Published:Updated:

கத்தாரிகுப்பம் ஈசனுக்கு மகா ருத்திராட்ச அபிஷேகம்!

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

சங்கல்பிக்கும் வாசகர்களுக்கு சிவ பிரசாதமாக அபிஷேக ருத்திராட்சம்!

கத்தாரிகுப்பம் ஈசனுக்கு மகா ருத்திராட்ச அபிஷேகம்!

சங்கல்பிக்கும் வாசகர்களுக்கு சிவ பிரசாதமாக அபிஷேக ருத்திராட்சம்!

Published:Updated:
சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

தேடிச் சரணடையும் சகல உயிர்களுக்கும் மகிழ்ச்சியான வாழ்வை வரமாக அருள்பவர் தென்னாடுடைய சிவபெருமான். எவரொருவர் சிந்தையில் சிவத்தை நிறுத்தி, ஐந்தெழுத்தால் அந்த நாதனைப் போற்றுகிறாரோ, அவரைத் தீவினைகள் அண்டாது; ஆயுள் பயம், வறுமைப் பிணி முதலானவை விலகியோடும். ஆகவேதான்...

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து

மறையோதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்

கொடு நோய்களான பலவும்

அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே..

- என்று பாடியருளினார் திருஞானசம்பந்தப் பெருமான். ஆக, முக்கண் பரமனாருக்கான வழிபாடுகள் எப்போதும் நம்மைத் தப்பாமல் காக்கும். வரம்பல அருளும் ஈசன் அபிஷேகப் பிரியன். பால், பன்னீர், தேன், சந்தனம், விபூதி என பல திரவியங்களால் அடியார்கள் அபிஷேகிக்க... அபிஷேகிக்க... மனம் குளிர்ந்து அருளும் நாயகன். அத்தகைய அபிஷேகங்களில் குறிப்பிடத்தக்கது ருத்திராட்ச அபிஷேகம்.

முக்கண்ணனின் அம்சமாகத் தோன்றிய ருத்திராட்சம் அற்புதமானப் பலன்களை அளிக்கவல்லது. சிவபெருமானுக்கு ருத்திராட்ச அபிஷேகம் செய்தால் மன நிம்மதி கிடைக் கும்; அனைத்துவகை கவலைகளும் நீங்கும் என்கின்றன ஆகமங்கள். அதேநேரம், ருத்திராட்ச அபிஷேகத்தை வீடுகளில் செய்யக் கூடாது; அற்புதமான அந்த வைபவத்தை ஆலயங் களுக்குச் சென்றுதான் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகின்றன ஞானநூல்கள்.

கத்தாரிகுப்பம் ஈசனுக்கு மகா ருத்திராட்ச அபிஷேகம்!

கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணம், பிள்ளைப்பேறு முதலான சுப காரியங்களில் ஏற்பட்டிருக்கும் தடை களால் வருந்தித் தவிக்கும் அன்பர்கள், கடும் பிணிகளால் வருந்துவோர் ருத்திராட்ச அபிஷேகத்தை தரிசிப்பதும் அபிஷேக ருத்திராட்சத்தைப் பெற்று பூஜிப்பதும் சிறப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அபிஷேக ருத்திராட் சத்தைச் சிவ பிரசாதமாகப் பெற்று பூஜையறையில் வைத்து வழிபடுவதால் சகல தோஷங்களும் துன்பங் களும் நீங்கும்; வறுமை அகலும்; வீட்டில் செல்வ கடாட்சமும் மங்கலச் சூழலும் நிறைந்திருக்கும் என்பது ஆன்றோர்களின் திருவாக்கு. குறிப்பாக தேவர்களின் வைகறைப்பொழுதான - வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மார்கழியில் சிவபிரானுக்கு ருத்திராட்ச அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷம்.

அந்த வகையில், உலக நன்மைக்காகவும் வாசகர்களும் அவர்களின் உற்றார்-உறவினர்களும் நன்மைகள் அடையும் வேண்டுதலோடு, கத்தாரி குப்பம் அருள்மிகு மீனாட்சி

சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ருத்திராட்ச அபிஷேக வைபவம் நிகழ்த்த ஏற்பாடு செய்துள்ளது சக்தி விகடன்.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலுள்ளது கத்தாரிகுப்பம். இங்குள்ள சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், வரும் 10.1.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:30 மணி முதல், வாசகர்களுக்கான பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்து உரிய சங்கல்பத்துடன் ஈசனுக்கு மகா ருத்திராட்ச அபிஷேக ஆராதனை நிகழவுள்ளது.

கத்தாரிகுப்பம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழைமையானது. இங்குதான் காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தின் 13-வது மடாதிபதி ஸ்ரீஸ்ரீ ஸத்சித் கணேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. இவரின் சீடராகத் திகழ்ந்த மகா சித்தபுருஷர் ஒருவரது ஜீவ சமாதியும் சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் திருக்குளத்தின் அருகே அமைந்துள்ளது. முருகப்பெருமான், விநாயகர், ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்திகளும் தனிச் சந்நிதி கொண்டுள்ளனர்.

`நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேற அருளும் தெய்வம் மீனாட்சிசுந்தரேஸ்வரர்’ என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள். அம்பிகை மீனாட்சியம்மையும் திருமணத் தடைகள், குழந்தை பாக்கியமின்மை ஆகிய சங்கடங்களை நீக்கி சந்தோஷத்தை வாரி வழங்கும் அன்னையாக அருள்கிறாள்.

இங்ஙனம் மகிமைகள் பல கொண்ட இந்தத் தலத்தில், திருமுறை பாராயணம், விசேஷ பூஜைகள் மற்றும் ஆராதனைகளுடன் நடைபெறவுள்ளது மகா ருத்திராட்ச அபிஷேகம். குறிப்பாக திருக்கயிலாய சிவவாத்திய முழக்கத்துடன் ஈசனுக்கான ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருக்கயிலாய சிவ வாத்திய முழக்க வழிபாடு!

சாம கானப் பிரியரான ஈசனுக்கு விருப்பானவை பூத கணங்கள். அந்த பூத கணங்களின் சிவ கைங்கர்யமே 70 வகையான சிவ வாத்தியங்களை முழங்குவதுதான். நந்தியம்பெருமானால் பயிற்றுவிக்கப்பட்ட சிவ கருவிகளை இசைத்து வாசித்தால் ஈசன் அருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பது புராணம் சொல்லும் தகவல்.

திமிலை, மத்தளம், இந்தளம், உடுக்கை, கொம்பு, குடமுழா, துந்துபி, பாரி நாயனம், சங்கு, பிரம்ம தாளம், குட்டத்தாரை, எக்காளம், திருச்சின்னம், நெடுந்தாரை, தாரை, கொம்புத்தாரை, உடுக்கை, சேமக்கலம், தப்பு, கர்ணா, குழித்தாளம், உறுமி, கொக்கரை, தவண்டை, கொடு கொட்டி, நகரா, யாழ், உடல், உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு, மொந்தை, தகுணிதம், தாளம், வீணை, கரடிகை, சச்சரி, தக்கை எனத் திகழும் 70 வகை சிவ வாத்தியங்களில் தற்போது 30 வகையான சிவ வாத்தியங்களே புழக்கத்தில் உள்ளன. அவற்றில் 20 வகையான சிவ வாத்தியங்களோடு இந்தக் கயிலாய வாத்தியக் கச்சேரி நடைபெற உள்ளது.

திருமுறை பாராயணம் - சிவப் பிரசாத ருத்திராட்சம்!

மேலும் வாசகர்களின் விண்ணப்பங்கள் நிறைவேற ஈசனுக்குப் திருமுறைப் பதிகங்கள் பாடி வழிபடும் நிகழ்வும் நடைபெற உள்ளது. 12 திருமுறைகளில் இல்லாத தீர்வே இல்லை எனலாம். நம் 27 தேவாசிர யர்களால் எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட திருமுறைகளில், சகல பிரச்னை களையும் நீக்கவல்ல பதிகங்களும் தீர்வும் உண்டு.

உரிய பதிகங்களைப் பாடி வாசகர்களின் பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்து, மகா ருத்திராட்ச அபிஷேகத்துடன் சிவனாரை வழிபடவுள்ளோம். அற்புதமான இந்த வைபவத்தில் வாசகர்கள் தங்களுக்காகவும், உற்றார் - உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் பிரார்த்தனைகளை - வேண்டுதலைச் சங்கல்பித்து வேண்டிக்கொள்ளலாம்.

முன்பதிவு மூலம் மகா ருத்திராட்ச அபிஷேக வைபவத்துக்குச் சங்கல்பிக்கும் வாசகர்களுக்குச் சிவபிரசாதமாக, அபிஷேகித்து பூஜிக்கப்பட்ட ருத்திராட்சம் அனுப்பிவைக்கப்படும். உலகம் நன்மைபெற, நம் இன்னல்கள் யாவும் நீங்கி நல்வாழ்க்கையைப் பெற கத்தாரிகுப்பம் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டு வரம்பெறுவோம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

மகா ருத்திராட்ச அபிஷேகம் திருமுறை பாராயணம் வைபவத்துக்கு வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால்,அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், இந்த வைபவத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.250 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருக்கயிலாய சிவவாத்திய முழக்கம், திருமுறைப் பாராயணம், மகா ருத்திராட்ச அபிஷேகம் எனச் சிறப்பாக நடைபெறவுள்ள வைபவத்தில், முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், உரிய சங்கல்பத்துடன் வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

வாசகர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறிட உரிய சங்கல்பத்துடன் திருமுறைப் பாராயணமும் நடைபெறும். அத்துடன் முன்பதிவு மூலம் சங்கல்பம் செய்யும் வாசகர்களுக்கு, அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரருக்கு மகா ருத்திராட்ச அபிசேகம் செய்விக்கப்பட்டு பூஜிக்கப்படும் ருத்திராட்சம் சிவ பிரசாதமாக (20.1.21 தேதிக்குள்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில்... வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, மகாருத்திராட்ச அபிஷேக வைபவங்கள் (14.1.21 - சனிக் கிழமைக்குள்) வீடியோ வடிவில் சக்தி விகடன் Youtube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

முன்பதிவு விவரங்களுக்கு:

89390 30246

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism