சிவனார் ஐந்து வகை லிங்கத் திருமேனி களுடன் எழுந்தருளியுள்ள ஆலயம் இலுப்பைப்பட்டு நீலகண்டேஸ்வரர் ஆலயம். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகேயுள்ளது இலுப்பைப்பட்டு.

பஞ்சபாண்டவர்களைக் கொல்லத் துணிந்த துரியோதனன் இங்குள்ள தீர்த்தத்தில் விஷத்தைச் சேர்த்தான். அம்பிகை அவ்விஷத்தைத் தன் கையிலிருந்த அமுதத்தால் முறித்தாள். பிறகு அந்த நஞ்சை சிவபெருமான் உண்டார். அதனாலேயே இத்தலத்து இறைவன் நீலகண்டர் எனப்பெயர் பெற்றார்.

அமிர்தத்தைத் தன் கையில் வைத்திருந்த காரணத்தால் இறைவி அமிர்தகரவல்லி எனப் பெயர் பெற்றாள். இத்தலத்திற்கு மதூகவனம் என்றும் பெயர் உண்டு. மதூகம் என்றால் இலுப்பை, பட்டு என்றால் ஊர். ஒரு காலத்தில் இப்பகுதி இலுப்பை வனமாக இருந்ததாலும், இத்தலத்தின் விருட்சம் இலுப்பை மரமாக இருப்பதாலும் இவ்வூர் இலுப்பைப்பட்டு என்றழைக்கப்படுகிறது எனச் சொல்வர்.

இத்தலம் அருகே மண்ணியாறு ஓடுவதால் ‘பழமண்ணிப்படிக்கரை ‘ என்றும் பழங்காலத்தில் அழைத்தனர். சுந்தரரால் பாடல்பெற்ற திருத்தலம் இது. மேலும் இத்தலத்திலுள்ள முருகப் பெருமானைத் திருப்புகழில் அருணகிரிதாதர் பாடியுள்ளார். இத்தலத்திற்குரிய தலபுராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களால் பாடப்பட்டுள்ளது.

பாண்டவர்கள் காட்டில் வாழச் சென்றபொழுது அவர்கள் செய்த நல்வினைப் பயனால் உரோமச முனிவரைச் சந்தித்தனர். அவரின் திருவடிகளை வணங்கி, துரியோதனனால் பட்ட துன்பங்களை எல்லாம் சொல்லி அரற்றினர். அதற்கு முனிவர், `சிவபெருமான் திருவடிகளைத் தொழதால் பழுது நீங்கும். புனிதமான சோழ நாட்டில் மண்ணியாற்றின் கரையில் மதூகவனம் என்றொரு தலம் உள்ளது. இந்திரலோகம் பிரம்மலோகம் முதல் அனைத்து உலகங்களும் போற்றும்படி பொலிந்து விளங்குவது.

கயிலை, காசி, காளத்தி போன்ற பல தலங்கள் இருந்தாலும், சிவனார் உமையம்மையோடும் கணபதி, முருகப்பெருமானோடும் வீற்றிருந்து அருளும் அற்புதத் தலம் மதூகவனம்.

இத்தலத்தில் உதித்த புல் பூண்டு முதல் அனைத்து ஜீவராசிகளும் வாழ்வு முடிந்த பின் கயிலாயம் சென்று இன்புற்று இருக்கும் என்றால் இத்தலத்தின் பெருமையை நீங்கள் நன்கு உணரலாம்.

இத்தலத்தில் நீலகண்டேஸ்வரர் சந்நிதிக்கு எதிரில் பிரம்மதீர்த்தம் உள்ளது. அதில் நீராடி இறைவனை தரிசிப்பவர்கள், எல்லா சுகங்களையும் அனுபவித்து, நிறைவில் இறைவன் திருவடித் தாமரையில் கலப்பது உண்மை. சித்திரை மாதத்து பெளர்ணமி திதியில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் பெரும் பலன்களை பெறலாம். காசியில் நீராடினாலும் இத்தலத்தில் நீராடிப் பெறும் பலனுக்கு நிகராகாது. சிவபெருமான் ஐந்து வகையாய் அருளும் தலம் மதூகவனம். அங்கு சென்று வழிபட்டால் இழந்த நாட்டை மீண்டும் பெறுவீர்; ஆனந்தம் பெறுவீர்'' என்று நல்வழி காட்டியருளினார்.

