Published:Updated:

திருக்கோயில் திருவுலா - 5 - பழையனூர் நீலி!

பழையனூர் மண்டபம்
பிரீமியம் ஸ்டோரி
பழையனூர் மண்டபம்

எது எப்படியோ, வேறெங்கும் காண முடியாத பெரும் வரலாற்றுப் பொக்கிஷம் இது என்பது மட்டும் புரிகிறது.

திருக்கோயில் திருவுலா - 5 - பழையனூர் நீலி!

எது எப்படியோ, வேறெங்கும் காண முடியாத பெரும் வரலாற்றுப் பொக்கிஷம் இது என்பது மட்டும் புரிகிறது.

Published:Updated:
பழையனூர் மண்டபம்
பிரீமியம் ஸ்டோரி
பழையனூர் மண்டபம்
பழையனூர் மண்டபம்
பழையனூர் மண்டபம்

பழையனூர் செல்லாமல் ஆலங்காட்டு திருத்தல யாத்திரை நிறைவு பெறாது என்பார்கள். நாமும் பழையனூருக்குச் சென்றோம். இடையில் திருவாலங்காட்டு மயானத்தை அடைந்தோம். அங்குதான் மூவாயிரம் ஆண்டுகளைக் கடந்த ஒரு தொல்பொருள் சின்னத்தைக் கண்டோம்.

‘நீலிப்பாறை’ என்று மக்கள் அழைக்கும் இந்தப் பாறை, மிகப் பழைமையான முதுமக்கள் தாழி என்றே வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. மூன்று பிரமாண்ட பாறைப் பலகைகள் நெட்டுக் குத்தலாக வைக்கப்பட்டிருக்க, அதன் மேற்பகுதியில் பாறைப் பலகை ஒன்று மூடிபோல் பொருத்தப்பட்டு, ஓர் அறை போல் அமைந்துள்ளது.

நீலிப்பாறை
நீலிப்பாறை

ற்போது ஒரு பக்கத்தில் பாறைப் பலகை இல்லை; ஆகவே அறை போல் காட்சியளிக்கிறது. இதில் பலரின் சடலங்கள் ஒன்றாக வைக்கப்பட்டு இருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. எனினும் உள்ளூர் மக்கள் பலரும், `பழையனூர் நீலியின் எரிந்துபோன சடலத்தை இங்கேதான் இங்கே பிரமாண்ட வடிவில் அடக்கம் செய்து சாந்திப் படுத்தினார்கள்’ என்றே சொல்கிறார்கள்.

எது எப்படியோ, வேறெங்கும் காண முடியாத பெரும் வரலாற்றுப் பொக்கிஷம் இது என்பது மட்டும் புரிகிறது. இதன் வழியே பழையனூரின் தொன்மமும் தெரிகிறது. அங்கிருந்தும் கிளம்பிச் சென்று திருவாலங்காடு பேருந்து நிலையத்தைக் கடந்தோம். அங்கிருந்தே பழையனூர் கிராமம் தொடங்கியது.

காரைக்கால் அம்மையின் காலத்திலேயே பழையனூர் பெரும் ஊராகவும், திருவாலங்காடு மயானக்காடாகவும் இருந்து வந்துள்ளது என்பதைத் திருமுறைப் பாடல்களில் காண்கிறோம். அதுவும் பழையனூர் மற்றும் நீலியின் கதையைச் சொல்லியே திருவாலங்காடு சுட்டிக் காட்டப்படுகிறது!

“வஞ்சப்படுத்து ஒருத்தி வாணாள்கொள்ளும் வகைகேட்டு அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே.”

திருஞானசம்பந்தரின் திருவாலங்காடு பதிகத்தின் முதல் பாடலிலேயே இவ்வாறு அமைந்துள்ளது. பழையனூர் என்றாலே நீலியின் ஞாபகம் நமக்கு வந்துவிடுகிறது. திருமுறைகளில் மட்டுமல்ல, உமாபதி சிவாசார்யர் எழுதிய சேக்கிழார் புராணம், தொண்டை மண்டல சதகம், திருக்கை வழக்கம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களிலும் நீலி உலா வருகிறாள்.

