Published:Updated:

பிப்.7 தேரோட்டத்துக்குத் தயாராகும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்! - களைகட்டும் தை தேர் திருவிழா

ரங்கநாதர்
ரங்கநாதர் ( srirangaminfo.com )

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் நம்பெருமாள் தை தேர் திருவிழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு தை தேர் திருவிழா கடந்த 30- ம்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், `பூலோக வைகுண்டம்' என்னும் பெருமையைப் பெற்ற திருத்தலம். வைணவர்களின் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான திருத்தலம் இது. பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், `மங்களாசாசனம்' செய்த திருத்தலம். ஏழு பிராகாரங்கள், 21 கோபுரங்கள், 156 ஏக்கர் பரப்பளவு எனப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோயில் இது.

Srirangam
Srirangam

ஶ்ரீமன் நாராயணன் தானே பிரியப்பட்டுத் தோன்றியருளிய எட்டுத் திருக்கோயில்களில் (ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்) பெரும்புகழ்பெற்ற முதன்மைக் கோயில் ஶ்ரீரங்கம்.

வைஷ்ணவப் பேச்சுவழக்கில் ``கோயில்” என்ற சொல் ஶ்ரீரங்கத்தை மட்டுமே குறிக்கும். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரண்டு நதிகளும் மாலையைப் போல் பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் நம்பெருமாள் தை தேர் திருவிழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு தை தேர் திருவிழா கட்ந்த 30- ம்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

Srirangam
Srirangam

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளும் நிகழ்வு நாளை நடக்கிறது. தைத் தேர் திருவிழா முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை பிப்ரவரி 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும்.

நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு தை தேர் மண்டபத்தைச் சென்றடைவார். காலை 6 மணிக்கு தேர், வடம் பிடித்து இழுக்கப்படும். இதில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர்.

Ramanujar
Ramanujar

8-ந்தேதி சப்தாவரணம், 9-ந்தேதி ஆளும்பல்லக்கு உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

பின் செல்ல