Published:Updated:

ஒளி வடிவில் சுக்ரன் வழிபடும் ஸ்ரீவைகுண்டநாராயணர்

ஸ்ரீவைகுண்டநாராயணர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீவைகுண்டநாராயணர்

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, நான்கு வேதங்களையும் கற்றறிந்த 400 அந்தணக் குடும்பங்கள் இங்கு வசித்தன.

ஒளி வடிவில் சுக்ரன் வழிபடும் ஸ்ரீவைகுண்டநாராயணர்

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, நான்கு வேதங்களையும் கற்றறிந்த 400 அந்தணக் குடும்பங்கள் இங்கு வசித்தன.

Published:Updated:
ஸ்ரீவைகுண்டநாராயணர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீவைகுண்டநாராயணர்

திருவாரூர் அருகில் மணக்கால் அய்யம்பேட்டையில் அமைந்திருக்கிறது, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவைகுண்ட நாராயணப் பெருமாள் ஆலயம். இல்லறம் நல்லறமாகவும், தம்பதி ஒற்றுமைக்கும், கருத்து வேறுபாடுகளால் பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேரவும் அருளும் அற்புதத் திருத்தலம் இது என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தின் தலவிருட்சம் அத்தி. தீர்த்தம் ராஜபுஷ்கரணி ஆகும்.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, நான்கு வேதங்களையும் கற்றறிந்த 400 அந்தணக் குடும்பங்கள் இங்கு வசித்தன. அவர்கள், பெருமாளுக்கு அன்றாட பூஜைகளை வெகு சிறப்பாக நடத்திவந்தனர். மாலிக்காபூர் தலைமையிலான அந்நிய படையெடுப்பின்போது, ஊரும் கோயிலும் சிதைக்கப்பட்டன. அந்தணர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். எனினும், தாங்கள் பூஜித்த தெய்வத் திருமேனிகளைப் பாதுகாப்பாக பூமிக்கடியில் புதைத்து வைத்தனர்.

ஒளி வடிவில் சுக்ரன் வழிபடும் ஸ்ரீவைகுண்டநாராயணர்
ஒளி வடிவில் சுக்ரன் வழிபடும் ஸ்ரீவைகுண்டநாராயணர்

காலங்கள் நகர்ந்தன. இந்த ஊரைச் சேர்ந்தவரும், சென்னை மருத்துவக் கல்லூரி யில் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான சிவராமன் என்ற அன்பருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் தோன்றிய இந்தத் தலத்தின் பெருமாள், தனக்கு ஆலயம் அமைக்கும்படி அருள் பாலித் தாராம். அதன்படி அந்த அன்பர், தனது சொந்தச் செலவில் தற்போதைய கோயிலைக் கட்டினாராம்.ஆலயத்தைப் புதுப்பிக்கும் போது, அந்நியப் படையெடுப்பின் காரணமாக பூமியில் புதைக்கப் பட்ட 23 அபூர்வ விக்கிரகங்கள் கிடைக்கப் பெற்று, அவை தற்போது கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன என்பது வியப்பான செய்தி.

புராதனக் காலத்திலிருந்தே மார்கழி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பெருமாளின் திருவடிகளைச் சுக்கிரன் ஒளி வடிவில் வந்து பூஜிப்ப தாக ஐதிகம். மேலும், இத்தலத்தின் பெருமாள் குபேரனாலும் பூஜிக்கப்படுபவர் என்பது நம்பிக்கை. ஆகவே, சுக்கிர தோஷம், பாக்கிய ஸ்தான தோஷம் இரண்டுக்கும் பரிகாரத் தலாமாக இது விளங்குகிறது.

ஒளி வடிவில் சுக்ரன் வழிபடும் ஸ்ரீவைகுண்டநாராயணர்
ஒளி வடிவில் சுக்ரன் வழிபடும் ஸ்ரீவைகுண்டநாராயணர்

மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கூடிய ஆலயம் இது. உள்ளே கொடிமரம், கருடாழ்வார் சந்நிதியை தரிசித்து நுழைந்தால், முன்பண்டபத்தை அடைய லாம். கருவறையில் மூலவர் ஸ்ரீவைகுண்டநாராயணப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். அருகே ஸ்ரீதேவி, பூதேவி உள்ளனர். உற்சவ மூர்த்தி களும் உள்ளனர். சக்கரத்தாழ்வார் தனிச் சந்நிதி கொண்டுள்ளார்; பின்புறம் யோக நரசிம்மர் உள்ளார். மேலும் தும்பிக்கை ஆழ்வார், ஆஞ்சநேயர், நாகர், லட்சுமி குபேரர் சந்நிதிகளும் உள்ளன.

வைகுண்டத்திலிருந்து நேரடியாக மண்ணுலகம் வந்து அருள்பாலிக்கும் பெருமாளே `வைகுண்ட பெருமாள்' என்று போற்றப்படுகிறார். அவர் அருளும் கோயில்கள் வைகுண்டமாகவே திகழ்பவை ஆதலால், இதுபோன்ற ஆலயங்களில் சொர்க்கவாசல் இருப்பதில்லை. அப்படியே, இக்கோயிலிலும் சொர்க்க வாசல் கிடையாது என்கிறார்கள்.

ஒளி வடிவில் சுக்ரன் வழிபடும் ஸ்ரீவைகுண்டநாராயணர்
ஒளி வடிவில் சுக்ரன் வழிபடும் ஸ்ரீவைகுண்டநாராயணர்

இந்த ஆலயத்தின் அர்ச்சகர் ராமசாமி பட்டாச்சார் யரிடம் கோயிலின் மகிமைகள் குறித்து கேட்டோம்.

“சுக்கிர தோஷம் உள்ளவர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய பிரிகாரத் தலம் இது. சுக்கிரன் அதிதேவதையாக வீற்றிருப்பது ஸ்ரீரங்கமாகும். சுக்கிரன் ஈசனை வழிபட்டது கஞ்சனூராகும்.இத்தலத்தில் சுக்கிரன் ஆண்டுதோறும் மார்கழி மாத வெள்ளிக்கிழமைகளில் ஒளி வடிவில் வந்து பெருமாளை வணங்கி தன் சக்தி அனைத்தையும் சமர்ப்பிக்கிறார்.

ஒளி வடிவில் சுக்ரன் வழிபடும் ஸ்ரீவைகுண்டநாராயணர்
ஒளி வடிவில் சுக்ரன் வழிபடும் ஸ்ரீவைகுண்டநாராயணர்

இங்குள்ள பெருமாள் மார்கழியில் இருமடங்கு சக்தியுடன் அருள்பாலிக்கிறார் என்பது ஐதிகம். சுக்கிரன் வழிபடும் பெருமாள் என்பதால் இங்கு வந்து வழிபடுபவருக்குச் சுக்கிர யோகம் கிட்டும். சகல ஐஸ்வர்யங்களிலும் நிறைவு பெற்று வாழ்வார்கள்.

அதுபோல் இத்தலத்தில் வீற்றிருக்கும் யோக நரசிம்மரும் மிகவும் சாந்நித்தியமானவர். தொடர்ந்து 6 வாரங்கள் இங்கு வந்து தேங்காய் உடைத்து, அதில் நெய் விளக்கேற்றி மனமுருக வேண்டிக்கொளவது விசேஷம்.

ஒளி வடிவில் சுக்ரன் வழிபடும் ஸ்ரீவைகுண்டநாராயணர்

அதனால், எண்ணிய காரியம் கைகூடும். மனநிம்மதியும், கலைகளில் தேர்ச்சியும் பெறலாம். திருமணத் தடையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தடைகள் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூடும்; குழந்தை பாக்கியம் கிட்டும், கடன் பிரச்னை தீரும்” என்றார்.

எப்படிச் செல்வது ? திருவாரூர் - கும்பகோணம் மார்க்கத்தில் திருவாரூரிலிருந்து 12 கி.மீ தொலை வில் மணக்கால் அய்யம்பேட்டை உள்ளது. பேருந்து, கார் மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

ஒளி வடிவில் சுக்ரன் வழிபடும் ஸ்ரீவைகுண்டநாராயணர்

தம்பதி ஒற்றுமை மேலோங்க அருளும் எலுமிச்சை வழிபாடு!

கருத்து வேறுபாடுகளால் பிரிந்த தம்பதியினர் இக்கோயிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டால், விரைவில் பிரச்னைகள் நீங்கி வாழ்வில் ஒன்றிணைவார்கள் என்கிறார்கள். இவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து நெய் விளக்கேற்றி வைத்து, எலுமிச்சைப் பழம் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பின்னர் பிரசாதமாக அtந்தப் பழத்தைப் பெற்றுச் சென்று, அதன் சாறினை தம்பதி இருவரும் அருந்தினால், விரைவில் பிரச்னைகள் நீங்கும்; இல்லற ஒற்றுமை மேலோங்கும் என்பது நம்பிக்கை. ``விவாகரத்து வரையிலும் பிரச்னைகள் முற்றிய பல தம்பதியினர் இங்கு வந்து வழிபட்டுப் பலன் பெற்றுள்ளார்கள்'' என்கிறா ஆலய அர்ச்சகர்.