Published:Updated:

சௌபாக்கிய வாழ்வைத் தரும் ஸ்ரீஜெய விஜய ஹோமம் - ஸ்ரீஆத்யந்த பிரபு! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஜெய விஜய ஹோமம்
ஜெய விஜய ஹோமம்

ஸ்ரீஜெய விஜய ஹோமம்

தாகாலட்சபமோ, இசைக் கச்சேரியோ எங்கு சென்றாலும் 'மகா கணபதிம்' என்று தொடங்கி 'ராமச்சந்த்ராய, ஹனுமந்தாயா நமஹ' என்று மங்களம் பாடி முடிப்பது வழக்கம். ஆரம்பத்தை கணநாதர் நல்லபடியாக தொடங்கி வைப்பார் என்றால் காரியத்தை சுபமாக முடித்துக் கொடுப்பவர் ஆஞ்சநேயர். இதனால் தான் இவர்கள் இருவரையும் இணைத்து வழிபடும் வழிபாடு தொடங்கியது.

அனுகூலமான காலத்தைக் கொடுப்பவர் கணபதி. அந்த காலத்தில் நாம் விரும்பியதை அடைய மனஉறுதியை பலத்தைக் கொடுப்பவர் அனுமன். பிரம்மச்சர்ய வடிவாகவும், சமநிலை மூர்த்திகளாகவும் அருளும் இவர்களை தனித்தனியே பல ஆலயங்களில் தரிசித்து இருக்கலாம். ஆனால் இருவரையும் வலதும் இடதுமாக ஒரே திருமேனியாக அதுவும் மூல மூர்த்தியாக தரிசிப்பது அபூர்வம். சென்னையை அடுத்த வல்லக்கோட்டை தாண்டி வடக்கால் பகுதில் அமைந்துள்ள ஸ்ரீஆத்யந்த பிரபு ஆலயத்தில் இவர்களை ஒருசேர தரிசிக்கலாம்.

ஆத்யந்த பிரபு
ஆத்யந்த பிரபு

விநாயகர் மற்றும் அனுமன் ஆகிய மூர்த்திகளும் நவகிரகங்களின் தாக்கத்தால் பாதிக்கப் படாதவர்கள். இருவருமே மும்மூர்திகளாலும் கொண்டாடப்படுபவர்கள். அஷ்ட திக்கு பாலர்களும் இவர்களுக்கு அடிபணிந்தவர்கள் எனவே கணபதியையும் அனுமனையும் வணங்கினால் எந்த தொந்தரவும் இல்லாமல் இனிமையான வாழ்வைப் பெறலாம் என்பது ஆன்மிக நம்பிக்கை.மேலும் ஆதியந்த பிரபுவை தரிசிப்பதன் மூலம் சனி தோஷம் உள்ளிட்ட நவகிரக தோஷங்கள் அனைத்திலும் இருந்து விடுபடலாம்.

தொடர்ந்து ஒரு காரியத்தில் தடை இருந்து வந்தால், வேலைகள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தால், தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தால், மனதில் தேவையில்லாத அச்சங்கள் சூழுந்து கொண்டிருந்தால் ஸ்ரீஆத்யந்த பிரபுவை வணங்கினால் உடனடியாக பலனைப் பெறலாம் என்பது ஆன்மிகப் பெரியோர்களின் கருத்து.

அதிலும் ஸ்ரீஆத்யந்த பிரபுவைத் தொழுது நடத்தப்படும் இந்த ஸ்ரீஜெய விஜய ஹோமத்தில் கலந்து கொண்டால் கட்டாயம் காரியத் தடைகள் நீங்கி எண்ணிய செயலர்கள் விரைவாக நடைபெறும் என்பதும் பெரும் நம்பிக்கை.

சிறப்புகள் பல கொண்ட இந்த ஸ்ரீஜெய விஜய ஹோமம் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 5-9-2021 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெறவுள்ளது. அதை அடுத்து அதே ஆலயத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீஷீரடி சாய்பாபாவின் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

ஸ்ரீஆத்யந்த பிரபு
ஸ்ரீஆத்யந்த பிரபு

சகல காரியங்களிலும் உள்ள தடைகளை நீக்கி நன்மையையும் நலன்களையும் உருவாக்கித் தரும் இந்த அபூர்வ ஹோமத்தால் உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் சௌக்கியமும் மேம்படும்.

செல்வ வளம், கடன் தீர்வு, சொத்துப் பிரச்னையில் தீர்வு, வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை, தள்ளிக்கொண்டே போகும் சுப காரியங்கள், தீராத நோயில் இருந்து நிவாரணம், தீய பழக்கங்களில் இருந்து விடுபடுதல் என பல்வேறு பலன்களை அளிக்கும் அபூர்வ ஹோமம் இது. இந்த ஒரு ஹோமம் செய்யும் பலன் என்பது 108 கணபதி ஹோமமும் 108 ஸ்ரீவைணதேய ஆஞ்சநேய ஹோமமும் இணைந்த பலனைத் தருமாம். எனவே கவலையில் வாடும் அன்பர்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு நிவாரணம் பெறலாம் என்பது பெரியோர்களின் கூற்று.

வாசகர்கள் கவனத்துக்கு :

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) மற்றும் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு