பிரீமியம் ஸ்டோரி

ஒரு காலத்தில் நீதி போதனைக்கு என்றே வாரத்தில் ஒரு நாள் பள்ளிகளில் வகுப்பு இருக் கும். ஆசிரியர் கதைகள் சொல்வார். வாழ்வியலின் முக்கியக் கூறுகளைப் புரிந்துகொள்ள வும், மாணவர்கள் தங்களைத் தனித்துவ திறமையோடு வளர்த்துக்கொள்ளவும் அந்த வகுப்பு அற்புத வழிகாட்டியாக இருந்தது.

உண்மையும் கடமையும்!

இன்றைய நவீன யுகம் அந்த வகுப்பை காணாமல் அடித்து விட்டது. அப்படி ஒரு வகுப்பில் என் ஆசிரியர் சுப்பிர மணியம் சார் சொன்ன தகவல் இது...

ஆரம்பப் பாடம். வரிசையாகப் பாண்டவர்களும் கௌரவர்களும். யுதிஷ்டிரர், துரியோதனன், பீமன், துச்சாதனன், அர்ஜுனன்... என்கிற வரிசை. எதிரே ஆசிரியர் துரோணர். பாடம் தொடங்குகிறது. `சத்யம் வத; தர்மம் சர’ என்ற வாக்கியத்தை முன்மொழிகிறார் ஆசிரியர்.

இதன் பொருள், `உண்மையே பேசு; கடமையைச் செய்.’ முதலில் அமர்ந்திருந்தவன் தருமன். அவனால், அந்த வாக்கியத்தை உடனே திருப்பிக் கூற இயல வில்லை; தடுமாறினான். அவனுக்கு அடுத்திருந்த துரியோதனன் அட்சரம் பிசகாமல் அழகாக அதைச் சொன்னான். தருமனை அடுத்த நாள் வந்து அந்த வாசகத்தைச் சொல்லுமாறு பணித்தார் ஆசிரியர். மறுநாளும் அந்தப் பாடத்தை தருமனால் சொல்ல முடியவில்லை. தொடர்ந்து பல நாள்களாக அந்தச் சிறு வாக்கியத்தை அவனால் சொல்லவே முடியவில்லை.

ஆனால் பிற்காலத்தில் தருமன் இதுகுறித்து நினைவுகூர்கிறபோது, `இந்த முதல் பாடத்தில் தேர்ச்சி பெற என் வாழ்க்கை முழுவதையுமே அர்ப்பணித்தேன்’ என்கிறான். ஏனென்றால் அந்தப் பாடத்தின்படி, தருமன் கடைசி வரை உண்மையே பேசினான். தன் கடமையை நூலிழை பிசகாமல் செய்தான். ஆக, பாடம் என்பது வெறும் வெற்று வார்த்தை அல்ல; வெறும் மனப்பாடப் பகுதியல்ல; அதைக் கடைப்பிடிப்பது.

ண்மையும் கடமையும் இன்று காணக் கிடைக்காதவை. புதிதாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். பொழுது போகாமல், தன் தொகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்துக்குச் சென்றார்.

அந்த ஊர்ப் பெரிய தலையிடம், ``உங்களுக்கு என்ன வேணும்?’’ என்று கேட்டார்.

ஊர்ப் பெரியவர், ``ஐயா எங்களுக்கு ரெண்டே ரெண்டு பிரச்னைதாங்கய்யா... முதல் பிரச்னை ஆஸ்பத்திரி... அது இருக்குங்கய்யா... ஆனா, டாக்டர்தான் இல்லை’’ என்றார்.

உடனே போனை எடுத்தார் எம்.எல்.ஏ. யாருடனோ பேசினார். பிறகு ஊர்ப் பெரியவரிடம் சொன்னார்... ``கவலையேபடாதீங்க. நாளைக்கே உங்க ஊர் ஆஸ்பத்திரிக்கு டாக்டர் வந்துடுவாரு. சரி, உங்க ரெண்டாவது பிரச்னை என்ன?’’

``ரெண்டாவதா சார்... இந்த ஊர்ல செல்போன் கவரேஜ் மட்டும் கிடைக்கவே மாட்டேங்குதுய்யா... நீங்கதான் ஏதாவது பண்ணனும்..!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு