Published:Updated:

'காசியின் புண்ணியம் இங்கே உண்டு!'

ஶ்ரீபிரம்ம புரீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீபிரம்ம புரீஸ்வரர்

திருப்பட்டூர் மகிமை (சென்ற இதழ் தொடர்ச்சி)

``சிவாசார்யர்களுக்கு அருள்பாலிக்கிற ஒப்பற்ற தலம் இந்தத் திருப்பட்டூர்.

அதனால் தான், ‘ஆகமச் செல்வர்களுக்கு அருள் நல்கும் இறைவனே!’' என்று இந்தத் தலத்து இறைவனைப் போற்றுகின்றனர்' என்று பூரிப்புடன் சொல்லும் பாஸ்கர குருக்கள், இத்தகவல் குறித்து மேலும் விவரித்தார்.

``வேதங்களைப் பூரணமாகக் கற்றுக்கொண்டு, அதை இறைச் சந்நிதியில் உச்சரித்து, அதனால் அந்தக் கோயிலுக்கு இன்னும் இன்னும் சக்தியையும் சாந்நித்தியத்தையும் பெருக்குகிற கடமைக்குரியவர்கள் சிவாச்சார்யர்கள். அவர்களும் அவர்கள்தம் குடும்பத்தாரும் வாழ்வாங்கு வாழ, அவர்களின் சந்ததிகள் சீரும் சிறப்புமாக செழிக்க, திருப்பட்டூரின் ஶ்ரீபிரம்மபுரீஸ்வரரும் ஶ்ரீகாசிவிஸ்வநாதரும் அருள்புரிகின்றனர்.

'காசியின் புண்ணியம் இங்கே உண்டு!'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உலகம் முழுவதும் உள்ள சிவத்தலங்களில் இறைப்பணியாற்றும் சிவாச்சார்யர்கள், அர்ச் சகர்கள், குருக்கள்மார்கள் என அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் இந்தத் தலத்துக்கு வந்து, ஶ்ரீகாசிவிஸ்வநாதரையும் ஶ்ரீபிரம்ம புரீஸ்வரரையும் கண்ணார தரிசித்து, வணங்கினால் போதும்... அவர்கள் அகமும் புறமும் புத்தொளி பெறும். அவர்கள் சந்ததி, சீரும் சிறப்புமாக வாழும் என்பது உறுதி.''

இப்படிச் சிவனடியார்கள் கொண்டாடுகிற தலமும் சிவாசார்யர்களுக்கு அருள் வழங்குகிற அற்புதத் தலமுமான திருப்பட்டூருக்கு மேலும் பல மகிமைகள் உண்டு.

எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பித் ததும்பிய புண்ணிய பூமி இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிவ சாபத்துக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டு இழந்த பதவியை அடைந்த ஶ்ரீபிரம்மா தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிற க்ஷேத்திரமும் இதுவே. ‘இங்கு வருகிற என் அடியவர்களுக்கு, விதி இருப்பின் விதிகூட்டி அருளுக!’ என சிவனாரின் திருவாக்கின்படி, இந்தத் தலத்துக்கு வருகிற அன்பர்களின் தலையெழுத்தையே மாற்றி அமைத்துத் திருத்தி அருள்கிற ஶ்ரீபிரம்மாவின் பேரருள் நிறைந்திருக்கிற அற்புதமான தலம். ‘திருப்பதிக்குச் சென்றால் திருப்பம் நிகழும்’ என்பது போல், ‘திருப்பட்டூர் சென்று வந்தால், வாழ்வில் முன்னேற்றங்கள் நிச்சயம்’ என்று சொல்கிற அடியவர்கள் ஏராளம்.

ஶ்ரீகாசிவிஸ்வநாதர்
ஶ்ரீகாசிவிஸ்வநாதர்

ஶ்ரீகாசிவிஸ்வநாதர் ஶ்ரீவிசாலாட்சியுடன் தனியே கோயில்கொண்டிருப் பதால், இது காசிக்கு நிகரான தலம் என்கின்றனர் ஒரு சாரார்.

``ஆம்! இத்தலத்தில் வியாக்ரபாதர் உண்டுபண்ணிய தீர்த்தத்தில், அந்தக் கங்கை நீரே வந்து கலந்ததாக ஐதிகம். எனவே, இங்கே காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள தீர்த்தம், கங்கைக்கு நிகரானது!'' என்கிறார் பாஸ்கர குருக்கள்.

வியாக்ரபாதர் மட்டுமா? பதஞ்சலி முனிவரும் வந்து வழிபட்ட அற்புத க்ஷேத்திரம் இது. வாருங்கள்... இந்த முனிவர்களுக்கும் இந்தத் தலத்துக்குமான தொடர்பை அறிந்துகொள்வோம்.

சிவபெருமானுக்கு பூஜை செய்வதற்காகவும் சிவ பூஜையின் மகிமைகளை உலகுக்கு உணர்த்துவதற்காகவும் தோன்றிய மகா புருஷர் வியாக்ரபாதர். வியாக்ரபாதரின் இயற்பெயர் மழன்.