அதன்படி இத்தலத்திற்கு வந்த பஞ்ச பாண்டவர்கள் பிரம்ம தீர்த்தத்தில் நீராடினர். அதன்பின் தருமன் அளவற்ற அன்போடு நீலகண்டேஸ்வரரை உளம் உருக வழிபட்டான். பீமன் மகதீஸ்வரரிடம் பிரார்த்தனை செய்தான்.

அர்ஜுனன் படிக்கரைநாதரை பூஜை செய்தான். நகுலன் பரமேஸ்வரர் திருவடிகளை அச்சம் ,வருத்தம் நீங்க நலமுடன் பூசித்தான். கலைகளில் வல்லவனான சகாதேவன்் முத்தீஸ்வரர் என்ற திருப்பெயரோடு உள்ள ஈசனை வணங்கினான். திரௌபதி வலம்புரி விநாயகரை வணங்கி அருள்பெற்றாள்.

அதன் விளைவாக தங்களின் துன்பத்தை வெல்லும் திடத்தையும் தைரியத்தையும் பெற்றனர். நிறைவில் மகிழ்ச்சி யான வாழ்வைப் பெற்றனர்; உரோமச முனிவருக்கு மனதார நன்றி கூறி வணங்கினர் என்கிறது தலவரலாறு.

மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த ஆலயம். கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றால் இடதுபுறம் தலமரம் இலுப்பை உள்ளது.

பிராகாரத்தில் பீமன், நகுலன் பூசித்த லிங்கங்களும், அடுத்து திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகரும், வலது புறம் அமிர்தகரவல்லி அம்பாள் சந்நிதியும் உள்ளன.

இடதுபுறம் சுப்ரமணியர், மகாலட்சுமி சந்நிதிகளும், அடுத்துச் சகாதேவன் வழிபட்ட லிங்கமும் உள்ளன. வலம் முடித்துப் படிகளேறி மேலே சென்றால் மூலவர் கருவறை. சுவாமி நீலகண்டேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இவருக்கு எதிரில் மட்டுமே நந்தி இருக்கிறது.

நீலகண்டேஸ்வரர், படிக்கரைநாதர் இருவருக்கும் அம்பிகை சந்நிதிகள் உள்ளன. பீமன் வழிபட்ட சிவன் 16 பட்டைகளுடன் சோடஷ லிங்கமாகக் காட்சி தருகிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சகாதேவன் வழிபட்ட முக்தீஸ்வரர் தெற்கு நோக்கி இருக்கிறார். சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

வடக்குப் பிராகாரத்தில் முருகர் சந்நிதி உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தன் தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். உற்சவர் வில்லேந்திய வடிவில் எழுந்தருளியுள்ளார்.

கோயிலின் கணபதி சுப்ரமண்ய குருக்களிடம் பேசினோம்.

``பஞ்ச பாண்டவர்களுக்கு வெற்றிகளைத் தந்து, அவர்கள் இழந்த நாடு நகரங்களை மீண்டும் பெறுவதற்கு அருள்பாலித்த தலம் இது. எனவே, இழந்த பொருள்களை செல்வங்களை மீண்டும் பெற இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர். மேலும் 16 வகைச் செல்வங்களைப் பெறவும், தீராத நோய்கள் தீரவும், நலமான வாழ்வு பெறவும் இக்கோயிலின் நீலகண்டேஸ்வரர் அருள்பாலிக்கிறார் என்பது நிதர்சனம்” என்றார்.

ஆம்! நீங்களும் ஒருமுறை இலுப்பைப்பட்டு ஆலயம் சென்று ஐந்து லிங்கங்களையும் தரிசித்து வாருங்கள்; இன்ப மயமான வாழ்வை வரமாகப் பெறுவீர்கள்!

எப்படிச் செல்வது ?: மயிலாடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்தில் ஏறி, மணல்மேடு என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்தால் இலுப்பைப்பட்டு தலத்தை அடையலாம்.