Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: அலைமகள் ஆட்சி செய்யும் திருத்தலம்!

புண்டரீகாக்ஷ பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்டரீகாக்ஷ பெருமாள்

அருள்மிகு புண்டரீகாக்ஷ பெருமாள், திருவெள்ளறை

திருவெள்ளறை - புராணத் தொன்மை வாய்ந்த அற்புத க்ஷேத்திரம். `வெள்ளறை' என்பது வெண்மையான பாறைகளால் ஆன மலை என்பதைக் குறிப்பது; `திரு' என்ற அடைமொழி இத்தலத்தின் உயா்வைக் குறிப்பது.

தொன்மை கருதி இத்தலம் `ஆதி வெள்ளறை' என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்வேதகிரி, உத்தம க்ஷேத்திரம், ஹித க்ஷேத்திரம் ஆகிய திருப்பெயர்களாலும் வழங்கப்படுகிறது, திருவெள்ளறை திருத்தலம்.

3,700 வைஷ்ணவா்கள் (பெருமாளுடன் சோ்த்து) இத்தலத்தில் வசிக்க சிபி எனும் மன்னன் ஏற்பாடு செய்ததால், ஶ்ரீவைஷ்ணவா்களின் மேன்மைக்கு அடையாளமிட்ட திவ்யதேசம் இத்தலம் என்பார்கள். இதனால் `பாங்குடன் மூவாயிரத்து எழுநூற்றாள் வாழியே' என்று தாயாருக்குத் திருமொழி ஏற்பட்டது.

எங்கள் ஆன்மிகம்: அலைமகள் ஆட்சி செய்யும் திருத்தலம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்னும் பல பெருமைகள் உண்டு இந்தத் தலத்துக்கு. அவற்றையெல்லாம் விரிவாக அறியும் முன், இந்தத் தலம் குறித்த புண்ணியக் கதை ஒன்றை அறிந்துகொள்வோம்.

வாமனராய் அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண்கேட்டு, மூன்று உலகங்களையும் திரிவிக்கிரமனாக அளந்த மகாவிஷ்ணுவுக்கு, ஶ்ரீபிரம்ம தேவன் பாதபூஜை செய்ய விரும்பினாா். அதனால் அவருடைய கமண்டலத்திலிருந்து தோன்றியது புனிதமான பாகீரதி நதி.

சப்த ரிஷிகள் நீராடுவதற்கும் தீா்த்தமாக உபயோகப் படுத்துவதற்கும் ஏற்ற நதி என்பதால், பாகீரதி பரம பவித்ரமான நதியாக வணங்கப்படுகிறது. பகீரதன் தன் நீண்ட நெடிய தவத்தால் இந்த நதியைப் பூலோகத்துக்குக் கொண்டு வந்தான். பாகீரதிக்கு அருகில் யமுனை நதி உள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பாகீரதியின் சேயான கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட தேசத்தைத் தர்மத்தில் சிறந்த சிபி என்னும் மன்னன் ஆண்டு வந்தான். இவன் அனைத்து வித்தைகளிலும் சிறந்து விளங்கியதுடன், மிகச் சிறப்பான ஆட்சியையும் நடத்தி வந்தான்,

ஒருமுறை இந்த மன்னனுக்குள் `மறுபிறவியற்ற மோட்சத்தை அடையும் வழி எது?' என்ற வினா தோன்றியது. ஆகவே, வசிஷ்டா் முதலான முனிவா்களையும், வேத பண்டிதா்களையும், தன் மந்திரிப்பிரதானிகளையும் அழைத்து தனது சந்தேகம் தீர உபாயம் கூறியருள வேண்டினான்.

புண்டரீகாக்ஷ பெருமாள்
புண்டரீகாக்ஷ பெருமாள்
அருள்மிகு புண்டரீகாக்ஷ பெருமாள்
திருவெள்ளறை

அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் கீழ்க்காணும் விவரத்தை அளித்தார்கள்"

“மன்னா் மன்னா! உலகியல் ஆசைகளில் உழன்று போகத்தில் ஆழ்ந்த மன்னா்கள் பலா் உண்டு. ஆனால், உம்மைப் போன்று தர்மநெறியைப் பழுதில்லாமல் பின்பற்றும் மன்னர் எவரும் இல்லை.

