Published:Updated:

எண்ணாயிரத்தில் பிரதிஷ்டையாகும் ராமாநுஜர் சிலை... வேதபாடசாலையும் உருவாகிறது!

ராமாநுஜர்
ராமாநுஜர்

தமிழகத்திலேயே பழைமையான `வேதக்கல்விக்கூடம்’ அமைந்த இடம் என்பதைப் போற்றும்வகையிலும் இங்கு மடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த மடத்தில்தான் பிரமாண்ட ராமாநுஜர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

8.5 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன ராமாநுஜர் சிலை விழுப்புரம் அருகே உள்ள எண்ணாயிரம் கிராமத்தில் பிரதிஷ்டைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ராமாநுஜர் வந்து சென்றதன் நினைவாகவும், தமிழகத்திலேயே பழைமையான `வேதக்கல்விக்கூடம்’ அமைந்த இடம் என்பதைப் போற்றும்வகையிலும் இங்கு மடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த மடத்தில்தான் பிரமாண்ட ராமாநுஜர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

ராமாநுஜர்
ராமாநுஜர்

திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டி சிற்பக் கலைக்கூடம் மூலமாக சுமார் 5 டன் எடை, எட்டரை அடி உயரம் கொண்ட ராமாநுஜர் சிலை செய்யப்பட்டு எண்ணாயிரம் கிராமத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

`1000 ஆண்டு பழைமையான முருகன் சிலை; புத்தரின் எதிரிகள்!' -ஆச்சர்யம் கொடுத்த சாரநாத் பயணம் #MyVikatan

11 டன் எடை கொண்ட ஒரே கல்லில், 6 சிற்பிகள் தங்கள் உழைப்பின் மூலம் இந்தச் சிலையை வடிவமைத்துள்ளனர். பீடத்துடன் சேர்த்து 7 அடி நீளமும் 4 அடி அகலமும், 8.5 அடி உயரமும் கொண்டது இச்சிலை.

ராமாநுஜர் சிலை நிறுவப்படக் காரணம்

`சோழர்களின் பொற்காலம்’ எனப் போற்றப்பட்ட ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் இந்த இடம் `ஶ்ரீ ராஜராஜ சதுர்வேதி மங்கலம்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. நான்கு வேதங்களையும் ஓதுபவர்களுக்குத் தானமாக வழங்கப்படும் ஊர்களே சதுர்வேதி மங்கலம் எனப்படும்.

ராமாநுஜர்
ராமாநுஜர்
சைவ, வைணவ ஒற்றுமையைப் போற்றும் தசாவதார நடனம்... சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் கோலாகலம்!

ராமாநுஜர் ஒருமுறை திருமலைக்குச் செல்லும் வழியில் தன் அன்புக்குப் பாத்திரமான இரண்டு சீடர்கள் ராஜராஜசதுர்வேதி மங்கலத்தில் இருப்பதை அறிந்து அங்கு வந்தார். அப்போது தன் சீடர்களைச் சந்தித்துவிட்டு அவர்களில் ஒருவரான வரதாச்சாரி இல்லத்தில் சிறிது அமுது அருந்தி மீண்டும் திருமலைக்குப் புறப்பட்டார்.

அக்காலத்தில் வைணவர்களும், சமணர்கள் 8,000 பேரும் இந்த ஊரில் வாழ்ந்து வந்தனர். இருந்தபோதும் இங்கு சமணர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்துள்ளது.

எனவே, இரு சமயத்தினருக்கும் இடையே `எந்த சமயம் பெரியது’ எனும் வாதப்போர் நடந்தது. இந்த வாதப்போரில் தோற்றால் தோல்வியைத் தழுவிய மதத்தினர் அனைவரும் கழுமரம் ஏற்றப்பட வேண்டும் என்பது இரு தரப்பினருக்கான நிபந்தனை. திருமலை செல்ல ஆயத்தமாக இருந்த ராமாநுஜரிடம் `இந்த வாதப்போரில் கலந்துகொண்டு நியாயம் வழங்கும்படி அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி ராமாநுஜரும் கலந்து கொண்டு இருதரப்பினரின் வாதங்களையும் ஆதாரங்களையும் கேட்டார். வாதம் நீண்டுகொண்டே சென்றது. வாதத்தின் முடிவில் `வைணவமே உயர்ந்தது’ எனத் தீர்ப்பளிக்கிறார் ராமாநுஜர்.

ராமாநுஜர்
ராமாநுஜர்
Vikatan

`நிபந்தனையின் காரணமாக சமணர்களைக் கழுமரத்தில் ஏற்ற வேண்டும்' என மக்கள் கூச்சலிடத் தொடங்கினர். உடனே ராமாநுஜர், `பிற உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்பதுதானே வைணவத்தின் முக்கியத்துவம்’ எனக்கூறி சமணர்களான 8,000 மக்களையும் மன்னித்தார். சமணர்கள் 8,000 பேரும் வைணவ மதத்துக்கு மாறினர் என்றும் எனவேதான் இந்த ஊருக்கு எண்ணாயிரம் என்றும் இந்த ஊரின் தல புராணம் கூறுகிறது.

அதுமட்டுமன்றி, ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட எண்ணாயிரம் அழகிய நரசிம்ம பெருமாள் ஆலயத்தில்தான் தமிழகத்திலேயே முதன்முதலாக `வேதக்கல்விக் கூடம்’ தொடங்கப்பட்டு 270 மாணவர்களுடன் 3 ஆசிரியர்களைக் கொண்டு இளநிலை வேதக் கல்வியும், 70 மாணவர்களுக்கு 10 ஆசிரியர்களைக் கொண்டு முதுநிலை வேதக் கல்வியும் போதிக்கப்பட்டுள்ளன என்னும் தகவல்களைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகின்றன. வேதம், வேதாந்தம் மட்டுமன்றி இலக்கியம், அறிவியல் மற்றும் நுண்கலைகளும் இங்கு பாடங்களாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.

ராமாநுஜர்
ராமாநுஜர்
ராமாநுஜர் வழிபட்ட இருகரை ரங்கநாதர்

இவற்றின் நினைவாகவே எண்ணாயிரத்தில் தற்போது ஒரு மடம் நிறுவப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த மடத்தில் ஒரே கல்லால் ஆன ராமாநுஜர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இது பற்றி ஸ்ரீஹரி மடத்தைச் சேர்ந்த நிர்வாகி ஞான தேசிகனிடம் கேட்டோம்.

"ஸ்ரீஹரி மடம் சென்னையில் 30 முதல் 40 ஆண்டுக்காலமாகச் செயல்பட்டு வருகிறது. அதை `நம்பிள்ளை மகா தேசிகன் சுவாமிகள்’ வழிநடத்தி வருகிறார். மடத்தின் மூலமாக, சமூகப் பாகுபாடின்றி வேதம், பிரபந்தம் போன்ற அனைத்தும் இலவசமாக அனைவருக்கும் கற்றுத் தரப்படுகின்றன. அந்தவகையில் எண்ணாயிரத்தில் ராமாநுஜர் வந்து தங்கிச் சென்றதன் நினைவாகவும், அங்கு வேதக்கல்விக்கூடம் ஒன்று அக்காலத்தில் செயல்பட்டு வந்ததன் நினைவாக இங்கு புதிய மடம் ஒன்றும் எட்டரை அடி உயரம் கொண்ட ராமாநுஜர் சிலையும் ஒன்றும் நிறுவப்பட உள்ளன. இதுவரை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராமாநுஜரின் சிலைகளில் இச்சிலைதான் இந்தியாவிலேயே பெரியதாகும்.

எண்ணாயிரம் நரசிம்மர்!
எண்ணாயிரம் நரசிம்மர்!
கோலாகலமாய் நடந்தேறிய திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!

வேதக் கல்விக்கூடத்தின் நினைவாகக் கட்டப்படும் இந்த ஸ்ரீஹரி மடத்தில் வரும்காலங்களில் வேதங்கள் அனைத்து சமூகத்தினருக்கும் சமமாகக் கற்றுத்தரப்படும். மடத்தைக் கட்டும் பணிகள் தற்போதுதான் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வரும் மே மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு