Published:Updated:

பிள்ளை வரம் அருளும் ஸ்ரீபசுங்கிளி சாஸ்தா!

 ஸ்ரீபசுங்கிளி சாஸ்தா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீபசுங்கிளி சாஸ்தா

கோபாலன் குடிகொண்ட கோபாலசமுத்திரம்

பிள்ளை வரம் அருளும் ஸ்ரீபசுங்கிளி சாஸ்தா!

கோபாலன் குடிகொண்ட கோபாலசமுத்திரம்

Published:Updated:
 ஸ்ரீபசுங்கிளி சாஸ்தா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீபசுங்கிளி சாஸ்தா

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் `சமுத்திரம்’ என்ற பெயரில் பல ஊர்கள் சிறப்புடன் விளங்குகின்றன. அம்பா சமுத்திரம், ரவண சமுத்திரம், வீரா சமுத்திரம், ரெங்க சமுத்திரம், தளபதி சமுத்திரம், வால சமுத்திரம், கோபால சமுத்திரம், வடலை சமுத்திரம் (பத்மனேரி), ரத்னாராக சமுத்திரம் (திருச்செந்தூர்) ஆகிய ஊர்கள் `நவ சமுத்திரங்கள்’ என்ற சிறப்புடன் திகழ்கின்றன.

இவற்றில் கோபாலசமுத்திரம் தாமிரபரணிக் கரையில் திகழும் அற்புதமான ஊராகும். இதன் எல்லையில்தான் பச்சையாறு தாமிர பரணியுடன் வந்து இணைகிறது. இவ்வூரைச் சுற்றிலும் உள்ள குளங்கள் யாவும் சமுத்திரம் போல் காட்சியளிப்பதால், கோபால சமுத்திரம் என்று பெயர்பெற்றதாம்.

அம்பாள் குடிகொண்ட இடம் அம்பாள் சமுத்திரம். அதுவே மருவி அம்பாசமுத்திரம் ஆயிற்று; அதேபோல், கோபாலன் குடிகொண்ட சமுத்திரம் `கோபால சமுத்திரம்' ஆயிற்று என்று சொல்கிறார்கள், இப்பகுதி மக்கள். இதையொட்டி இவ்வூரை அண்ணன் சமுத்திரம் என்பார்கள்; அம்பாசமுத்திரத்தை தங்கை சமுத்திரம் எனச் சொல் கிறார்கள்!

 ஸ்ரீபசுங்கிளி சாஸ்தா
ஸ்ரீபசுங்கிளி சாஸ்தா

இத்தகு சிறப்புகளுடன் திகழும் இந்த ஊரில்தான் மிக அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார், அருள்மிகு பசுங்கிளி சாஸ்தா. பசுமையான கிளிகள் திகழும் பூஞ்சோலையில் அமர்ந்தருள்வதால், சாஸ்தாவுக்கு இப்படியொரு திருப்பெயர் அமைந்ததாம்.

முற்காலத்திலேயே வளம் கொழிக்கும் பூமியாய்த் திகழ்ந்தது இந்தப் பகுதி. தன் எல்லைக்குட்பட்ட அனைத்து விவசாய நிலங்களுக்கும் மக்களுக்கும் இந்த சாஸ்தாவே காவல்தெய்வமாய்த் திகழ்ந்தார். இங்குள்ள ஒரு தோட்டத்துக்குச் சொந்தக்காரர் பட்டாணி. இவர் தமது தோட்டத்தில் கரும்பு வளர்த்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீதளவாய் மாடன்-மாடத்தி
ஸ்ரீதளவாய் மாடன்-மாடத்தி

இந்த நிலையில், பட்டாணி வீட்டுக்குத் திரும்பியதும் பசு ஒன்று தோட்டத்துக்குள் நுழைந்து மேய்வது வாடிக்கையாக இருந்தது. ஒவ்வொரு நாளும் தனது தோட்டத்தில் கரும்புப் பயிர் நாசமாகிக் கிடப்பதைக் கண்டு வருந்தினார் பட்டாணி. காரணம் என்ன என்பதை அறிய விளைந்தார்.

ஒருநாள் பசுமாடுதான் காரணம் என்பதை அறிந்து கோபம் கொண்டார். பசுவை வெட்ட அரிவாளுடன் பாய்ந்தார். பசு ஓட்டம் எடுத்தது. பட்டாணியும் விடவில்லை; விரட்டினார். தப்பித்து ஓடிய பசுமாடு, சாஸ்தாவின் எல்லைக்குள் வந்து அடைக்கலம் புகுந்தது. `என்னைக் காப்பாற்றும் ஐயனே’ என்று கதறியது.

பசுவை விரட்டிவந்த பட்டாணி, அதைக் கொல்லத் துணிந்தார். அப்போது, மிக தத்ரூப மாகக் காட்சி தந்தார் சாஸ்தா.