ராஜ்ஜிய பரிபாலனம் செய்வதே மன்னர்களுக்கான கர்மம். அதை விடுத்து தீா்த்த யாத்திரை, தானம், விரதம் முதலான வழிகளால் வைகுண்ட பதவியான மோட்சத்தை அடைய முடியாது; உலகுக்கு நல்லாட்சி அளிப்பதால் மட்டுமே மோட்சத்தை அடைய முடியும். இது, ஶ்ரீஹரியால் மனுவுக்குச் சொல்லப்பட்ட நீதி.

ஆகவே, தாங்களும் நீதிநெறி தவறாமல் இவ்வுல கைப் பரிபாலனம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து வந்தால், `ச்வேத கிரி' என்னும் பதியில் பங்கஜ வல்லிநாதன் உமக்கு அருள்பாலித்துத் தம்மிடத்தில் சோ்த்துக்கொள்வாா்.”

சான்றோர்களின் அறிவுரையை ஏற்ற மன்னன் சிபி, `நல்லாட்சி நடத்துவதே மிகச் சிறந்த தவம்' என்பதை மனத்தில் கொண்டு தன் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி வந்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், தென்திசையில் வாழும் பலம் வாய்ந்த அசுரா்கள் சிலா், உலக மக்களைத் துன்புறுத்துவதோடு, வேத பண்டிதா் களின் வேள்விகளை நடக்கவிடாமல் தடுத்து வருகிறார்கள் என்ற செய்தியை அறிந்தான். அதனால் மிகவும் கோபம் கொண்டு அவா்கள்மீது போா் தொடுக்க ஏற்பாடுகள் செய்தான்.

காற்றைவிட வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட பல ரதங்கள் தென்திசை நோக்கிப் புறப்பட்டன. மூவுலகங்களையும் நடுங்கவைக்கும் மேகத்தைத் தொடும்படியான சரீரங்களையுடைய மத யானைகளும் அணிவகுத்தன. கவசம் அணிந்த காலாட்படை வீரா்கள் கத்தியும், வில்லும், ஈட்டியும் ஏந்திக்கொண்டு முன்னேறினா். இவ்விதமான பெரும் படைக்குத் தலைமை தாங்கி வழிநடத்திச் சென்றான் மன்னன் சிபி.

சிபியின் சேனைகள் பெரும் ஆரவாரத் துடன் நகர்ந்த காட்சி, பிரளயத்தில் கடலலை கள் பொங்கியெழும் காட்சிக்கு ஒப்பாக இருந்ததாம். இவ்விதம், தென்திசையை அடைந்த மன்னனும் அவனுடைய சேனைகளும் திருவெள்ளறை எனும் தலத்தில் கூடாரம் அமைத்துத் தங்கினா்.

மகா வராஹ தரிசனம்!

வீரர்கள் பல இடங்களில் கூடாரம் அடித்து தங்கியிருந்த நிலையில், ஓர் அதிசயம் நிகழ்ந்தது. மலை போன்று பெரியதும் காண்பதற்கு பயங்கரமானதுமான ஒரு வெள்ளை வராஹம் திடுமெனத் தோன்றியது.

ஆக்ரோஷத்துடன் அங்குமிங்கும் உலவிய அந்த வராஹத்தைக் கண்டு வீரர்கள் பலர் அஞ்சி நடுங்கினார்கள். சிலா், நீளமான தடிகளைக் கொண்டும் ஈட்டிகளைக்கொண்டும் அந்த வராஹத்தைத் தாக்கச் சூழ்ந்தனர். கம்பீரமான அந்த வெண்பன்றி தன் கோரைப்பல்லால் பூமியைப் பாதாளம் வரை பிளந்தது!

எங்கள் ஆன்மிகம்: அலைமகள் ஆட்சி செய்யும் திருத்தலம்!

தங்களின் புஜபலம் அந்த வராஹத்திடம் பலிக்காது என்பதை உணர்ந்த வீரர்கள், விஷயத்தை மன்னனிடம் எடுத்துச் சென்றனர். அவர்கள் கூறியதைக் கேட்டு திகைப்படைந்த மன்னன் சிபி, தானே அந்த வராஹத்தைப் பிடிக்கச் சென்றான்.

அவனிடமும் மாய லீலைகளை நிகழ்த்தியது வராஹம். மிக அருகிலிருப்பது போல் தோன்றிய வராஹம், மறுகணமே தூரத்தில் இருப்பதாகக் காட்சியளித்தது. கையில் அகப்படுவதுபோல் போக்குக் காட்டி, மாயமாய் மறைந்து, வேறொர் இடத்தில் மீண்டும் தோன்றியது. மன்னனின் திகைப்பு மென்மேலும் அதிகரித்தது. `இது அசுரரின் மாயச் செயலோ' என்றும் எண்ணினான். அதேவேளையில், அருகிலிருந்த மலையின் உச்சியில் தோன்றியது வராஹம். மன்னன் அதை நெருங்க முயற்சி செய்த போது, சட்டென்று அருகிலுள்ள புற்றுக்குள் சென்று மறைந்தது.

மன்னனுக்கு வராஹத்தின் செயல்கள் அனைத்தும் அதீத வியப்பை அளித்தன. அதன் லீலைகள் சாதாரணமானவையாகத் தோன்றவில்லை. வராஹத்தின் இந்த லீலைகள் குறித்து அருகில் வசிக்கும் முனிவர்களிடம் விசாரித்து அறியலாம் என்று தீர்மானித்தான். அந்தப் பகுதியில் முனிவர்கள் இருக்கிறார்களா என்பதை அறிந்துவர வீரர்களை ஏவினான்.

மாா்க்கண்டேய மகரிஷியின் வழிகாட்டல்...

ன்னனின் ஆணைப்படி முனிவர்களைத் தேடிச் சென்ற வீரர்கள், மலைக்கு மேல் தாமரைத் தடாகங்களும், நிழல் தரும் மரங்களும், பூத்துக் குலுங்கும் மலா் வனங்களும் நிறைந்த எழில் மிக்க ஒரு பகுதியைக் கண்டனர்.

அந்த இடத்தில் பசுக்களின் கன்றுகள் பெண் புலியின் மடியில் பால் குடிப்பதையும், கொடிய மிருகங்கள் தம்மிலும் வலிமை குன்றிய பிராணிகளிடம் ஒற்றுமையுடன் வாழ்வதையும், ஆத்மஞானம் பெற்ற தவச்சீலா்கள் குடில் அமைத்து வாழ்வதையும் கண்டார்கள்.

உடனடியாக இருப்பிடத்துக்குத் திரும்பி, தாங்கள் கண்ட காட்சிகளை மன்னனிடம் தொிவித்தனா். மன்னனும் தாமதிக்காமல் அந்த இடத்துக்கு விரைந்து சென்றான். அங்கே `க்ஷீர புஷ்கரணி' எனும் தடாகத்தின் அருகில் மார்க்கண்டேய மகரிஷியின் ஆசிரமம் இருப்பதை அறிந்து, அவரை தரிசித்து நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். அவரிடம் வராஹ லீலைகளை விவரித்து, அதுகுறித்து விவரம் சொல்லும்படி வேண்டிக்கொண்டான்.

மார்க்கண்டேய மகரிஷி அவனிடம், “மகா பாக்கியசாலியான மன்னரே! தங்களின் முன் தோன்றியது, சாதாரண பன்றி அல்ல; அது விசேஷ சக்திகள் கொண்டது. விரிவாகச் சொல்கிறேன் கேள்...'' என்று தொடங்கி, விரிவாக விளக்கினார்.

``மன்னவனே! இமயத்துக்கு ஒப்பான இந்த மலைக்கு, `ச்வேத கிரி' என்றும், மலையில் திகழும் இந்தப் பகுதிக்கு `நீலிகா வனம் என்றும் பெயா். பெரும் புண்ணியம் செய்தவர்களே இந்த இடத்துக்கு வர இயலும்.

ஒருமுறை, மகாவிஷ்ணுவிடம் வேண்டுதல் ஒன்றை முன்வைத்தாள் மகாலட்சுமி. `உம்மிலும் மேலான நிலை வேண்டும்’ என்பதுதான் அது. அதற்கு எம்பெருமான், `நீ வேண்டியதை வைகுண்டத்தில் தர இயலாது. இங்கு நீயே நான்; நானே நீ. நாம் இருவரும் பிரபஞ்சத்தின் பெற்றோர். பூவுலகில் மட்டுமே என்னிலும் உயா்ந்தவா்களாக என் அடியவா்கள் இருக் கிறாா்கள். ஆகவே நீயும் பூவுலகம் சென்று ச்வேதகிரியை அடைந்து, கடும் தவம் செய். அங்கு நீ விரும்பியதை அளிப்போம்’ என்று அருள்பாலித்தார். அதன்படியே மகாலட்சுமி வந்து தவம் புரிந்த புண்ணிய பூமி இது. அவளின் தவத்துக்கு மகிழ்ந்து ஸ்வாமி வராஹமாய் தோன்றி அருள்பாலித்த க்ஷேத்திரம் இது.

மன்னா் மன்னா... நானும் இங்கே ஶ்ரீமதுசூதனனை நினைத்து நெடுங்காலம் தவம் புரிகிறேன். ஆனால், என்னைப்போன்ற தவ சிரேஷ்டா்களுக்குக் கிடைக்காத ஶ்ரீஹரியின் வராஹ தரிசனம் உமக்குக் கிடைத்துள்ளது. ஆகவே, அரச குலத்தில் நீா் மேலானவா்’’ என்று கூறி மன்னனை வாழ்த்தினார்.

அதனால் மனம் மகிழ்ந்த சிபி, தென்திசை அரக்கர்களை அழிக்கும் வழியை அவரிடம் வேண்டினான். மார்க்கண்டேயர் அவனுக்கு அறிவுரை வழங்கினார்:

“அரசே! உன் வம்சத்தில் தசரதனுக்கு மகனாக - எம்பெருமானின் திருஅவதாரமாகப் பிறக்கும் ஶ்ரீராமச்சந்திர மூா்த்தி தென்திசை அரக்கா்களை அழிப்பாா். ஆகவே, நீ இப்போது உன் தேசத்துக்குச் செல். அங்கிருந்தபடியே இந்த திவ்யக்ஷேத்திரத்தில் தவம் செய்பவா்களுக்கு அனுகூலமான நன்மைகளைச் செய். இங்கு அந்தணர்களைக் குடியேற்றி வசிக்கச் செய். அக்னிக்கு ஒப்பான வேதவிற்பன்னா்களை இத்தலத்தில் குடியேற்றுவதால், உமக்கு எல்லா புண்ணியங்களும் ஏற்படும்!”

அப்படியே செய்வதாக வாக்களித்து அவரிடமிருந்து விடைபெற்ற மன்னன், தன் தேசத்துக்குத் திரும்பினான்.

வேத பண்டிதர்களை அழைத்து முனிவரின் விருப்பத்தைத் தெரிவித்தான். அதை ஏற்று 3,700 அக்னிஹோத்ரிகள் திருவெள்ளறைக்குப் புறப்பட்டனர். மன்னனும் உடன் சென்று திருவெள்ளறையில் அவர்கள் தங்கியிருக்க மாட மாளிகைகளைக் கட்டுவித்ததுடன், அவா்களுக்கு ஏராளமான செல்வங்களையும் அளித்து ஆனந்தம் அடைந்தான்.

இந்த நிலையில், கால தோஷத்தினால் அந்தணா் ஒருவர் மரணமடைய நேரிட்டது. இதையறிந்து அளவிலாத துயரம் கொண்டான் மன்னன் சிபி. பெருமாளைப் பிரார்த்தித்து, `ஏன் இந்தச் சோதனை' என்று புலம்பினான்.

அவன் முன் மானிட உருவத்தில் தோன்றிய இத்தலத்தின் புண்டரீகாட்சப் பெருமாள் “அரசே! வருந்தவேண்டாம். உன் வருத்தம் நீக்க இங்கு வந்திருக்கும் நான், ஸ்வயம் ஜோதியான புண்டரீகாட்சனே. மறைந்த அக்னிஹோத்ரியின் இடத்திலிருந்து நான் அவருடைய பணிகளைத் தொடர்வேன். சிறிது காலத்துக்கு முன் வராஹ வடிவெடுத்து உம் முன் தோன்றியதும் நானே'' என்று அருள் பாலித்தார்.

அத்துடன் வராஹம் புகுந்து மறைந்த புற்றைச் சுட்டிக்காட்டி, `பாஞ்சராத்ர ஆகமத்தில் நன்கு தோ்ந்த நான்கு அந்தணர்களைக் கொண்டு வைதீக மந்திரங்களுடன், காமதேனுவின் பாலால் இந்தப் புற்றுக்குத் திருமஞ்சனம் செய்தால், நான் அர்ச்சாவதாரத் திருமேனிய னாக உன் முன் தோன்றுவேன்'' என்று கூறி மறைந்தார்.

மிகவும் மகிழ்ந்தான் மன்னன் சிபி. மார்க்கண்டேயரிடம் சென்று நடந்ததை விவரித்தான். அவர் மிகவும் மகிழ்ந்து மன்னனை ஆசீரிவதித்து, ``பகவானின் விருப்பப்படி விரைவில் திருமஞ்சனம் செய்'' என்று வழிகாட்டினார்.