ஶ்ரீபிரம்ம புரீஸ்வரர்
ஶ்ரீபிரம்ம புரீஸ்வரர்

சிவபக்தரின் மகனான இவர் ஒருநாள் தன் தந்தையிடம், “நான் தவம் மேற்கொள்ள விரும்புகிறேன்” என்று சொன்னார். அதற்கு அவரின் தந்தை, “தவம் சொர்க்கத்தைப் பெற்றுத்தரும். ஆனால், தூய்மையான பக்தியோடு செய்யும் சிவ பூஜையோ சிவ தரிசனத்தையும் முக்திப் பேற்றையும் அருளும்” என்றார். அதைக் கேட்ட கணத்திலிருந்து இந்த உலகை மறந்து சிவ பூஜையை மேற்கொண்டார் மழன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வண்டுகளின் எச்சில்படாத மலர்களைப் பறிப்பதற்காக அதிகாலையிலேயே நந்தவனம் செல்லும் மழன், அவற்றைச் சிவ நாமம் சொல்லியபடி பறித்து வந்து சிவனாருக்குச் சமர்ப்பிப்பார்.

ஆனால், அதே வேளையில் பனிக்காலங்களில் விருட்சங்களில் ஏறி வில்வத் தளங்களையோ வேறு மலர்களையோ பறிக்க முயன்றால் கைகள் வழுக்குகின்றன. அவ்வாறு வழுக்காமல் வில்வத்தை - மலர்களை முறையோடு பறிக்க ஒரு புலியின் கால்களைப் போல கைகளும் கால்களும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டிக்கொண்டார்.

ஶ்ரீபிரம்மா
ஶ்ரீபிரம்மா

வேண்டுதலுக்குச் சிவம் செவிசாய்த்தது; ‘அவ்வாறே ஆகட்டும்’ என்று அருள்பாலித்தது.

சிவ பூஜைக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டு புலிக்கால்கள் பெற்றதால், புலிக்கால் முனிவர் என்றும் வியாக்ரபாதர் என்று பெயர் பெற்றார் மழன். சிவத்தலங்கள் எல்லாம் சென்று பூஜை செய்த வியாக்ரபாதர், அற்புதத் தலமான திருப்பிடவூர் எனப்படும் இந்தத் திருப்பட்டூருக்கும் வந்தார். அது நாம் பெற்ற புண்ணியப் பலன் என்றே சொல்ல வேண்டும்!

திருப்பட்டூருக்கு வந்த வியாக்ரபாதர், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, அனுதினமும் முறைப்படி வழிபட்டு வந்தார். இந்த நிலையில், தேவேந்திரன் திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவலில் இருக்கும் ஜம்புகேஸ்வருக்கு, தினமும் கங்கையில் இருந்து தீர்த்தம் எடுத்துக்கொண்டு வந்து அபிஷேகித்து வழிபட்டு வந்தார்.

அவ்வாறு ஒருநாள் அவர் கங்கா தீர்த்தத்தைக் கலசத்தில் எடுத்துக்கொண்டு ஆகாயமார்க்கமாகப் போகும்போது, அதை வியாக்ரபாதர் கண்டார்.

இந்த உலகில் எவையெல்லாம் உயர்ந்தவையோ, அவற்றையெல்லாம் கொண்டு சிவ பூஜை செய்ய வேண்டும் என்பதுதானே சிவனடியார்களின் விருப்பம். வியாக்ர பாதருக்கும் ‘தான் பூஜை செய்யும் லிங்கத்தைக் கங்கை தீர்த்ததால் அபிஷேகிக்க வேண்டும்’ என்ற எண்ணம் வந்தது. அபிஷேகிக்கக் கொஞ்சம் தீர்த்தம் தருமாறு இந்திரனை வேண்டினார். எங்கும் எழுந்தருளியிருப்பவன் அந்த ஈசனே என்னும் மெய்ஞ்ஞானம் இந்திரனின் மனத்தில் அந்தக் கணத்தில் தோன்றவில்லை. தீர்த்தம் தர மறுத்தான்.

வியாக்ரபாதருக்கு விழிகள் சிவந்தன. இந்திரனுக்கு மெய்ஞ்ஞானம் அருளும் பொருட்டு தன் புலிக்காலால் நிலத்தைப் பெயர்த்து இந்திரன் மேல் எறிந்தார். அது இந்திரன் மேல்பட்டு கங்கை அங்கு சிதறியது. கங்கை நீர் பாய்த்த இடத்தில் ஒரு தடாகம் உருவானது.

'காசியின் புண்ணியம் இங்கே உண்டு!'

அதுதான் இன்றுவரை உள்ள புலிப்பாய்ச்சி தீர்த்தம் என்ற பெயரோடு நிலைத்திருக்கிறது. இன்றைக்கும் அந்தத் தடாகத்தை ஒரு பருந்துப்பார்வையாகப் புகைப் படம் எடுத்தால் அது புலியின்கால் வடிவிலேயே அமைந்திருக்கும்.

