Published:Updated:

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் வைகுண்ட ஏகாதசி சிறப்பு படங்கள் #VikatanPhotoAlbum

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் சிறப்பு புகைப்படத் தொகுப்பு.

  • 1/23

    திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அழகிய கோபுரங்கள்

  • 2/23

    வைகுண்ட ஏகாதசியின் பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் நம்பெருமாள் நீள்முடி கொண்டை, வைர அபயஸ்தம், காசி மாலை, முத்து மாலையுடன்

  • 3/23

    பகல் பத்து 2ம் நாள் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, காசு மாலை, வைர அபயஹஸ்தம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்த காட்சி.

  • 4/23

    பகல்பத்து உற்சவத்தின் 3ம் நாள் ரெங்கநாதர் சவுரி கொண்டை, ரத்தின அபய ஹஸ்தம், புஜ கீர்த்தி, லஷ்மி பதக்கம், இருதல பட்சி, சவுக்கார் பதக்கம், அர்த்த சந்திரன், பர்த்திக்கா தாயத்து உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்துள்ள காட்சி.

  • 5/23

    பகல்பத்து 4ம் நாள் வைர அபய அஸ்தம், சவுரி கொண்டை, 16 வடம் முத்து சரம் உள்ளிட்ட திருவாபரணங்களுடன் நம்பெருமாள் காட்சி

  • 6/23

    பகல்பத்து 5ம் நாள் நம்பெருமாள் வைர அபய அஸ்தம், சவுரி கொண்டை, ரத்தின கிளி, விமான பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்களும் காட்சி

  • 7/23

    பகல்பத்து 6ம் நாள் நம்பெருமாள் முத்து சாயக்கொண்டை, மகரஹண்டி, மார்பில் மகாலட்சுமி அழகிய மணவாளன் பதக்கம், முத்து அபயஹஸ்தம் உள்ளிட்ட திருவாபரணங்களுடன் காட்சி

  • 8/23

    பகல்பத்து 7ம்நாள் நம்பெருமாள் ஆண்டாள் சாயக்கொண்டை, வைர அட்டிகை, பவளமாலை, 16 வடம் முத்துமாலை, வைர அபயஹஸ்தம், நவரத்தின காதுகாப்பு, அலங்காரத்தில்

  • 9/23

    பகல்பத்து 8ம் நாளில் முத்து வளைக்கொண்டை, மகாலெட்சுமி பதக்கம், முத்து பவளமாலை, தங்ககாசு மாலை, ரத்தின அபயஹஸ்தம் ஆகிய அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி

  • 10/23

    பகல்பத்து 9ம் நாளில் முத்து அபயஹஸ்தம், முத்து சட்டை, முத்து மாலை, முத்துதிருவடி, உள்ளிட்ட ஆபாரணங்கள் அணிந்து முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி

  • 11/23

    மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்

  • 12/23

    வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்கவாசல் திறப்பு வைபவம் 2018

  • 13/23

    ராப்பத்து உற்சவத்தின் 2ம் நாளில் நம்பெருமாள் சவுரிக்கொண்ட, முத்துமாலை, பவளமாலை, ரத்தின அபயஜ்ஸ்தம், மார்பில் மகாலட்சுமி பதக்கம், பின்புறம் மஹரி பதக்கம் அணிந்து காட்சி

  • 14/23

    ராப்பத்து உற்சவத்தின் 3ம் நாளில் நம்பெருமாள் முத்துசரம், மைசூர் ராஜா பதக்கம், காசுமாலை, இருதல பட்சி, வைர ஒட்டியாணம், சாய சவுரி கொண்டை, புஜ கீர்த்தி, வைர அட்டிகை, முத்து கொச்சு ஆகிய திருவாபரணங்கள் அணிந்து காட்சி

  • 15/23

    ராப்பத்து உற்சவத்தின் 4ம் நாளில் பவளமாலை, லட்சுமி பதக்கம், வைரகிரீடம் ஆகிய திருவாபரணங்கள் அணிந்து காட்சி

  • 16/23

    ராப்பத்து உற்சவத்தின் 5ம் நாளில் நம்பெருமாள் வைரமுடி அலங்காரம், வைர அபய ஹஸ்தம், அண்டபேரண்ட பட்சி, காசு மாலை, முத்து ஆரம் ஆகிய திருவாபரணங்கள் அணிந்து காட்சி

  • 17/23

    ராப்பத்து உற்சவத்தின் 6ம் நாளில் நம்பெருமாள் நீள்முடிகிரீடம், ரத்தன அபய ஹஸ்தம், விமான பதக்கம், அடுக்கு பதக்கம், 16வடம் முத்துச்சரம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து காட்சி

  • 18/23

    ராப்பத்து உற்சவத்தின் 7ம் நாளில் நடைபெற்ற நம்பெருமாளின் கைத்தல சேவை

  • 19/23

    ராப்பத்து உற்சவத்தின் 8ம் நாளில் திருமங்கை மன்னன் வேடுபரி நிகழ்ச்சி

  • 20/23

    ராப்பத்து உற்சவத்தின் 9ம் நாளில் நம்பெருமாள் கல் பதித்த பாண்டியன் கொண்டை, வைர அபயஸ்தம், அடுக்கு பதக்கங்கள், ரெட்டவடம் முத்தாரம், பவளமாலை ஆகிய திருவாபரணங்கள் அணிந்து காட்சி

  • 21/23

    நம்பெருமாள் தீர்த்தவாரி

  • 22/23

    நம்பெருமாள் மோட்சம்

  • 23/23

    மின்னொளியில் ஸ்ரீரங்கம் கோயில் கோபுரங்கள்