பிள்ளை வரம் அருளும் ஸ்ரீபசுங்கிளி சாஸ்தா!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 பரிவார தெய்வங்கள்
பரிவார தெய்வங்கள்

`‘பசுவை விட்டுவிடு; அது வாயில்லாத ஜீவன்...’’ என்று ஆணையிட்டார். ஆனால் பட்டாணி கேட்கவில்லை. ``இல்லை... என் விளைநிலத்தைப் பாழ்படுத்திய பசுவை விடுவதாக இல்லை...’’ என்றபடியே பசுவை வெட்ட முனைந்தார். அப்போது அவரைத் தடுத்த சாஸ்தா, ``பசுவை வெட்டுவதற்குப் பதிலாக என் கரங்களை வெட்டிக்கொள்’’ என்று தன் கரங்களை நீட்டினார்.

ஆத்திரம் கண்ணை மறைத்திருந்த நிலையில், என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் ஐயனின் கரங்களை வெட்டி விட்டார் பட்டாணி. அந்தக் கணம்... உலகமே ஸ்தம்பித்தது. ஐம்பூதங்களும் தங்களின் இயக்கத்தை நிறுத்தின. பட்டாணி, தான் செய்த தவறை உணர்ந்து நடுங்கினார்.

`பசுவைப் பழிவாங்கும் எண்ணத்தில் நம்மைக் காக்கும் ஐயனின் கரங்களையா துண்டித்தோம்...’ என்று அதிர்ந்தார்; அப்படியே மயங்கிச் சரிந்தார். அக்கணமே அவரின் உயிர் பிரிந்தது.

விஷயம் அறிந்து பட்டாணியின் மனைவி மக்கள் ஓடி வந்தனர். `‘ஐயனே... அவர் செய்தது தவறுதான். ஆனாலும் அவரின் உயிரை வாங்க வேண்டுமா. எங்களைக் காக்கும் தெய்வமாகிய நீங்களே இப்படிச் செய்யலாமா’’ என அழுது புலம்பினர். சாஸ்தா அவர்களை ஆறுதல்படுத்தினார்.

பரிவார தெய்வங்கள்
பரிவார தெய்வங்கள்

`‘வருந்தாதீர்கள். பட்டாணி தண்டனை ஏதும் பெறவில்லை. அவனுக்கு முக்தி காலம் வந்துவிட்டது. அவனை எனது தென் பாகத்தில் அமரச்செய்கிறேன். என்னை வணங்க வரும் பக்தர்கள் அனைவரும் அவனையும் வணங்கிச் செல்வார்கள்’’ என்று அருள் புரிந்தார்.

தொடர்ந்து, சாஸ்தாவின் அருளால் உயிர்பிழைத்து எழுந்த பட்டாணி, தன் குடும்பத்தாருக்குக் காட்சி கொடுத்துவிட்டு, சாஸ்தாவின் தென்பாகத்தில் அடங்கினார். தற்போதும் அவரின் பீடம் வணங்கப்பட்டு வருகிறது.

பசுவைக் காப்பாற்றிய சாஸ்தாவை அங்கேயே எழுந்தருளச் செய்து வழிபட்டனர் ஊர்மக்கள். பின்னர் கல்மண்டபம் எழுப்பி னர். தொடர்ந்து அவரைச் சுற்றிலும் பரிவார தெய்வங்களை எழுந்தருளச் செய்தனர்.

பிள்ளை வரம் அருளும் ஸ்ரீபசுங்கிளி சாஸ்தா!

குழந்தை வரம் வேண்டுவோர், இந்த சாஸ்தாவைத் தேடி வந்து வழிபட்டு அருள் பெற்றுச் செல்கின்றனர். தீராத பிணிகள் தீர அவரின் சந்நிதிக்கு வந்து சரண் புகும் பக்தர்களும் ஏராளம். மேலும் அரசு வேலை மற்றும் திருமண வரம் பெறவும் இங்கு வந்து சாஸ்தாவை வழிபட்டு பலன் அடைகின்றனர்.

இன்றைக்கும் இந்தப் பகுதியில் இவருக்கே முதல் மரியாதை. எந்தவொரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் சாஸ்தாவை வணங்கிய

பிறகே, தொடங்கப்படுகிறது. அந்தக் காலம் முதல், சாஸ்தாவின் அருளால் நன்மைகள் அடைந்த பக்தர்கள் பலரும் நன்றிக்கடனாக நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளார்கள்.