காசி விஸ்வநாதர் எழுந்தருளி யிருக்க, கங்கை தீர்த்தமும் உண்டான பின்னால் திருப்பட்டூர் காசியாகவே மாறியது. அதன்பின் வியாக்ரபாதர் வேறு எந்தத் தலத் துக்கும் செல்லவில்லை. அங்கேயே சிவ பூஜை செய்து வந்தார். அவரோடு பதஞ்சலி முனிவரும் வந்து சேர்ந்துகொண்டார்.

சிவனின் ஆனந்தக்கூத்தை கண்டு ரசித்த சிரேஷ்டர்கள் அல்லவா அவர்கள்... இந்தத் தலத்திலேயே தங்கள் வாழ்வைக் கழிக்கத் தீர்மானம் செய்தனர்.

மகான்களின் பார்வைபடுவதே சிறப்பு. அவர்கள் திருவடி படுமாயின் அது பெரும் சிறப்பு. அவர்கள் அங்கேயே தங்கி விடுவதென்றால் அந்த மண்ணின் மகிமையைச் சொல்லவும் வேண்டுமா... வியாக்ரபாதர் காசிவிஸ்வநாதரையும் பதஞ்சலி முனிவர் இத்தலத்தின் பிரம்ம புரீஸ்வரரையும் தம் ஸ்தூலவடிவில் இருக்கும்வரைக்கும் வழிபட்டு அங்கேயே இறைவனின் அருளோடு கலந்தனர்.

இருவரின் அதிஷ்டானங்களும் இந்தத் தலத்தில்தான் உள்ளன. இன்றைக்கும் இருவரும் தினமும் சூட்சும வடிவில் இங்கே ஈசனை வழிபடுவதாக ஐதிகம்.

வியாக்ரபாதர், ஒரு தந்தையின் வாஞ்சையோடு, இந்தத் தலத்துக்கு வந்து தம்மிடம் வேண்டுவோருக்கு வேண்டியபடி வரம் தந்து அருள்கிறார். வியாக்ரபாதரின் அதிஷ்டானம் திருப்பட்டூர் காசிவிஸ்வ நாதர் திருக்கோயிலில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குச் சென்று அம்மையப்பனை வழிபடுவதுடன், வியாக்ரபாதர் அதிஷ்டானம் அருகில் சிறிது நேரம் அமர்ந்து தியானித்து வழிபடவேண்டும்.

இந்தச் சந்நிதியில் வைக்கும் வேண்டுதல்கள் அத்தனையும் நிறைவேறும். குறிப்பாக மனப் பயம் நீங்கும். தைரியம் பிறக்கும். புலப்படாத ஞானத் தேடல்கள் புலப்படும். கேட்ட வரங்கள் கிடைக்கும். இல்லை என்ற சொல் இங்கு வழிபடுபவர்களின் வாழ்வில் இல்லாமலே போகும்!

திருப்பிடவூர் எனும் திருப்பட்டூரில், பிரம்மபுரீஸ்வரரை வழிபடுவதற்கு முன்பாக இந்தக் கோயிலுக்கு வந்து அருள்மிகு காசிவிஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மையையும், வியாக்ரபாதரையும் வணங்க வேண்டும் என்பதுதான் ஐதிகம். பின்பு தலையெழுத்தை மாற்றும் பிரம்மபுரீஸ்வரரையும் அங்கு தினமும் சூட்சும வடிவாக சிவ பூஜை செய்யும் பதஞ்சலி முனிவரின் அதிஷ்டானத்தையும் வழிபட வேண்டும் என்பது நெறிமுறை.

கலியுகத்தில் நம் தலை எழுத்தை மாற்ற சிவனருள் வேண்டும். சிவனருள், அவரின் அடியார்களாக விளங்கிய மகான்களை முனிவர்களைத் தொழுவதன் மூலம் எளிதில் கிடைக்கும். அப்படியான முனிவர்கள் இருவரின் வாசஸ்தலமாக விளங்கும் திருப்பட்டூருக்குச் சென்று நம் வினைகள் நீங்கப் பெறுவோம்.

பால் தீர்த்தங்கள்!

சும்பால் அபிஷேகத்தால் தெய்வங்கள் மகிழ்கின்றன. பல திருத்தலங்களில் பாற்கடல், பாற்கிணறு, பாற்குளம், பாற்சுனை ஆகிய பெயர்களில் தீர்த்தங்கள் உள்ளன. காமதேனு, கபிலா ஆகிய தெய்வப் பசுக்கள் தம்மிடமிருந்து பெருகிய பாலால் தீர்த்தங்களை அமைத்தன என்று தல புராணங்கள் சொல்கின்றன. சிதம்பரம் அருகிலுள்ள திருக்கழிப்பாலையில் உள்ள தீர்த்தக்குளத்தைப் பால் தீர்த்தக்குளம் என்கிறார்கள். திருக்குருகாவூர் வெள்விடைநாதர் ஆலயத்தில், தை அமாவாசை அன்று சுவாமி தீர்த்தம் கொடுக்கும்போது, கிணற்று நீர் பால் போல் வெண்ணிறம் அடையுமாம்!