ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

வினைகள் நீங்கட்டும்

 ஶ்ரீசுப்ரமண்ய மூல மந்திர மகா ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீசுப்ரமண்ய மூல மந்திர மகா ஹோமம்

இனிதே நிறைவு பெற்றது ஶ்ரீசுப்ரமண்ய மூல மந்திர மகா ஹோமம்

அசுரர்களால் ஏற்பட்ட ஆபத்துக்கள் நீங்க, தேவர்கள் அனைவரும் கூடி கந்தசஷ்டி முதல் நாள் தொடங்கிச் செய்தது ஶ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம். இதனால் கந்த சஷ்டியின் 6-ம் நாள் தீயவர்கள் ஒழிந்து மண்ணும் விண்ணும் நலம் பெற்றன. ஆம், சகலருக்கும் வேண்டியதை அருளக் கூடியது ஶ்ரீசுப்ரமண்ய மூல மந்திர மஹாஹோமம்.

முருகப்பெருமான் செவ்வாயின் அதிபதி என்பதால் இந்த ஹோமம் செய்தால், வீண் விரயம், கடன், திருமணத்தடை போன்றவை நீங்கும்; காரிய ஸித்தி உண்டாகும்; வீண் அச்சங்கள் விலகும். பொன்-பொருள் சேரும்; சோதனைகள் விலகும். திருமணப் பாக்கியம், சந்தானப் பேறு போன்ற மங்கலப் பிரார்த்தனைகள் நிறைவேறும். அற்புதமான இந்த பலன்களை வாசகர் களும் பெற்று மகிழும் விதம், ஐப்பசித் திங்கள் கந்த சஷ்டி ஆறாம் நாளில் ஞாயிற்றுக்கிழமை அன்று (அக்டோபர் 30-ம் தேதி) சுப்ரமண்ய மூல மந்திர மஹாஹோமம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திண்டிவனம், கோட்டைமேடு, செந்தமிழ் நகர் ஞான வேல் கோட்டம் நவசித்தர் பீடத்தில் உள்ள அறுபடை வீடு ஆலயத்தில் - சூர சம்ஹார நாளில், சக்தி விகடனும் ஆலய நிர்வாகமும் இணைந்து நடத்திய ஶ்ரீசுப்ர மண்ய மூலமந்திர மஹாஹோமம் நடைபெற்றது.

கோட்டைமேடு ஞானவேல் கோட்டம் கோயில்
கோட்டைமேடு ஞானவேல் கோட்டம் கோயில்

முருக சித்தர் என்றும், வேல் சித்தர் என்றும் பக்தர்களால் பரவசத்தோடு அழைக்கப்பட்ட திருநீலகண்ட சுவாமிகளால் ஞானவேல் கோட்டம் என்னும் இம்முருகவேள் ஆலயம் உருவாக்கப்பட்டது. இங்கு சுமார் 11 அடி உயரமுள்ள வேல் முருகப்பெருமானின் திருப்பாதங்களின் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கவலைகளை வேரறுக்கும் கந்தனின் கைவேல் அபூர்வ சக்தி கொண்டது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த வேலாயுதம், ஆலயத்துக்குத் தேடி வருவோரின் பிணி நீக்கி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருள்கிறது. இத்தலத்தில் நவ சித்தர்களும், அறுபடை வீடு முருகர்களும், வேம்படியில் வாலை புவனை திரிசூலி அம்மனும் அருளாட்சி செய்கிறார்கள்.

கோட்டைமேடு ஞானவேல் கோட்டம் கோயில்
கோட்டைமேடு ஞானவேல் கோட்டம் கோயில்
கோட்டைமேடு ஞானவேல் கோட்டம் கோயில்
கோட்டைமேடு ஞானவேல் கோட்டம் கோயில்இந்த ஆலயத்துக்கு வந்து முருகப் பெருமானை வேண்டிக்கொண்டால், வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். முருகனின் திருப்பாதங்கள் வரை திகழும்படி தாமரை மலர் மாலையைச் சாத்துவதாக வேண்டிக்கொண்டால், அந்த வேண்டுதல் வெகுசீக்கிரம் நிறைவேறும் என்கிறார்கள் பக்தர்கள். மதபேதமின்றி அனைத்து மதத்தினரும் வந்து வழிபடுவது இந்தத் தலத்தின் சிறப்பம்சம்.

கந்த சஷ்டி தினத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை ஹோம வைபவங்கள் சிறப்புற நடைபெற்றன. கணபதி வழிபாட்டுடன் தொடங்கிய ஹோம வைபவம், மூலமந்திர பாராயணம், திருவேள்வி, அபிஷேக ஆராதனைகளுடன் நிறைவுற்றது. வந்திருந்த அன்பர்களுக்கு அன்ன தானமும் பிரசாத விநியோகமும் நடை பெற்றன. ஆலய நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்புற செய்யப்பட்டிருந்தன.

கோட்டைமேடு ஞானவேல் கோட்டம் கோயில்
கோட்டைமேடு ஞானவேல் கோட்டம் கோயில்
சுப்ரமண்ய மகாமந்திர ஹோமம்
சுப்ரமண்ய மகாமந்திர ஹோமம்

ஶ்ரீசுப்ரமணிய மூலமந்திர ஹோம சங்கல்பத்துக்குப் பதிவு செய்திருந்த வாசகர்களின் பெயர் நட்சத்திரத்துடன், அவர்களின் பிரார்த்தனைகள் முறைப் படி ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. சகல வினைகளும் பிரச்னைகளும் தீர்ந்து, அனைவரின் வேண்டுதல்களும் நிச்சயம் நிறைவேறும். அவர்களின் பிரார்த்தனைகள் விரைவில் பலித்திட, முருகனின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும்!