்பொங்கலன்று (திருவூடல் வைபவம்) அண்ணாமலையார் கிரிவலம் வருவார்.

மூன்று மூலவர்கள்!

பிரம்மதேவன் வழிபட்டதால் பிரமபுரம்; பரம்பொருள் இறையனார் மூங்கில் வடிவத்தில் தோன்றி வேணுவனம் ஆனதால் வேணுபுரம்; பிரளய காலத்தில் உலகம் முழு மையும் வெள்ளத்துக்குள் மூழ்க, உமையம் மையை அருகில் இருத்திக் கொண்டு, சுத்த மாயை என்பதையே ஒரு தோணியாக்கி, இறையனார் தங்கியிருந்த இடம் ஆகையால் தோணிபுரம்... இப்படிப் பல பெருமைகளும் திருப்பெயர்களும் பெற்றுத் திகழும் தலம் சீர்காழி.

சீர்காழித் திருத்தலத்தில், மொத்தம் மூன்று மூலவர்கள் எனலாம். பிரம்மபுரீஸ்வரர்; தோணியப்பர்; சட்ட நாதர். பிரம்மன் பூசித்த பிரம்மபுரீஸ்வரர் லிங்க வடிவம்; தோணியப்பர் (ஞானப் பால் கொடுத்தவர்) குரு வடிவம்; சட்டநாதர் சங்கம வடிவம்.

தோணியப்பர் சந்நிதிக்குப் பக்கவாட்டிலுள்ள படிகளில் ஏறிச் சென்றால், சட்ட நாதரை தரிசிக்கலாம். எலும்புகள் கொண்டு முறுக்கிய தண்டை ஏந்தி காட்சிதருகிறார் இவர். மிக மிக பக்தியோடு சட்டநாதரை தரிசிக்க வேண்டுமென்பது ஐதிகம். நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் சட்டநாதர் பெயராலேயே, கோயில் தேவஸ்தானம் வழங்கப்படுகிறது. வெள்ளிக் கிழமை இரவுகளில், 10 மணிக்கு மேல், புனுகுச் சட்டம் சார்த்தி வழிபடுவது வழக்கம். அப்போது நிவேதனமும் உண்டு.