பலரும் தங்கள் நிலங்களைக் கோயிலுக்கு அளித்துள்ளார்கள். நம்பிநேரி குளம், வாகைக்குளம், வேலம்பட்டையன் குளம், கொத்தன்குளம் ஆகியவை மக்களால் சாஸ்தா நற்பணிக்காக உருவாக்கப்பட்ட குளங்கள் என்கிறார்கள், இப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோயில் குளங்களை அரசின் வசம் கையகப்படுத்த ஆங்கிலேய அதிகாரி ஒருவர் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். அவ்வகையில் கோபாலசமுத்திரத்துக்கு வந்தவர், அங்குள்ள குளங்களையும் ஆய்வு செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் அவரின் மனைவிக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. மனைவி யைப் பார்க்கச் சென்றவர் மீண்டும் வந்தார்; சாஸ்தாவின் சந்நிதிக்குச் சென்றார். கையகப்படுத்த நினைத்திருந்த நான்கு குளங்களின் உரிமையையும் கோயிலுக்கே அரசு சார்பில் எழுதிவைத்தார் என்கிறார்கள்!

தற்போதும் கரங்கள் இல்லாம லேயே காட்சி தருகிறார் சாஸ்தா. சுமார் 70 வருடங்களுக்கு முன் நடந்த திருப்பணியின்போது, புதிய சிலையை நிர்மாணிக்க முடிவு செய்தார்கள் பக்தர்கள்.

எனவே, புதிய சிலை செய்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது, கோபால சமுத்திரத் தின் எல்லையில்... சிலை செய்த சிற்பி நிலைதடுமாறினார். அவருக்குக் கண் தெரியாமல் போய்விட்டது. அனைவரும் அதிர்ந்தனர்.

‘சாஸ்தாவே... நீங்கள் கரங்கள் இல்லாமல் திகழ்வதை பொறுக்கமுடியாமலேயே புதுச் சிலை செய்ய தீர்மானித்தோம். தவறினை மன்னியுங்கள். புதிய சிலையை அங்கு பிரதிஷ்டை செய்ய மாட்டோம். தயவு செய்த சிற்பிக்கு பார்வையை மீட்டுத் தாருங்கள்’ என வேண்டி நின்றனர். அதன் பிறகே சிற்பிக்குப் பார்வை திரும்பியது!

பக்தர்களும் தாங்கள் வாக்களித்தபடியே, புதிய சிலையைச் சிவன் கோயிலில் வைத்துவிட்டனர். அதன் பிறகு ஏற்கெனவே மூலஸ்தானத்தில் இருந்த கரங்கள் இல்லாத ஐயனுக்குதான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோயில் பாண்டிய மன்னரால் எழுப்பப்பட்டது என்பதற்கு அடையாளமாக சாஸ்தா சந்நிதி மேல் தளத்தில் மீன் சின்னம் பொறிக் கப்பட்டிருப்பதைத் தற்போதும் காணலாம்.

எப்படிச் செல்வது?: திருநெல்வேலி சேரன்மகாதேவி சாலையில், 15 கி.மீ. தொலைவில் தருவை ஆற்றுபாலம் வரும். அந்த இடத்தில் வலப்புறம் பிரியும் செல்லும் சாலையில் பயணித்து, தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள பசுங்கிளி சாஸ்தா ஆலயத்தை அடையலாம்.

நெல்லை டவுண் - சேரன்மகாதேவி சாலையில் பயணித்தால், சுத்தமல்லி என்ற இடம் வரும். அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலை ஆட்டோ மூலம் சென்றடையலாம். தினமும் காலை 10 முதல் 5 மணி வரை கோயில் நடை திறந்து இருக்கும்.

பிள்ளை வரம் அருளும் ஸ்ரீபசுங்கிளி சாஸ்தா!

யானைக் குன்று!

திரு ஆனைக்கா தலத்தையும் அங்கு அருளும் ஜம்புநாத பெருமா னின் மகிமையையும் நாமறிவோம். யானை வழிபட்ட சிவனார் அவர்.

அதேபோல் வடஜம்புநாதர் எனும் திருப்பெயருடன் ஈசன் அருளும் கோயில், திருச்சியை அடுத்துள்ள வெள்ளறை மலையில் அமைந்துள்ளது. இக்குன்றினை கல்வெட்டுகள் `யானைக் குன்று' என்றும், அங்கு அருளும் ஈசனை `ஆனைக் கல் பெருமானடிகள்' என்றும் போற்றுகின்றன. இக்கோயில் திருவானைக்காவுக்கு வடக்கில் இருப்பதால் இத்தல இறைவனை வட ஜம்புநாதர் என்பர்.

திருவானைக்கா தலபுராணமும் இக் குன்றினைப் பற்றிய தகவலைச் சொல்கிறது.

மதுமார்ப் பொழின் ஞான

பூமியின் வடமேல் பால்

புதுமலர்த் திரள் அணிந்து

பொன்மணி பல கொழித்துப்

பதுமகுண்டலி எனப்படும்

பசும்புனல் தீர்த்தம்

கதுவி நின்றது சுவேத

வெற்பென ஒரு கல்லு...

என்கிறது திருவானைக்கா தல புராணம். யானைக் கல் என்ற திருப் பெயரும் இதற்கு உண்டு.

- பூசை ச.அருணவசந்தன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism