Published:Updated:

தென்னாட்டு திருப்பதிகள்! - தாமரை மலரில் தோன்றிய பெருமாள்!

ஸ்ரீபுண்டரீக வரதராஜப் பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீபுண்டரீக வரதராஜப் பெருமாள்

படங்கள்: கே.எஸ்.இளங்கோவன்

தென்னாட்டு திருப்பதிகள்! - தாமரை மலரில் தோன்றிய பெருமாள்!

படங்கள்: கே.எஸ்.இளங்கோவன்

Published:Updated:
ஸ்ரீபுண்டரீக வரதராஜப் பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீபுண்டரீக வரதராஜப் பெருமாள்

க்தியில் சிறந்த எண்ணற்ற மகான்களும் மகரிஷிகளும் அவதரித்த புண்ணிய பூமி தொண்டை நாடு. ஸ்ரீமந் நாராயணனின் அருட் பேராற்றலை அகிலம் அறியும் வண்ணம் `திவ்யப் பிரபந்தம்' பாடிய முதலாழ்வார்கள், ஸ்ரீராமாநுஜர் போன்ற அருளாளா்கள் அவதரித்த பெருமையைக் கொண்டது!

இத்தகைய சிறப்புமிக்க தொண்டை நாட்டில், முன்பொரு காலத்தில் வற்றாத ஜீவநதியாக விளங்கியது, `க்ஷீர நதி' என்று போற்றப்படும் பாலாறு.

தென்னாட்டு திருப்பதிகள்! - தாமரை மலரில் தோன்றிய பெருமாள்!

இந்நதியின் தென்கரையில் அமைந்த - அனைத்து வளங்களோடு ஆன்மிக மணமும் வீசும் மிகப் பழைமை யானத் தலம்தான் புக்கத்துறை. `புக்கை' என்ற சொல் நீருள்ள கேணியைக் குறிக்கும். `துறை' என்பது ஆற்றுப் படுகையின் அருகில் அமைந்துள்ள பகுதியைக் குறிக்கும். `புக்கை' எனும் சொல் `துறை'யுடன் சோ்ந்து `புக்கத்துறை' என்று அழைக்கப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க புக்கத்துறை என்னும் இந்தப் புண்ணிய திருத்தலத்துக்கும் மேலும் மேன்மை சேர்ப்பது, இங்குள்ள ஸ்ரீபெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீபுண்டரீக வரதராஜப் பெருமாள் திருக் கோயிலாகும்.

தென்னாட்டு திருப்பதிகள்! - தாமரை மலரில் தோன்றிய பெருமாள்!

காஞ்சி மாநகரத்தில் சிருஷ்டிக் கடவுளான பிரம்ம தேவனுக்கு, அக்னி குண்டத்தில் பேரொளி பொருந்திய புண்யகோடி விமானத்தின் கீழ், சங்கு - சக்ர, கதாபாணியாக `பேரருளாளன்' திருக்காட்சி கொடுத்து அவிா் பாகத்தை ஏற்றுக்கொண்டாா். பிரம்மதேவன் நடத்திய யாகத்தில் பங்குகொண்ட தேவா்களுக்கும் மகரிஷிகளுக்கும் கேட்கும் வரமெல்லாம் கேட்டபடி அருளியதால், அந்தப் பெருமாளுக்கு `வரதராஜன்' எனும் திருநாமம் ஏற்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இங்ஙனம் காஞ்சியில் அக்னி குண்டத்தில் அக்னி ஜ்வாலையாகக் காட்சி கொடுத்த எம்பெருமானை, வெப்பம் தணிந்த நிலையில் தரிசிக்க வேண்டுமென்று தேவர்களும் மகரிஷிகளும் தவம் இயற்றினார்கள். அவா் களின் தவத்துக்கு இரங்கிய எம்பெருமான், புக்கத்துறை திருத்தலத்தில் - குளிா்ச்சி பொருந்திய புண்டரீக புஷ்கரணி யில் (புண்டரீகம் என்றால் தாமரை) தாமரை மலரில், தேவா்களுக்கும் மகரிஷிகளுக்கும் காட்சி கொடுத்து அவர்களை ஆட்கொண்டார். ஆகவே, இத் தலத்தின் பெருமாளுக்கு ஸ்ரீபுண்டரீக வரதன் என்று திருநாமம்.

தென்னாட்டு திருப்பதிகள்! - தாமரை மலரில் தோன்றிய பெருமாள்!

ஸ்ரீபுண்டரீக வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில், எம்பெருமான் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் திருக்காட்சி தருகிறாா். சங்கு சக்ர தாரியாக அபய ஹஸ்தம், கடிக ஹஸ்தத்துடன் நின்ற திருக்கோலத்தில் அற்புதச் சேவை சாதிக்கும் அவரின் பேரழகைக் காணக் கண்கோடி வேண்டும்!

சோழா்கள் காலத் திருமேனியான இந்த எம்பெருமான் கல்வெட்டு களில் `விச்சாதிர விண்ணகராழ்வாா்' என்று அழைக்கப்படுகிறார். அதேபோல் இந்தத் திருக்கோயிலை `புக்கத்துறை திருவாபரணக் கோயில்' என்றும் எம்பெருமானை `பங்கயக் கண்ணா்' என்றும் மற்றொரு கல்வெட்டு தொிவிக்கின்றது.

தென்னாட்டு திருப்பதிகள்! - தாமரை மலரில் தோன்றிய பெருமாள்!
வெள்ளிக்கிழமைகளிலும் உத்திர நட்சத்திர நாள்களிலும் இத்தலத்தின் ஸ்ரீபெருந்தேவித் தாயாரை தரிசித்து மனமுருக வழிபடும் அன்பா்களுக்கு, எல்லா வளங்களும் கைகூடும்; அவர்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்!

பங்கயக் கண்ணா் என்ற சுவாமியின் பெயராலேயே இத்திருக் கோயில் தற்போது வடமொழியில் `புண்டரீகநாதா் கோயில்' என்று வழங்கப்படுகிறது. விஜயநகர மன்னா்களின் காலத்தில் `புட்கள் துறை' என்று வழங்கப் பட்ட இத்திருத்தலத்தின் பெயர் தற்போது மருவி `புக்கத் துறை' என்று அழைக்கப்படுகின்றது. விஜயநகர அரசா் களின் அரச இலச்சினையான வராகமும், கட்டாரியும், சூரிய-சந்திர உருவங்களும் கோட்டுருவங்களாக மகா மண்டபத்தின் கிழக்குச் சுவரில் காணப்படுகின்றன.

தென்னாட்டு திருப்பதிகள்! - தாமரை மலரில் தோன்றிய பெருமாள்!

தாயாா் சந்நிதியில் உள்ள தெலுங்குக் கல்வெட்டு ஒன்றில் சுவாமியின் திருநாமம் `வரதராஜ சுவாமி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீமந் நாராயணன் ஆறு உயா்ந்த குணங்களை உடையவன் என்று வேதங்கள் வணங்கி மகிழ்கின்றன. ஞானம், பலம், வீா்யம், ஐஸ்வா்யம், சக்தி, தேஜஸ்(ஒளி) ஆகியவையே பகவானின் இந்த ஆறு குணங்களாகும். இக்குணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற புக்கத்துறை எம்பெருமானை தரிசித்த உடனே மெய்ம்மறந்து விடுகிறோம்.

`அமலன் ஆதிபிரான்' என்று திருவடி முதல் திருமுடி வரை அரங்க நகரில் பள்ளிகொண்ட பெருமாளின் ஒவ்வோா் அங்கங்கத்தையும் அகத்திலே கண்டு களித்த திருப்பாணாழ்வாா், அரங்கனின் அருளால் அவரை நேரில் தரிசிக்கும் பேறுபெற்றபோது எத்தகைய பேரின்பப் பெருநிலையை அடைந்தாரோ, அதே நிலை இத்திருக் கோயிலில் ஸ்ரீபுண்டரீக வரதனை தரிசிக்கும் அன்பா்களுக்கும் ஏற்படும். அவ்வளவு அழகு எம்பெருமான்!

தென்னாட்டு திருப்பதிகள்! - தாமரை மலரில் தோன்றிய பெருமாள்!

