Published:Updated:

`திருப்பதியில் நீட்டிக்கப்பட்ட தடை!’ -ஆர்ஜித சேவைகளுக்கு பணம் கட்டியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருப்பதி
திருப்பதி ( TTD PHOTO )

கல்யாணோத்ஸவம், சகஸ்ர தீப அலங்கார சேவா போன்ற ஆர்ஜித சேவைகளுக்கு டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கான கட்டணத் தொகையைத் திரும்பத்தரும் பணியை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.

திருப்பதியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு மே, மாதம் 3 -ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த மார்ச் மாதம் 17 - ம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்தது.

Homam
Homam
TTD PHOTO

திருப்பதி வேங்கடேசப் பெருமாளை சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தாலும், திருமலை திருப்பதி கோயிலில் நடைபெறவேண்டிய பூஜைகள், அபிஷேகங்கள், யாகங்கள் யாவும் வழக்கம்போல் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு கடந்த ஏப்ரல் மாதம் 14 -ம் தேதி முடிவடைந்த நிலையில், அது மேலும் மே 3 - ம் தேதி வரை தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மே 3 - ம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்வதற்கான முக்கிய அறிவிப்பு:

Online Tickets
Online Tickets
TTD PHOTO

கடந்த மார்ச் மாதம் 13 - ம் தேதி தொடங்கி, மே மாதம் 31 - ம் தேதி வரை திருமலையில் நடைபெறும் கல்யாணோத்ஸவம், சகஸ்ர தீப அலங்கார சேவா போன்ற ஆர்ஜித சேவைகளுக்கு டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கான கட்டணத் தொகையைத் திரும்பத் தரும் பணியை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.

எனவே, இந்த சேவைகளுக்குப் பதிவுசெய்திருந்தவர்கள், தங்களின் பெயர், பதிவுசெய்த சேவா டிக்கெட்டின் விவரம், வங்கிக் கணக்கு எண், ஐஎப்எஸ்சி கோடு, ஆகியவற்றை helpdesk@tirumala.org என்ற மெயிலில் விவரங்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பக்தர்கள் செலுத்திய தொகை மீண்டும் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

Food Pockets
Food Pockets

ஏழைகளுக்கு நாள்தோறும் 70 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள்:

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், தினமும் 70 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் ஏழைகளுக்காக இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான உணவைத் தயாரிக்கும் பணியில் 750 பேர் ஷிஃப்ட் முறையில் திருச்சானூரில் பணியாற்றிவருகின்றனர். காலை 3 மணியிலிருந்து 11 மணி வரையிலும் மதியம் ஒரு மணியிலிருந்து 8 மணி வரையிலும் என இரண்டு ஷிஃப்ட்டுகளில் இதற்கான பணியாளர்கள் உணவைத் தயாரித்து வழங்கி வருகின்றனர் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு