Published:Updated:

காசி விசாலாட்சிக்குத் தனிச் சந்நிதி!

அருள்மிகு காசிவிஸ்வநாதர்
பிரீமியம் ஸ்டோரி
News
அருள்மிகு காசிவிஸ்வநாதர்

திருப்பணியில் பங்கேற்போம்!

காசியில் அருள்புரியும் ஐயன் விசுவநாதர் மற்றும் பல தலங்களிலும் ‘காசி விசுவநாதர்’ என்ற திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளார். அதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது?

அந்தக் காலம், பக்தர்கள் பலரும் நடைப்பயணமாகவே காசி யாத்திரையை மேற்கொண்ட காலம். எவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டாலும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் ஒன்றான காசி யாத்திரையை பலரும் சிரத்தையுடன் மேற்கொண்டனர்.

அந்தப் பக்தர்களின் மனத்தில் உறுதி இருந்தால்தான் தொய்வின்றி யாத்திரையை மேற்கொள்ள முடியும். மனஉறுதி மாறாதிருக்க சிந்தையில் காசி விசுவநாதர் பற்றிய சிந்தனையே மேலோங்கி இருக்கவேண்டும். அதற்காகவே பல இடங்களில் ஆலயங்களை நிர்மாணித்து, அந்த ஆலயங்களில் ஐயனை காசி விசுவநாதர் என்ற பெயரில் எழுந்தருளச் செய்து நித்திய பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

அருள்மிகு காசிவிஸ்வநாதர்
அருள்மிகு காசிவிஸ்வநாதர்

அவற்றில், காலப்போக்கில் சிதிலமடைந்து மண்மூடிப் போன ஆலயங்களில் ஒன்றுதான் செங்கல்பட்டு மாவட்டம் எச்சூர் என்ற ஊரில் உள்ள காசி விசுவநாதர் ஆலயம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த ஊரைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கனவில் சிவனார் தோன்றி உத்தரவிட்டதன் பேரில், ஊர்மக்கள் சிறுவன் குறிப்பிட்ட இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது ஐயனின் லிங்கத் திருமேனி கிடைத்தது. பின்னர் ஊர் மக்கள் ஐயனுக்கு ஆலயம் நிர்மாணிக்க ஒரு கமிட்டியை ஏற்படுத்தி திருப்பணிகளைத் தொடங்கினர்.

இது பற்றி 20.6.17 சக்திவிகடன் இதழில் ‘ஆலயம் தேடுவோம்’ பகுதியில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தொடர்ந்து, சக்தி விகடன் வாசகர்கள் மற்றும் சிவனடியார்களின் பொருளுதவியுடன் எச்சூர் அருள்மிகு காசிவிசுவநாதருக்கு ஆலயம் எழுப்பப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனால், சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பி விட்டால் மட்டும் போதுமா? அம்பிகையும் சந்நிதி கொண்டால்தானே அந்த ஆலயம் பரிபூரணத்துவம் அடையும்? ஐயனிடம் நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேற, அம்பிகையின் அருள் மிக அவசியம் அல்லவா?!

இதை உணர்ந்த திருப்பணிக் கமிட்டியினர், காசியில் இருப்பதைப் போலவே காசி விசாலாட்சி என்ற திருப்பெயரில் அம்பிகையை தனிச் சந்நிதியில் பிரதிஷ்டை செய்ய விரும்பி, திருப்பணியைத் தொடங்கி இருக்கின்றனர்.

காசி விசாலாட்சிக்குத் தனிச் சந்நிதி!

மேலும், காசி அன்னபூரணியின் திருப் பெயரில் ஓர் அன்னதானக் கூடமும் கட்டி, கிராமத்தில் உள்ள ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யவும் தீர்மானித்து உள்ளனர். ஐயனின் திருக்கோயிலில் அமையவிருக்கும் அம்பிகையின் சந்நிதிக்குப் பொருளுதவி செய்தால், திருமணம் கூடி வரும்; தம்பதி ஒற்றுமை சிறக்கும்; நம் சந்ததியினர் வாழ்வும் செழிக்கும் என்கின்றன ஞானநூல்கள்.

நாமும் அம்பிகையின் சந்நிதித் திருப்பணியில் பங்கேற்போம்; அந்தப் பணி முழுமைபெற, நம்மால் இயன்ற பொருளுதவி செய்வோம்; அம்பிகையின் அருளைப் பெறுவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் கவனத்துக்கு:

தலம் : எச்சூர்

சுவாமி: அருள்மிகு காசிவிஸ்வநாதர்

அமைவிடம்: செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் சாலையில், செங்கல்பட்டில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து 108-பி என்ற எண்ணுள்ள பேருந்து எச்சூர் வழியாகச் செல்கிறது.

நன்கொடை அனுப்பவேண்டிய முகவரி:

A/C Name:

SRI KASIVISHWANATHAR THIRUKOVIL

City Union Bank

A/C:NO:510909010062698

IFSC CODE:CIUB0000187

CHENGALPET BRANCH.

தொடர்புக்கு: மணிகண்டன் (077083 33383)