பிற்காலச் சோழா்களின் கட்டடக் கலை அம்சத்துடன் விளங்கும் இத்தலத்தில், விஜய நகர மன்னா்களின் கலைப்பாணியும் அதிக மாகக் காணப்படுகின்றது. கருவறை, அா்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை சோழ மன்னா்களின் திருப்பணியாகும். திருக் கோயிலின் தென் மேற்கில் உள்ள ஒரு தூணில் திகழும் பூவராக மூா்த்தியின் எழில்மிகு புடைப்புச் சிற்பம் அனைவரையும் கவா்கிறது. நான்கு திருக்கரங்களுடன் கூடிய இம்மூா்த்தி, ஸ்ரீபூமி தேவியைத் தன் தொடை மீது அமா்த்தி வைத்துள்ள நிலையில் திகழும் இச்சிற்பம் பூமியின் அடியிலிருந்து வருவது போல அமைக் கப்பட்டுள்ளது.

தென்னாட்டு திருப்பதிகள்! - தாமரை மலரில் தோன்றிய பெருமாள்!

சகல செளபாக்கியங்களின் வடிவமாக விளங்கும் ஸ்ரீமகாலட்சுமி இத்தலத்தில் “பெருந் தேவித் தாயாா்' எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாா். வெள்ளிக்கிழமைகளிலும் உத்திர நட்சத்திர நாள்களிலும் இந்தத் தாயாரை மனமுருக வழிபடும் அன்பா்களுக்கு, எல்லா வளங்களும் கைகூடும் என்கிறார்கள்.

பெரியாழ்வார் பெற்ற பெண் ரத்தினமாம் சூடிக்கொடுத்த சுடா்க்கொடியாள் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கின்றாள். ஆண்டாள் சந்நிதியில் உள்ள தூணில் ஸ்ரீஅனுமன் புடைப்புச் சிற்பமாக அருள்கிறாா். இந்த ராம தூதனை சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கிரக நிலைகளால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும் என்பது நம்பிக்கை. அனுமன் ஜயந்தி நாளில் இந்த அனுமனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

பிற்காலச் சோழ மன்னனான திரிபுவன வீரதேவனின் 35-ஆவது ஆட்சியாண்டைச் சேர்ந்த 8 கல்வெட்டுகள் இத்தலத்தில் உள்ளன. பெருந்தேவித் தாயார் சந்நிதியில் உள்ள ஒரு கல்வெட்டு மட்டும் தெலுங்கு மொழியில் உள்ளது. இது விஜயநகர மன்னர்களின் காலத் துக் கல்வெட்டு ஆகும்.

தென்னாட்டு திருப்பதிகள்! - தாமரை மலரில் தோன்றிய பெருமாள்!

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சிறப்பு ஆணையராகப் பணிபுரிந்த தி. ஸ்ரீதா், இ.ஆ.ப. அவா்களது சீரிய முயற்சியால் இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் படியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

சா்வாந்தா்யாமியான எம்பெருமான் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தாலும், அவன் அருளை எளிதாகப் பெற சாத்தியமான இடம் திருக்கோயில்களே ஆகும். அவ்வகையில் இக்கோயிலில் அருளும் பெருமாள், திருமணத் தடைகள் விலகவும் புத்திரப்பேறு வாய்க்கவும் அருள் வழங்கும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறாா்.

தென்னாட்டு திருப்பதிகள்! - தாமரை மலரில் தோன்றிய பெருமாள்!

நீங்களும் ஒருமுறை, அஷ்ட ஐஸ்வா்யங்களை யும் அள்ளித் தரும் புக்கத்துறை ஸ்ரீபுண்டரீக வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்று திருமாலையும் திருமகளையும் வழிபட்டு வரம் பெற்று வாருங்களேன்.

எப்படி செல்வது?: சென்னை -செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில், பாலாறு தாண்டிய வுடன் புக்கத்துறை கூட்டுச் சாலை வரும். அங்கே வலப்புறம் திரும்பி, உத்திரமேரூா் சாலையில் சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால், திருக்கோயிலை அடையலாம். காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மாலை 4 முதல் 7 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.