Published:Updated:

திருமலை திருப்பதி பிரம்மோற்சவம்! - ஆண்டாள் மாலை, திருக்குடைகள்... பக்தர்கள் ஆரவாரம்! #Tirupati

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்குச் சாத்திய மாலையை, அங்கிருந்து எடுத்து வந்து திருமலையிலிருக்கும் மலையப்பசுவாமிக்குச் சமர்ப்பிப்பது பிரம்மோற்சவம் தோறும் நடைபெறும் சிறப்பான நிகழ்ச்சி.

Tirupati
Tirupati

திருமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவம் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இதில் நாடு முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்துவருகிறார்கள்.

Tirupati
Tirupati

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்குச் சாத்திய மாலையை, அங்கிருந்து எடுத்துவந்து திருமலையிலிருக்கும் மலையப்பசுவாமிக்குச் சமர்ப்பிப்பது பிரம்மோற்சவம் தோறும் நடைபெறும் சிறப்பான நிகழ்ச்சி.

ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலையை தனிக்கூடையில் வைத்து மலர்கள் வாடாமலிருக்கும்படி கோட்டைக் கட்டி எடுத்துச்செல்வார்கள்.

Andal Malai from Srivilliputhur
Andal Malai from Srivilliputhur

பல்வேறு மலர்களால் கட்டப்பட்ட இந்த மாலையை மேளதாளங்கள் முழங்க திருமலைக்குக் கொண்டுவந்து பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக சேர்த்தனர்.

திருமலைக்கு வந்த ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் மாலையை ஜீயர் பூஜைகள் செய்து நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவந்து வழங்கிட திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் அதைப் பெற்றுக்கொண்டார்.

Umbrellas from Chennai
Umbrellas from Chennai

பிரம்மோற்சவத்தின்போது, வேங்கடேசப் பெருமாளுக்கு திருக்குடைகள் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி பன்னெடுங்காலமாக சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு பிரம்மோற்சவத்துக்கும் திருக்குடைகள், சென்னை, தேவராஜ முதலித் தெருவில் இருக்கும் அருள்மிகு சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து ஊர்வலமாக அயனாவரம், பெரம்பூர், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், பாடி அம்பத்தூர், திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு திருப்பதி பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

Umbrellas from Chennai
Umbrellas from Chennai

ஹிந்து தர்மார்த்த சமித்தியின் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜியின் தலைமையில் எடுத்துவரப்பட்ட 11 திருக்குடைகளும் திருமலை திருப்பதி தேஸ்தான நிர்வாக துணை அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டியிடம் வழங்கினார். இவற்றில் இரண்டு குடைகள் கார்த்திகை மாதம் திருச்சானூரில் நடக்கும் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவத்தில் பயன்படுத்தப்படும்.