கர்நாடகாவில் கரிராஜன் கதையிலும், கேரளத்தில் நீலி யட்ச கானம், உண்ணு நீலி சந்தோசம் ஆகிய கதைகளிலும் நீலி வருகிறாள். சபரி மலை உள்ளிட்ட பல இடங்களில் நீலி மலை, நீலி ஏற்றம், நீலிக் குன்று போன்ற அபாயகரமான இடங்கள் நீலியின் பெயராலேயே வழங்கப்படுகின்றன.

சமண இலக்கியமான நீலகேசியில் கொடுமையானபேயாகவே நீலி வர்ணிக்கப்படுகிறாள். ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன், சோழ மரபில் தோன்றிய சமந்தபத்திரர் எனும் சமணத் துறவி எழுதிய ரத்தின கரண்டக சிராவகாச்சாரம் என்ற நூலிலும் நீலி வருகிறாள்.

தென் இந்தியா மட்டுமன்றி வடஇந்தியாவின் பல பகுதிகளிலும் நீலியின் கதை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வளவு ஏன், ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள், பர்மிய தமிழர்களிடையேயும் நீலியும் அவள் குறித்த தகவல்களும் பிரசித்தம்.

திருக்கோயில் திருவுலா - 5 - பழையனூர் நீலி!

ன்றும் பழையனூரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நீலியின் கதையை மெய்ப்பிக்கும் பல இடங்கள் உள்ளன. ஆலங்காட்டில் ஈசனும் காளியும் விசேஷம் என்றால், பழையனூரின் அடையாளமாக நீலி இருந்து வருகிறாள். இவ்வூரில் மிகப் பழைமையான இரண்டு சிவாலயங்களும் உள்ளன.

தொன்மூர், காளங்காடு, பழையனூர், பழகை மாநகர், பழனை, பழமூதூர், வேளாமூதூர் என்றெல்லாம் போற்றப்பட்ட பழையனூர் வேளாண்மையையும், வேளாளர்களையும் அதிகம் கொண்ட ஊர். பழனம் என்றாலே வயல்வெளி நிறைந்த ஊர் என்றே பொருள்.

நீலிப் பாறையைக் கண்ட நாம், அடுத்து நீலியின் பாதம் எனப்படும் இடத்துக்கு வந்தோம். இங்கு எழுப்பப்பட்டுள்ள சிலையைக் கண்ட பிறகு, அருகிலிருக்கும் நீலிக்குளத்துக்குச் சென்றோம். இந்தக் குளத்தின் கரையில்தான் செய்த சத்தியத்தின்படி 70 வேளாளர்கள் அக்னியில் குதித்து தீ குளித்தார்களாம். இதற்கு சாட்சியாக, குளத்தின் எதிரிலேயே எழுந்தருளி உள்ளார் ‘சாட்சி பூதேஸ்வரர்’.

பழையனூர் எங்கும் பரவிக் கிடக்கின்றன நீலியின் எச்சங்கள். ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் ஒரு பெண்ணின் கதை நம்முள் நிலைத்திருக்குமா? நிலைத்திருக்கிறதே... எனில், அந்தக் கதை எவ்வளவு ஆழமாக உருக்கமாக மக்களால் சொல்லப்பட்டிருக்கும். கதையோடு அந்தக் காலத்து மக்களின் வாழ்க்கை முறையை, அவர்களின் சத்திய வாழ்க்கையையும் எடுத்துச்சொல்வதால்தான், ஆண்டுகள் பல கடந்த பிறகும் சாஸ்வதமாக உலா வருகிறது நீலியின் கதை என்றே சொல்லலாம்.

பல ஊர்களில் பல இடங்களில் பல வடிவங்களில் நீலியின் கதை சொல்லப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் சொல்லும் கண்ணீர்க் கதையை நாம் பார்ப்போம்.

திருக்குளம்
திருக்குளம்

காஞ்சிபுரத்தில் வசித்த தனவணிகர் ஒருவரின் செல்ல மகள் நீலி. அவளை வணிக இளைஞன் ஒருவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தனர். நீலிக்கு ஏற்ற அழகு கொண்ட அவளின் கணவன், குணத்தில் குறையோடு இருந்தான். ஆடல் கலையில் விருப்பம் கொண்டிருந்தவன், அழகில் திருமகளாக இருந்த நீலியை விட்டுவிட்டு, பரத்தையர்களை நாடி சென்று வந்தான்.

கணவனையே தெய்வம் என்று தொழுது வந்த நீலி மகள் இதைக் கண்டுகொள்ளவில்லை. சூது வாது ஒன்றும் அறியாத அந்தக் குலமகள் கணவன் சொல்லே கடவுளின் திருவாக்கு என நம்பி வாழ்ந்தாள்.

நாள்கள் நகர்ந்தன. பரத்தை ஒருத்தியின் துர்போதனையால் மதி கெட்டுப் போன நீலியின் கணவன் அந்தப் பாதகத்தைச் செய்தான். நீலியின் நகைகளுக்காகவும் சொத்துகளுக்காகவும் அவளை வஞ்சித்து நடுக்காட்டில் வைத்துக் கொன்றுவிட்டான்.

துள்ள துடிக்க உயிர்விட்ட நீலியின் ஆன்மா, நிலை கொள்ளாமல் தவித்தது. காஞ்சியின் எல்லை எங்கும் திரிந்து அழுது புலம்பியது. உயிரோடு இருந்தபோது தெரியாத நல்லவை கெட்டவை அனைத்தும் இப்போது தெரிந்தன. தான் தெய்வம் என்று போற்றிக் கொண்டாடிய கணவன் செய்த துரோகம் நீலியை ஆங்காரம் கொள்ளவைத்தது.

எந்தத் தவறும் செய்யாத தன்னைக் கழுத்தறுத்துக் கொன்ற கொடியவனைப் பழிவாங்க துடித்தாள். நல்ல ஆன்மாக்கள் பலவும் அமைதிப்படுத்தியும் அடங்கவில்லை அவள். எனினும், அவனுடைய அந்தப் பிறவியில் அவனை அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. காத்திருந்தாள் நீலி.

அடுத்த பிறவியிலும் அவன் காஞ்சிபுரத்திலேயே பிறந்தான். ஊழ் வினை அவனைத் தொடர, நீலி அவனைப் படாதபாடு படுத்தினாள். பயந்துபோன அவன், ஒரு மந்திரவாதியை நாடினான். மந்திர வாள் ஒன்றைப் பெற்று அதோடு உலாவினான். அவனை நெருங்க முடியாத நீலி ஒரு தந்திரம் செய்தாள்.

அவள் வஞ்சம் தீர்ந்ததா? அவளுக்காக 70 வேளாளர்கள் ஏன் தீ குளித்தார்கள்... தொடர்ந்து பார்ப்போம்!

- தொடரும்...

ஶ்ரீகாந்திமதியம்மை
ஶ்ரீகாந்திமதியம்மை

கணவன் உண்ட பிறகே மனைவி...

நெல்லையப்பர் கோயிலில் அன்றாடம் உச்சி காலத்தில் காந்திமதி அம்மை, நெல்லையப்பருக்கு மதிய உணவு பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதனால் இன்றும் சிவாச்சார்யர்கள் விதவிதமான உணவை சிவன் சந்நிதிக்குக் கொண்டு சென்று படைத்துவிட்டு, அதே உணவை காந்திமதி அம்மை சந்நிதிக்கும் கொண்டு செல்கிறார்கள். அதாவது கணவன் உண்டு முடித்த பிறகே மனையாள் உண்பதாக இந்த ஐதீகம் கடைப்பிடிக்கப்படுகிறது.