மன்னவனும் காமதேனுவைத் தேடிச் சென்று தரிசித்தான். பாவம் போக்கும் புண்ணியமான பாலை அருளும்படி வேண்டிக் கொண்டான். காமதேனுவும் பாலைச் சொரிந்தது.

காமதேனுவின் பால் சொரிந்து திருமஞ்சனம் செய்தநிலையில், புற்றுக்குள் இருந்து கோடி சூரியப்பிரகாசத்துடன், நெற்றியில் கஸ்தூரித் திலகம் துலங்க, ரத்தின மகுடம் தரித்து, திவ்ய ஆயுதங்களோடும் சதுர்புஜங்களோடும் சிபி மன்னனுக்குக் காட்சியளித்தார் புண்டரீகாட்ச பெருமாள்.

அவரின் திருக்கோல தரிசனம் கண்டு பேரானந்தம் அடைந்தான் மன்னன் சிபி.

மல்லிகை மொட்டுகளையொத்த அழகிய பல்வரிசை, கெளஸ்துப மாலையால் அலங்கரிக்கப்பட்ட திரு மாா்பு, ரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் பிரகாசிக்கும் பருத்தத் தோள்கள், சங்கு, சக்கரம், கதை, தாமரை, கத்தியுடன் விளங்கும் திருக்கரங்கள், ஆலிலையையொத்த திருவயிறு... என கற்பனைக்கும் எட்டாத பேரழகுப் பெட்டகமாகக் காட்சி தந்தார் புண்டரீகாட்சப் பெருமாள்!

தொடர்ந்து நிகழ்ந்தன அற்புதங்கள்.

அவை அடுத்த இதழில்...

பெருமாளின் எழில் தரிசனம்!

ருவறையில் பேரழகுப் பெட்டகமாக... நின்ற திருக் கோலத்தில், கிழக்குத் திருமுக மண்டலத்தில் திருக்காட்சி தருகிறாா் ஶ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள். அழகுத் தமிழில் `செந்தாமரைக் கண்ணன்' என்று திருப்பெயர்.

சூரிய-சந்திரா் சாமரம் வீச, கருடாழ்வாரும் ஆதிசேஷனும் நின்ற திருக்கோலத்தில் பெருமாளை வணங்கிக்கொண்டிருக்கின்றனா்.

பெருமாளின் திருவடியில் மாா்க்கண்டேயா் தவம் செய்யும் கோலத்தில் அமா்ந்துள்ளாா். சிபி மன்னனுக்கு ச்வேத வராஹராக பெருமாள் திருக்காட்சி தந்ததால் அவருக்கு `ச்வேதபுரி நாதன்' என்ற திருப்பெயரும் வழங்கப்படுகிறது.

இதன் காரணமாகவே திருவெள்ளறைக்கு ஸ்வேதபுரி என்ற திருநாமம் ஏற்பட்டது.

திருப்பணிகளும் கல்வெட்டுகளும்

திருவெள்ளறைத் திருக்கோயில், பல்லவமன்னன் தந்திவா்மனின் ஐந்தாம் ஆட்சியாண்டு காலத்தில் (கி.பி. 805) தொடங்கி, மூன்றாம் நந்திவா்மன், சோழா்கள், விஜயநகர மன்னா்கள் எனப் பல மன்னா்களால் திருப்பணிகள் கண்டுள்ளது.

எங்கள் ஆன்மிகம்: அலைமகள் ஆட்சி செய்யும் திருத்தலம்!

இத்திருக்கோயிலின் திருச்சுற்று மதிலின் பிரமாண்டம் மலைக்க வைப்பது. மதுராந்தக உத்தமச் சோழனின் 8-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளில் இக்கோயில், `பெரிய ஶ்ரீகோயில்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் இரண்டாம் நுழைவாயிலில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அதில், அந்த மன்னன் காவிரி வளநாட்டை எவ்வாறு தனதாக்கிக்கொண்டான் என்பதை விளக்கும் பாடல் உள்ளது.

திருவெள்ளறையில் படிகளின் ஏற்றம்!

திருவெள்ளறை தலத்தில், பிரதான வாயிலான வடக்கு வாயிலில் நுழைய 18 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.

இந்த படிகளைக் கடக்கும்போது பகவான் ஶ்ரீகிருஷ்ணா் அருளிய பகவத்கீதையின் 18 அத்தியாயங்களைத் தியானம் செய்வது முன்னோா்களின் வழக்கம்.