Published:Updated:

இனிதே நடைபெற்றது ஶ்ரீஸூக்த ஹோமம்!

செல்வகடாட்சம் அருளும் ஶ்ரீசூக்த ஹோமம்

பிரீமியம் ஸ்டோரி

ஹோமங்களில் சிறப்பானது திருமகளைப் போற்றி வணங்கிச் செய்யப்படும் ஶ்ரீஸூக்த ஹோமம். இதில் சங்கல்பித்து, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மாலவனின் துணைவியைப் போற்றி வணங்கிட, நீங்காத செல்வமும், நிலையான புகழும், நீண்ட ஆயுளும் பெறலாம் என்கின்றன ஞானநூல்கள்.

இனிதே நடைபெற்றது 
ஶ்ரீஸூக்த ஹோமம்!
இனிதே நடைபெற்றது 
ஶ்ரீஸூக்த ஹோமம்!

அவ்வகையில், நம் வாசகர்களும் அவர் களின் சுற்றமும் நட்பும் அலைமகளின் அருள் சாந்நித்தியத்தையும் அதன் மூலம் சகல நன்மைகளையும் பெறும் விதம், சக்திவிகடனும் ஶ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடமும் இணைந்து வழங்கிய ஶ்ரீஸூக்த ஹோமம் சிறப்புற நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் - கீழப்பாவூரில், ஶ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் 20.9.2021 அன்று நடைபெற்ற இந்த ஹோம வைபவத்தில் சங்கல்பிக்க, வாசகர்கள் பலரும் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து கொண்டார் கள். அன்று காலையில் 9 மணியளவில் ஹோம வைபவம் தொடங்கியது.

இனிதே நடைபெற்றது 
ஶ்ரீஸூக்த ஹோமம்!

வாசகர்களின் பெயர் நட்சத்திரத்துடன், அவர்களின் பிரார்த்தனைகளை உரிய முறை யில் சங்கல்பித்து ஹோம வைபவம் தொடங் கியது. ஶ்ரீஸூக்த ஹோமம், சிறப்பு ஆராதனை களுடன் நடைபெற்ற இந்த வைபவத்தை ஶ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தின் சார்பாக ஶ்ரீமுத்துசுவாமி கனபாடிகள் மிகச் சிறப்பாக நடத்திவைத்தார். எல்லாம்வல்ல ஶ்ரீநரசிம்மரின் அருளாலும், மகாலட்சுமி தாயாரின் அனுக்கிரகத்தாலும் வாசகர்களின் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும்; சகல நன்மைகளும் அவர்களுக்குக் கைகூடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு