`குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்’ என்பார்கள் முன்னோர்கள். அந்த வரிசையில் நாம் நதியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரணம் நம் தேசத்தில் நதிகளும் தெய்வங்களே. அவ்வகையில் தண்பொருணையாம் தாமிரபரணி, பொதிகையில் தோன்றி தென் தமிழகத்தின் கடைக் கோடி மாவட்டங்களைக் குளிர வைக்கும் ஜீவநதி ஆகும்.

நதிகளைத் தெய்வமாகப் போற்றிய நம் முன்னோர், அதன் சிறப்பு களை உலகறியச் செய்யும்விதம் நதித் தீரங்களில் பல விழாக்களையும் நடத்தினர். விழாக்களில் குறிப்பிடத் தக்கது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகா புஷ்கரம். தாமிரபரணி தீரத்திலும் முற்காலத் திலேயே மகாபுஷ்கரம் கொண்டாடப்பட்டது என்பர். ஆனாலும் 1874-க்குப் பிறகு ஏனோ அவ்விழா கொண்டாடப்படவில்லை. 144 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2018-ல் மீண்டும் கோலாகலமாக நடந்தேறியது தாமிரபரணி புஷ்கரம்.

இந்த நதிக்கரையின் தலங்கள் அனைத்திலும் இவ்விழா சிறப்புற நடைபெற்றது. அத்தலங்களில் ஒன்று அம்பாசமுத்திரம். இவ்வூரில் நதிக்கரையில் விசேஷம் வாய்ந்த தீர்த்தக்கட்டங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்றுதான் முக்குண்ட தீர்த்தம். இது, 50 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் கிடந்தது. மகாபுஷ்கரம் நிகழ்ந்த தருணத் தில் ராஜா என்ற அன்பரின் முயற்சியுடன் அடியார்கள் பலரும் ஒன்றிணைந்து இந்தத் தீர்த்தத்தைப் புனரமைக்க முடிவு செய்தனர். அதையொட்டி, அதன் சிறப்புகளைத் தேடும் பணியும் தொடங்கியது.

அம்பாசமுத்திரத்தின் தலபுராணத்தைப் புலவர் அரிகரபாரதி என்பவர் சுவைபட எழுதியுள்ளார். அதைத் தழுவி மு.ரா. கந்தசாமிப் பிள்ளை என்பவர், `கிருஷ்ணன் கோயில் வரலாறு’ என்ற அற்புதமான நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் ‘முக்குண்ட தீர்த்தம்’ தொடர் பான தகவல்கள் உள்ளன.

இந்தத் தீர்த்தக்கட்டம் பொங்கு தீர்த்தம், குட்டத் தீர்த்தம், அக்னி தீர்த்தம் என்று மூன்று பிரிவுகளாக ஒரே இடத்தில் திகழ்கிறது. மூன்றும் வெவ்வேறு சுவை கொண்டவை; நோய் தீர்ப்பவை.

அக்னி தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் 41 நாள்கள் நீராடி, அருகில் கோயில் கொண்டிருக்கும் இறைவனை வழிபட்டு வணங்கினால் மனநோய் தீரும் என்பது நம்பிக்கை.

குட்டத்தீர்த்தம்: இந்தத் தீர்த்தமும் நோய்களைக் குணமாக்கும் வல்லமை கொண்டது.

பொங்கு தீர்த்தம்: இந்தத் தீர்த்தம் சகல வளங்களையும் அருள வல்லது. இதில் 108 லிங்கங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளன. அகத்தியர், கணேசர், நாகர், நடராஜன், கருடன், முருகன் ஆகிய தெய்வங்களின் திருவடிவங்களும் இந்தத் தீர்த்தக் கட்டத்தின் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. ஆகவே, இதில் நீராடி வணங்கினால் அனைத்துத் தெய்வங்களின் திருவருள் கிடைப்பதோடு பொருள் வளமும் உண்டாகும் என்பது ஐதிகம்.

இந்தத் தீர்த்தக்கட்டத்துக்கு அருகில் நடந்து செல்லும் தூரத்தில் அருள்மிகு புருஷோத்தமப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

அதிவீரன் என்னும் மன்னன் ஒருவன், கங்கையின் கரையில் புருஷோத்தமனுக்குக் கோயில் எழுப்பி வழிபட்டுவந்தான். அனைத்து வித செல்வங்களைப் பெற்றிருந்தாலும், வெகுநாள்களாக அவனுக்குக் குழந்தைச் செல்வம் வாய்க்கவில்லை. ஆகவே, `தனக்குப் பிறகு புருஷோத்தமரை யார் வழிபடுவார்கள்’ என்று கவலை கொண்டிருந்தான் மன்னன். அவனது வாட்டத்தைப் போக்க எண்ணி நாராயணர் அவன் கனவில் தோன்றினார்.

“அதிவீரா! வருந்தாதே. இந்த ஆலயக் கோபுரத்தின் நிழல் எங்கு விழுகிறதோ அங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதி தேவதைகளும் மூன்று தீர்த்தங்களாக அருள்பாலிப்பார்கள். அங்கு எனக்கு ஓர் ஆலயம் எழுப்பினால், யுகப் பரியந்தம் எனக்குத் தடையின்றி வழிபாடுகளும் ஆராதனைகளும் எமக்கு நடக்கும்’’ என்று சொல்லி மறைந்தார்.

மெய்சிலிர்த்துப்போன மன்னன் விழித்ததும், ஆலயத்தின் கோபுர நிழல் விழும் இடத்தைத் தேடினான். இறை அற்புதம் நிகழ்த்தியது. ஆலயத்தின் கோபுர நிழல் ஆலயம் அமைந்திருக்கும் பகுதியைத் தாண்டி நீண்டது. நிறைவில், தாமிரபரணிக் கரையில் அம்பா சமுத்திரம் தலத்தை அவன் அடைந்தபோது, கங்கைக் கரை ஆலயத்தின் கோபுர நிழலைக் கண்டான்; அதே இடத்தில் மூன்று தீர்த்தங் களையும் கண்டான். இறைக்கட்டளைப்படி அங்கே அழகாக ஓர் ஆலயமும் அமைத்தான். அங்கே நித்ய வழிபாடுகளுக்கும் வழிவகை செய்தான்.

மனிதர்கள் மட்டுமன்றி தேவலோக அரம்பையரும் இந்தத் தீர்த்தங்களில் நீராடி வழிபட்டு அருள்பெற்றதாகச் சொல்கிறது தல புராணம். மேலும், இந்தத் தீர்த்தங்களைப் புனரமைத்தால் மழை பொழியும் என்ற தகவலும் அதில் காணப்பட்டது.

இந்த மகிமைகளையெல்லாம் அறிந்த அடியார்கள் மேலும் முனைப்புடன் திருப்பணியில் ஈடுபட்டனர். புதுப்பொலிவு பெற்றது தீர்த்தம்; விரைவில் பெருமழையும் பொழிந்து அம்பை பகுதியைச் செழிக்கவைத்து. அடியார்களும் மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அம்பாசமுத்திரத்துக்கு வரும் பக்தர்கள், முதலில் இந்த முக்குண்ட தீர்த்தத்தில் நீராடவேண்டும். அதன் பிறகு அருள்மிகு காசிபநாதர் கோயில் அருகிலுள்ள தாமிரபரணியில் அமைந்துள்ள தீர்த்தக்கட்டங் களில் நீராடவேண்டும் என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

காசிபநாதர் கோயில் அருகில் தாமிரபரணி தீரத்தில் தேவி தீர்த்தம், சாலா தீர்த்தம், தீப தீர்த்தம், காசிப தீர்த்தம், புழுமாறித் தீர்த்தம், கோகில தீர்த்தம் ஆகிய ஆறு தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் அதிதி, காசிபர், சூரியகுலத்து அரசர்கள் பிரமோதனன், சிவகர்மா ஆகியோரும் குயில் ஒன்றும் நீராடி வழிபட்டு அருள்பெற்றனராம்.

இந்தத் தீர்த்தங்களில் நீராடி அருள்மிகு காசிபநாதரை வழிபட்டு விட்டு, மீண்டும் முக்குண்ட தீர்த்தக்கரை வந்து, புருஷோத்தம்மன் கோயில் பெருமாளை வழிபட வேண்டும். இதனால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியம் சேரும் என்கிறார்கள்.

முக்குண்ட தீர்த்தத்துக்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. அதுகுறித்து உள்ளூர் பக்தர்கள் விவரிக்கிறார்கள்.

“காசிபநாதர் கோயில் விழாக்களின்போது, அபிஷேகத்துக்கு இந்த முக்குண்டத் தீர்த்தத்தின் நீரையே எடுத்துச் செல்வார்கள். அப்போது வெள்ளை ஆமை ஒன்று தீர்த்தத்தில் தோன்றும். மற்ற நாள்களில் அதைக் காண இயலாது.

ஆமையின் வடிவில் சித்த புருஷர் ஒருவரே இங்கு தோன்றி அருள்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் சிலர் இங்கு வந்து தியானம் செய்து, அந்த ஆமையின் தரிசனம் பெற்றிருக்கிறார்களாம். வெள்ளை ஆமையை தரிசித்தால், இப்பிறப்பின் துன்பங்கள் நீங்குவதுடன், பிறவிப் பிணியும் தீரும் என்பது எங்கள் ஊர் மக்களின் நம்பிக்கை’’ என்கிறார்கள் சிலிர்ப்புடன்.

இத்தகு சிறப்புகள் வாய்ந்த அம்பாசமுத்திரம் முக்குண்ட தீர்த்தத் துக்கு நீங்களும் ஒருமுறை சென்று, முறைப்படி புனித நீராடி அருள்மிகு காசிபநாதர், அருள்மிகு புருஷோத்தமர் ஆகிய தெய்வங்களை தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் இன்னல்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

எப்படிச் செல்வது?

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி. மீ தொலைவில் அருள்மிகு காசிபநாதர் கோயிலும், சுமார் 2 கி. மீ தொலைவில் அருள்மிகு புருஷோத்தமர் பெருமாள் கோயிலும் உள்ளன. பெருமாள் கோயிலும் முக்குண்ட தீர்த்தமும் அருகருகில் உள்ளன.

அம்பாசமுத்திரத்தின் புகழ்பெற்ற வண்டிமறிச்சி அம்மன் கோயிலிலிருந்து சின்ன சங்கரன்கோவிலுக்குச் செல்லும் சாலையில் பயணித்தால், சற்று தொலைவில் இடப்புறமாக குறுகலான பாதை ஒன்று பிரியும். அந்தப் பாதையில் - ஆஞ்சநேயர்கோயில் வழியில் பயணித்து, நதியுண்ணி அணைக்கட்டு கற்பாலத்தைக் கடந்து சென்றால், ஓர் அழகிய மண்டபத்தைக் காணலாம்.

தொடர்ந்து, பசுமையான வயல்வெளியை ரசித்தபடியே நடந்தால், பிரமாண்டமான புன்னை மரத்தின் அடியில் அந்த அற்புத தீர்த்தங் களைக் காணலாம். இங்குள்ள மண்டபத்தில்தான் மார்கழி மாதம் சிவன்-பார்வதி திருக்கல்யாணம் நடைபெறும். அதன் பொருட்டு அம்பையின் சிவாலய உற்சவர்கள் இங்கு எழுந்தருள்வார்கள். பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உண்டு.