Published:Updated:

பெரியவெளிக்காடு வெக்காளி அம்மன் கோயிலில்... இனிதே நடந்தேறியது நவதுர்கா ஹோமம்!

ஸ்ரீநவதுர்கா ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீநவதுர்கா ஹோமம்

பெரியவெளிக்காடு வெக்காளி அம்மன் கோயிலில்

துர்கையின் ஒன்பது வடிவங்களைக் கலசத்தில் எழுந்தருளச் செய்து நடத்தப்படும் மகிமை மிக்க வைபவம், ஸ்ரீநவதுர்கா ஹோமம். இது சத்ரு ஜயம், பிணிகளைத் தீர்க்கும் வரம், சகல காரியங்களிலும் வெற்றி முதலான பலன்களை அருளவல்லது.

அந்த வகையில் உலக நன்மைக்காகவும், பெருந்தொற்று பாதிப்புகளிலிருந்து மக்கள் விரைவில் மீண்டெழவும், வாசகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் நலன் வேண்டியும் கடந்த அமாவாசை அன்று (16.10.20), வெகு விமர்சையாக நடந்தேறியது, ஸ்ரீநவதுர்கா ஹோமம்

பெரியவெளிக்காடு வெக்காளி அம்மன் கோயிலில்... இனிதே நடந்தேறியது நவதுர்கா ஹோமம்!

சக்தி விகடன் - பெரியவெளிக்காடு அருள்மிகு வெக்காளி அம்மன் சித்தர்பீடம் அறக்கட்டளை இணைந்து, பெரிய வெளிக்காடு ஸ்ரீவெக்காளி அம்மன் ஆலயத்தில் நடத்திய இந்த ஹோமம் குறித்த அறிவிப்பு வெளியானது முதல், நூற்றுக் கணக்கான வாசகர்கள் முன்பதிவு செய்து கொண்டார்கள். ஸ்ரீதுர்கைக்கு உரிய வெள்ளிக் கிழமை - ராகு கால வேளையில் ஸ்ரீநவ துர்கா ஹோமம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெரியவெளிக்காடு வெக்காளி அம்மன் கோயிலில்... இனிதே நடந்தேறியது நவதுர்கா ஹோமம்!

தற்போதைய சூழ்நிலையில் உரிய விதிமுறை களைப் பின்பற்றி, முன்பதிவு செய்துகொண்ட வாசகர்களின் பெயரில் பிரத்தியேக சங்கல்பத்துடன் தொடங்கி அற்புதமாக நடந்தேறியது, ஸ்ரீநவ துர்கா ஹோமம். ஹோமத்துக்கான ஏற்பாடுகளை பெரிய வெளிக்காடு ஸ்ரீவெக்காளி அம்மன் சித்தர்பீடம் அறக்கட்டளை சார்பில் சிறப்பாகச் செய்திருந்தனர். ஹோமம் நிறைவடைந்ததும் அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும் நடந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அமைதியான சூழலில், 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பெரியவெளிக்காடு ஸ்ரீவெக்காளி அம்மன் ஆலயம். இங்கே, வேப்பமரம் வளர்ந் திருக்கும் ஒரு மேடைக்கு முன்பாக புற்றுகளின் நடுவில் நாகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் அம்மனின் சுதை வடிவம் அமைந்துள்ளது. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதுர்கை, வள்ளி தேவசேனா சமேதராக ஸ்ரீமுருகப்பெருமான், அண்ணாமலையார், சனீஸ்வரர், வேதமாதா ஸ்ரீகாயத்ரி, தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் ஆகியோர் பிராகாரத்தில் சந்நிதி கொண்டிருக்கின்றனர்.

பெரியவெளிக்காடு வெக்காளி அம்மன் கோயிலில்... இனிதே நடந்தேறியது நவதுர்கா ஹோமம்!

`வெளிக்காடு வெற்றிச்செல்வி’ என்று பக்தர்கள் போற்றி வழிபடும் அருள்மிகு வெக்காளி அம்மன், உறையூரில் இருப்பதைப் போலவே இங்கும் கூரை இல்லாத சந்நிதியில் அருள்கிறாள். அவளுக்கு முன்பாக மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

உறையூரைப் போலவே இந்தக் கோயிலிலும் அம்மனுக்கு உச்சிக் காலத்தில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பக்தர்கள், ஆலயத்தில் வழங்கப் படும் பிரார்த்தனைச் சீட்டில் தங்களின் பிரார்த் தனையை எழுதி, அம்மனின் திருவடிகளில் வைத்து தியானித்து, பின்னர் சந்நிதிக்கு முன்புள்ள சூலத் தில் கட்டி வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்றும் அமாவாசை தோறும் இங்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்களில் கலந்துகொண்டு வழிபட்டால், நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.

பெரியவெளிக்காடு வெக்காளி அம்மன் கோயிலில்... இனிதே நடந்தேறியது நவதுர்கா ஹோமம்!

கோசாலையுடன் அமைந்திருக்கும் இந்த ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டதால், தற்போது ராஜகோபுரத் துடன் கூடிய திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

எப்படிச் செல்வது?: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து கூவத்தூர் செல்லும் சாலை யில் சுமார் 17 கி.மீ.தொலைவில், விழுதமங்களம் கூட்ரோட்டில் இருந்து அரியனூர் செல்லும் சாலையில் 1 கி.மீ. தொலைவில் அன்னையின் ஆலயம் அமைந்துள்ளது.