இந்த லாக்டௌன் நாள்களிலும் அதிகாலையில் எழுந்து வழக்கம்போல குளித்து அன்றாட அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு கிளம்பிவிடுவார் முத்துக்குமார சிவாசார்யர். அதிலும் அன்று சதுர்த்தி. இதுவே வழக்கமான காலமாக இருந்தால் இந்நேரம் பக்தர்கள் வருகையால் களைகட்டியிருக்கும் கோயில்.

கூடுவாஞ்சேரியில் ரயில் ஏற வரும் பெரும்பாலானவர்கள் ஒரு கணம் உள்ளே வந்து மாமரத்து விநாயகரை வணங்கிவிட்டே ரயில் நிலையத்துக்குள் நுழைவார்கள். ஒருமுறை அவரை தரிசித்தவர்கள் மறுமுறை காந்தத்தை நோக்கி ஓடிவரும் இரும்பைப்போல மீண்டும் மீண்டும் வந்து போவார்கள்.

விநாயகர் அகவலை முணுமுணுத்தபடி நடந்தார் முத்துக்குமார சிவாசார்யர். அவருடைய நினைவுகள் பின்னோக்கிப் போயின.

20 வயதுகூட ஆகவில்லை. பெருங்களத்தூரில் அக்கா வீட்டில் வாசம். வேதங்களும் சுவாமி அலங்கார வித்தைகளும் கற்று தேஜஸ்வியாக இருந்த காலம். கூடுவாஞ்சேரியில் உள்ள விநாயகர் ஆலயத்துக்குப் பூஜை செய்ய ஆள் தேவை என்று யாரோ சொல்ல ஒருநாள் மாமரத்தடி விநாயகர் கோயிலுக்கு வந்தார்.

பார்த்தவுடனேயே அப்படி ஓர் ஆகர்ஷிக்கும் தோற்றம். ஒளியின்றியிருந்த அந்தச் சந்நிதியில் ஒரு தீபத்தை ஏற்றினார். அந்த வெளிச்சத்தில் விநாயகர் அவரை நோக்கிச் சிரிப்பதுபோல இருக்க, உடம்பெல்லாம் சிலிர்த்துப்போனது. அன்று அவர் ஏற்றிய தீபம், அந்த ஆலயத்திலும் சிவாசார்யரின் சொந்த வாழ்விலும் பிரகாச மான ஒளியைக் கொண்டுவந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

கோயில், அதற்கு எதிரிலேயே குடியிருக்கும் சிவபக்தர் ஒருவரின் பொறுப்பில் இருந்தது. நல்லமுறையில் பூஜை செய்து பராமரிக்கும் நபரைத் தேடிக்கொண்டிருந்த அவருக்கு முத்துக்குமாரரின் தோற்றமே திருப்தி தந்தது. முத்துக்குமாரரை அமரவைத்து அந்த ஸ்தலம் குறித்து சொல்லத் தொடங்கினார்.

“அம்பி, இந்த ஊருக்குப் பெயர் என்ன தெரியுமா...”

“ஓ தெரியுமே... கூடுவாஞ்சேரி...”

“சரியா சொன்னே, நந்திதேவர் சிவபெருமானை வழிபட்ட தலம் இது. அதனால் இதற்கு நந்திகேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. இங்கே பூந்தோட்டங்கள் அமைத்து அதில் கிடைக்கும் பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து ஆலயங்களுக்கு அனுப்புவாங்க. அதனால இந்த இடத்துக்குப் பூ இடுவாஞ்சேரின்னும் பெயர் உண்டு. பின்பு காலப்போக்குல மக்கள் கூடி வாழ்ந்ததால கூடுவாஞ்சேரின்னு ஆகிப்போச்சு. இதோ... இந்தப் பகுதியெல்லாம் அந்தக் காலத்துல மாந்தோப்பா இருந்தது. இன்னிக்கு எல்லாம் அழிஞ்சுப்போச்சு. ஆனா, அதுல தப்பின மாமரம்தான் இதோ இந்தப் பிள்ளையார் இருக்கிற மரம். அது இன்னும் இருக்கிறதுக்கும் அந்தப் பிள்ளையார்தான் காரணம்.’’

பெரியவர் கோயிலின் திருக்கதையை விவரிக்க, சிரத்தையோடு கேட்டுக் கொண்டிருந்தார் முத்துக்குமாரர்.

``சுவாமி சுயம்புவா எழுந்தருளணும்னு முடிவு பண்ணிட்டா அவர் எங்கே நினைக்கிறாரோ அங்க எழுந்தருள்வார். சுயம்பு மூர்த்தங்கள் யாருக்குக் கொடுப்பினை இருக்கோ அவங்க கண்ணுலதான் படும். அவங்கதான் அதை இந்த உலகத்துக்கு எடுத்துச் சொல்வாங்க. அப்படி இந்த மாமரத்துப் பிள்ளையாரைக் கண்டு ஊருக்கே சொன்னது ஒரு பாட்டி. இந்த ஊரில் சுண்டல் வித்துப் பிழைக்கும் ஒரு பாட்டி இருந்தாங்க. ரயிலடி, பஸ் ஸ்டாண்டுன்னு ஊர் பூராவும் அலைஞ்சு திரிஞ்சு சுண்டல் விப்பாங்க. ஒருநாள் சுண்டல் விக்கவேயில்லை. சோர்வா இந்த மரத்தடில வந்து உட்கார்ந்து, ‘பிள்ளையாரப்பா...’ன்னு சொல்லிப் புலம்பிக்கிட்டிருக்க, ஒவ்வொருத்தரா வந்து சுண்டல் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க.

நாள் பூராவும் அலைஞ்சு திரிஞ்சு விக்காத சுண்டல் இங்கே வந்து உட்கார்ந்த சில மணி நேரத்துல வித்துப்போச்சு. பாட்டிக்கு உற்சாகம் தாங்கல. மறுநாளும் அதே மரத்தடிக்கு வந்து உட்கார்ந்துச்சு. அன்னிக்கும் சில மணி நேரத்துல சுண்டல் வித்துப்போச்சு. தினமும் இந்த அதிசயம் நடக்க, பாட்டிக்கு இந்த மரத்தில்தான் ஏதோ விசேஷம் இருக்குன்னு தோணிச்சு. பாட்டி கிட்டப்போய் மரத்தை மேலிருந்து கீழேவரைக்கும் உற்றுப்பார்த்தா.

மரத்தோட அடிப்பகுதில வேர்முடிச்சிகள் எல்லாம் சேர்ந்து, பார்க்க ஒரு பிள்ளையார் போலவே இருந்துச்சி. கண்ணுதான் மயக்குதுன்னு நினைச்சுகிட்டு கண்ணைக் கசக்கிட்டுப் பார்த்தாள் பாட்டி. தும்பிக்கையான் அச்சு அசலா அமர்ந்திருக்கிறது மாதிரியான தோற்றம் தத்ரூபமா இருந்துச்சு. அவ்ளோதான் பாட்டி அங்கேயே விழுந்து கும்பிட்டுட்டு மரத்தடி மண்ணை நெத்தியில இட்டுக்கிட்டு, ஊருக்குள்ள ஓடிப்போய் எல்லோரையும் கூட்டிகிட்டு வந்து காட்டினா. எல்லோரும் அப்படியே அசந்துபோய்ட்டாங்க. உடனே அந்த விநாயகருக்கு சந்தனம் குங்குமமிட்டு மலர்சாத்தி வழிபட்டாங்க. சாமியிருக்கும் இடம் தெரிஞ்சு ஜனங்க தினமும் வந்து வழிபட ஆரம்பிச்சாங்க.

தம்பி... விளையாட்டு இல்லை... இந்த சுவாமியைத் தேடிவந்து ஞானிகளும் மகான்களும் தரிசனம் பண்ணியிருக்காங்க. இங்கே சின்னதா ஒரு கோயில் கட்டலாம்னு நினைச்சப்போ திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இந்த இடத்துக்கு வந்தார். அவரே முன்னின்று திருப்பணிகளைத் தொடங்கி வெச்சார்.

தருமை ஆதின குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் இங்கே வந்து வழிபட்டிருக்கிறார். வேதாந்த மகரிஷி இங்கே வந்து அமர்ந்து தியானம் செய்து, இந்த இடத்தின் சாந்நித்தியத்தைப் புகழ்ந்து பேசினார். இந்த இடத்தின் மகிமைகளை நீ சீக்கிரம் புரிஞ்சுக்குவ...’’ என்று கூறி முடித்த பெரியவர், முத்துக்குமாரரிடம் கேட்டார்... ``என்றிலிருந்து பூஜையைத் தொடங்குகிறாய்...”

“நான்தான் சற்றுமுன்னர் தொடங்கிட் டேனே...” என்று பதில் சொல்லிவிட்டு விநாயகர் சந்நிதிக்குச் வழிபாடுகளைத் தொடர்ந்தார்.

அன்றிலிருந்து 31 ஆண்டுகள் ஓடி விட்டன. நாள் தவறாமல் மாமரத்து விநாயகருக்கு சேவை செய்வதில் முத்துக்குமாரருக்கு அவ்வளவு பிரியம். அவர் இந்த ஆலயத்துக்கு வந்து சேர்ந்த போது விநாயகர் சந்நிதி மட்டுமே இருந்தது. இப்போது சிவன், லலிதாம்பிகை, ராசி மண்டல மேதா தட்சிணமூர்த்தி, முத்து மாரியம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியன், அஷ்டபுஜ துர்கை, ஆஞ்சநேயர், துணைவியரோடும் வாகனங்களோடும் கூடிய நவகிரகங்கள் மற்றும் ராமலிங்க சுவாமிகள் எனப் பல்வேறு சந்நிதிகளோடு பெரும் வளாகமாக வளர்ந்திருக்கிறது ஆலயம்.

முதலில் மாமரத்தின் வேர்ப்பகுதியில் தான் விநாயகர் முகவடிவம் இருந்தது. அதைக் கண்டுதான் அங்கு ஒரு விக்கிரகமும் வைத்து வழிபாட்டை ஆரம்பித்தனர். ஆனால், மரம் வளர வளர விநாயகர் முகவடிவம் மாறிவிட்டது. சரி, எப்படியானாலும் விநாயகர் இந்த மரத்தில்தானே உறைகிறார் என்று மரத்தின் மேல் பகுதி ஒன்றில் சந்தன, குங்குமம் இட்டு வந்தார் முத்துக்குமாரர்.

சில நாள்களில் அந்த இடத்திலே விநாயகருக்குத் தந்தம், துதிக்கையுடனான காப்புபோல செய்து வைக்க வேண்டும் என்று தோன்றியது. இந்த எண்ணம் தோன்றிய நாளுக்கு மறுநாள் வந்து பார்த்தபோது, அங்கே விநாயகரின் துதிக்கை போன்ற அமைப்பு தோன்றியிருந்தது. அடுத்தடுத்த நாள்களில் காதுகள் போன்ற அமைப்பும் தந்தம் போன்ற வடிவமும் மரத்திலேயே உருவாகி... சாட்சாத் விநாயகரே அங்கு உருவாகியிருந்தார். முத்துக்குமாரருக்கு உடல் சிலிர்த்துவிட்டது. விநாயகப் பெருமான் பிரத்யட்சமாக அங்கு வாசம் செய்கிறார் என்பதற்கு இதைவிட என்ன சாட்சி தேவை.

மாமரம் நன்கு செழித்து வளர்ந்துநிற்கிறது. சுவாமியின் சந்நிதியில் மரம் செல்வதற்கு மட்டும் வழிவிட்டு அறை எழுப்பியிருக்கிறார்கள். கர்ப்பக் கிருகத்துக்கு வெளியே மாம்பழங்கள் காய்த்துத் தொங்கும். ஆனால், சந்நிதிக்குள் வெளிச்சம் படாததால் அங்கு பூவோ காயோ காய்க்காது என்று கருதினார்களாம். ஆனால், மாமரத்து விநாயகரின் பார்வைபட்டால் பூக்காத மரமும் பூக்கும் இல்லையா... அதுதானே இந்த சந்நிதியின் விசேஷம்.

ஆண்களும் பெண்களும் வந்து தங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பூக்க வேண்டும் என்று வேண்டிச்செல்கிறார்கள்... அவர்களுக்கெல்லாம் உடனே வேண்டுதல் நிறைவேறிவிடுகிறதாம். குறிப்பாக, குழந்தை பாக்கியம் வேண்டிவரும் பெண்களைக் காக்க வைக்காமல் கருணையோடு அவர்களுக்குள் மழலைகளைப் பூக்க வைப்பவர் அல்லவா... அப்படிப்பட்டவரின் பார்வையில் இருக்கும் கிளையில் பூ இல்லாமல் கனியில்லாமல் இருப்பது எப்படி..!

இத்தனை ஆண்டுகளிலும் ஒரே ஓர் ஆவணி மாதத்தில் அந்தக் கிளையில் அதிசயமாய் ஒரு காய் காய்த்தது. எப்போது பூத்தது... எப்போது வடுவானது... எப்போது காயானது... எப்படிக் கவனத்துக்கு வராமல் போனது என்று முத்துக்குமாரர் உள்ளிட்ட அனைவரும் அதிசயித்தார்கள். சரியாக விநாயகர் சதுர்த்தி நாளில் அந்தப் பழம் நன்கு பழுத்துத் தொங்கியது. கர்ப்பக்கிருகம் முழுவதும் அதன் வாசனை நிரம்பி வழிந்தது.

அதற்கு ஓரிரு நாள்கள் முன்புதான் காஞ்சிப் பெரியவர் ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆலயத்துக்கு வந்து இந்த அதிசயத்தைக் கண்டார். தன் கரங்களாலேயே சுவாமிக்கு ஆரத்தி காட்டி நீண்ட நேரம் சுவாமியை வணங்கி நின்றார். அவர் மனத்தில் மாமரத்து விநாயகர் ஸ்திரமாய் அமர்ந்து கொண்டார் என்பதற்கு அதுதான் அடையாளம்.

இங்கு வரும் யார்தான் விநாயகரின் கடைக்கண் பார்வையால் கவரப்பட மாட்டார்கள்... இங்குவந்து கச்சேரி செய்த மதுரை சோமு, பித்துக்குளி முருகதாஸ், சிவசிதம்பரம் என யாரானாலும் விநாயகரை தரிசித்ததும் நெகிழ்ந்து மனம் உருகிப் பாடுவார்கள்.

மாமரத்து விநாயகர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர். இவ்வாறு அமர்ந்திருக்கும் விநாயக அம்சத்தை அகோர கணநாத சொரூபம் என்பார்கள். முத்துக்குமார சிவாசார்யருக்கு ஒரு நாள் இந்த விஷயம் மனத்தில் தோன்றியது. உடனே அதற்குரிய ஹோமத்தைச் செய்தால் என்ன என்று யோசித்தார். அகோர கணநாத மூர்த்திக்குரிய மூல மந்திரத்தைச் சொல்லி செய்யும் அந்த ஹோமத்தைச் சதுர்த்தியில் செய்வது மிகுந்த பலன் தரும்.

முத்துக்குமாரர் ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் அகோர கணநாத ஹோமத்தை அங்கு செய்ய ஏற்பாடு செய்தார். இன்றுவரை அது ஒவ்வொரு சதுர்த்திக்கும் தடையின்றி நடக்கிறது. அப்படியானால் அது மாமரத்துப் பிள்ளையாருக்குப் பிரியம் என்றுதானே பொருள்.

இந்த ஹோமத்தில் ஒரு சூட்சமம் உண்டு. இதில் கலந்துகொண்டால் கிடைக்கும் பலன் அமோகம். எதிரிகள் தொல்லைகள் தீரும். நோய்கள் விலகும். இங்கு சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு சந்தனம் சாத்தும் வழக்கம் உண்டு. அப்படி சாத்தப்பட்ட சந்தனம் சகல வியாதிகளையும் தீர்க்கும் அருமருந்து என்பது ஐதிகம்.மருத்துவர்களே அஞ்சும் கொடிய நோயோடு இந்தச் சந்நிதிக்கு வந்து வணங்கி, சந்தன பிரசாதம் பெற்றுச் சென்று அதன் வல்லமையால் குணம்பெற்றோர் அநேகர் என்கின்றனர் பக்தர்கள்.

ஆலயத்தின் அனைத்து பணிகளையும் உறுதுணையாக இருந்து செய்து வருகிறார் கோயிலின் அறங்காவலர் டி.சீனிவாசன். நாடி வரும் பக்தர்களின் குறைகளை இந்த மாமரத்துப் பிள்ளையார் ஓடிவந்து தீர்ப்பதால், நாள்தோறும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

முத்துக்குமார சிவாசார்யர் பழைய நினைவுகளை அசைபோட்டபடியே ஆலயத்துக்கு வந்து சந்நிதி யைத் தூய்மை செய்ய ஆரம்பித்தார். தற்போதைய ஊரடங்கால் பக்தர்கள் யாருமில்லை. ஆனாலும் ஒரு குறைவும் இன்றி நித்திய ஆராதனங்களைச் செய்து முடித்து தீபாராதனை செய்தார்.

“விநாயகப்பெருமானே, இப்போது உலகையே ஆட்டுவிக்கும் இந்த நோய் விரைவில் தீர வேண்டும். மீண்டும் மக்கள் தம் அன்றாடத்துக்குத் திரும்ப வேண்டும்” என்று மனமார வேண்டிக்கொண்டார். அப்போது விநாயகர் கரத்தில் இருந்த மலர் ஒன்று விழுந்து நற்சகுனம் ஒன்றை அவருக்குக் காட்டிக் கொடுத்தது!

ராசி மண்டல தட்சிணாமூர்த்தி!

இங்கு கோயில்கொண்டுள்ள ஈஸ்வரருக்கு மாமரத்து ஈஸ்வரர் என்று பெயர். இங்கு அருளும் அன்னை லலிதாம்பிகைக்குச் சந்நிதி எழுப்பும் முன்பாக லட்சம் முறை லலிதா சகஸ்ரநாமம் படித்து அதன்பின் பிரதிஷ்டை செய்தனராம். இங்கு அருளும் தட்சிணாமூர்த்தி 12 ராசிகளும் மலைபோல் அமைய அதன் மேல் அமர்ந்து ராசி மண்டல தட்சிணாமூர்த்தியாக அருள் செய்கிறார். எனவே அனைத்து ராசிக்காரர்களும் வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கி தோஷம் நீங்கப் பெறுகிறார்கள்.

பட்டீஸ்வரம் போலவே இங்கு துர்கை எட்டு கரங்களோடு சிம்ம வாஹினியாக அருள்பாலிக்கிறாள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்கையம்மனின் சந்நிதி களைகட்டும். பிணிகளைப் போக்கும் மருந்து மலையோடு அனுமனும் தனிச் சந்நிதிகொண்டு அருள்புரிகிறார். இங்கு பிரதி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையும் லலிதா சகஸ்ரநாம பாராயணமும் நடைபெறும். நவராத்திரி தினங்களில் தேவி மகாத்மிய பாராயணமும் இறுதி நாளில் மகாசண்டி ஹோமமும் நடைபெறும். திருமண வரம் வேண்டுவோர் இங்கு வந்து வேண்டிக்கொள்ள உடனே அம்பிகை அருள்கிறாள் என்கின்றனர் பக்தர்கள்.

லிங்க வடிவில் அருளும் தர்மசாஸ்தா

இங்கு ஐயப்பசுவாமி 18 படிகளோடு லிங்கரூபம் கொண்டு காட்சி தருகிறார். ஐயப்பனுக்கு உகந்த உத்திர நட்சத்திர தினத்தில் ஒவ்வொரு மாதமும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதம் 1-ம் தேதி முதல் தை 1-ம் தேதி வரை மண்டல பூஜைகளும் மகர ஜோதி பூஜைகளும் சிறப்பாக நடைபெறும். அந்தக் காலகட்டத்தில் லட்சார்ச்சனை, அன்னதானம் விளக்கு பூஜை, பஜனை என்று ஆலயம் களைகட்டும். எனவே ஏராளமான பக்தர்கள் இந்த சந்நிதியில் இருமுடி கட்டிக்கொள்வதை பாக்கியமாகக் கருதுகிறார்கள். சித்திரை விசுக்கனி பூஜையும் ஐயப்பனுக்கு விமர்சையாக

எப்படிச் செல்வது?

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்தைத் தாண்டி அமைந்துள்ளது கூடுவாஞ்சேரி. சென்னை, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிலிருந்து பேருந்து வசதி உண்டு. கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே செல்லலாம். கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையம் அருகிலேயே அமைந்திருக் கிறது ஆலயம். தொடர்புக்கு: முத்துக்குமார சிவாசார்யர் (94441 03284).