Published:Updated:

ஶ்ரீராமகிருஷ்ணர் செப்பனிட்ட சிலை!

ஶ்ரீராமகிருஷ்ணர், ஶ்ரீரமணர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராமகிருஷ்ணர், ஶ்ரீரமணர்

ஆன்மிகத் தகவல்கள் - யாழினி பர்வதம்,

ஶ்ரீராமகிருஷ்ணர் செப்பனிட்ட சிலை!

ஆன்மிகத் தகவல்கள் - யாழினி பர்வதம்,

Published:Updated:
ஶ்ரீராமகிருஷ்ணர், ஶ்ரீரமணர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராமகிருஷ்ணர், ஶ்ரீரமணர்

மேற்குவங்க மாநிலம், தட்சிணேசுவரத்தில் 1855-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது. அன்று கோகுலாஷ்டமி தினம். தட்சிணேசுவரத்தில் ராதாகோவிந்தர் கோயிலில் உச்சிக்கால பூஜையும் நைவேத்தியமும் நிறைவுற்றது. க்ஷேத்திரநாதர் கோவிந்தரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்று பள்ளியறையில் வைக்கும்போது தடுமாறி கீழே விழுந்தார் அர்ச்சகர்.

ஶ்ரீராமகிருஷ்ணர் 
செப்பனிட்ட சிலை!

அதனால் விக்கிரகமும் விழுந்து அதன் கால் பின்னமுற்றது. நிர்வாகிகள் பதறிப்போய் பண்டிதர்களை அழைத்து ஆலோசித்தனர். ராமகிருஷ்ணரிடம் கருத்து கேட்கலாம் என்று முடிவானது.

அவரிடம் சென்று விஷயத்தைச் சொல்லி தீர்வு வேண்டினார்கள். ராமகிருஷ்ணர், ``புதிய விக்கிரகம் வேண்டாம். பழைய விக்கிரகத் தையே சரி செய்துவிடலாம்’’ என்றார். அவரே, உடைந்த விக்கிரகங் களைச் செப்பனிடுவதில் தேர்ந்தவர்தான். ஆகவே, உடைந்த விக்கிரகத்தைச் செப்பனிட்டு, பூஜைகள் தொடர உதவி செய்தார்.

அந்தக் கோவிந்தர் விக்கிரகம் இன்றளவும் தட்சிணேசுவரம் கோயிலில் பூஜிக்கப்பட்டு வருகிறது. உடைந்து சீர்செய்யப்பட்டது என்று தெரியாத அளவுக்கு அற்புதமாக அந்த விக்கிரகத்தைச் செப்பனிட்டுள்ளார் ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

ஶ்ரீராமகிருஷ்ணர் 
செப்பனிட்ட சிலை!

ரமணர் தந்த விளக்கம்!

ருமுறை ரமண மகரிஷியை தரிசிக்க ஆந்திர மாநிலத்துப் பாடகி ஒருவர் வந்தார். அவர் பகவானிடம் `சங்கீதத்தாலேயே முக்தி அடைய முடியுமா? தியாகராஜர் போன்ற மகான்கள் சங்கீதத்தைப் பாடித்தானே முக்தி அடைந்தார்கள்?’ என்று கேட்டார். ரமணர் இப்படிப் பதில் சொன்னார்: ``தியாகராஜர் போன்ற மகான்கள் பாடிப் பெறவில்லை; பெற்றதைப் பாடினார்கள். அதனால்தான் அந்த சங்கீதம் ஜீவனுள்ளதாக நிலைத்து நிற்கிறது!’’

பாரத தாயே வணங்குகிறேன்!

ண்டரிபுரத்தில் சகஸ்ரநாம் மந்திர் என்ற புதுமையான கோயில் உள்ளது. அந்தக் கோயிலைச் சுற்றிலும் உள்ள இடங்களில் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பாடுபடும் உழவர்கள், தொழிலாளர்கள், ராணுவ வீரர்கள் ஆகியோரின் சிற்பங்களை அமைத்திருக்கிறார்கள். இங்குள்ள முதல் கோயிலில் பாரத மாதா அருள்பாலிக்கிறாள். அங்கு, `அம்மா! பாரத தாயே உன்னை வணங்குகிறேன். நான் உனது பணிவான மகன்’ என்று நாம் போற்றி பிரார்த்திப்பதற்கு ஏற்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.