Published:Updated:

கண்டான் கழல் அடியை!

ஆன்மிகச் சிறுகதை: சக்திதர், சென்னை-61

பிரீமியம் ஸ்டோரி

இந்த உலகில் யமனைக் கண்டு அனைவரும் அஞ்சுவர். என்னதான் தர்மவானாக இருந்தாலும் யார்தான் அவனைப் பாராட்டுவார்கள்?! ஆனால் அப்பர் பிரான் மனமாரப் பாராட்டுகிறார். யமன் ஒரு தந்திரம் செய்து இந்தப் பிரபஞ்சத்தில் யாரும் அடையாத அறியாத ஒன்றை அடைந்தான்; அறிந்து கொண்டான் என்கிறார்.

அது என்ன என்கிறீர்களா... அதுதான் ஈசனின் திருவடி!

கண்டான் கழல் அடியை!

சனின் அடியும் முடியும் காண விஷ்ணும் பிரம்மனும் முயன்று தோற்றனர். அப்படிப்பட்ட சிவ பெருமானின் திருவடியை அறிய வேண்டுமென்றால், பல யுகங்கள் தவம் செய்ய வேண்டும். அல்லது அவரே மனம் கொண்டு தன்னை வெளிப்படுத்த வேண்டும்.

அதனால் அதை சாதிக்க யமன் ஒரு யோசனை செய்தானாம்!

மார்க்கண்டேயனின் உயிரைக்கவந்து செல்கிற தருணம். அவனோ சிவபூஜை செய்கிறான். சிவபூஜை செய்பவரைப் பிடித்துச் செல்ல யமனின் மனம் தயங்கியது. கடமையோ தூண்டியது. குறித்த காலத்தில் அங்கு தோன்றினான். பாலகன் மார்க்கண்டேயனோ யமனைக் கண்டு அஞ்சினான். பயத்தில் அருகிருந்த சிவத்தைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

இதுவரை தயங்கி நின்ற யமனுக்கு மனதில் ஒரு திட்டம் உதித்தது. தன் பாசக்கயிற்றை எடுத்தான். பாலகன் மேல் வீசினான். அது சிவன் மேலும் விழுந்தது. சிவம் வெளிப்பட்டது. தன் திருப்பாதத்தால் யமனை உதைத்தது. ஹரியும் பிரம்மனும் அறியமுடியாத திருப்பாதத்தைக் கண்டான் யமதருமன்; இந்தப் பிரபஞ்சத்தில் யாருக்கும் கிட்டாத பேறுபெற்றான். இதைத்தான் திருநாவுக்கரசர்...

`மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று, கீழ் இடத்து
மாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும்
பாலன்மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்
காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே'

என்று பாடுகிறார். யமதருமன் பெற்றது தண்டனையா என்ன... அது திருவடி தீட்சை அல்லவா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு