Published:Updated:

சூரசம்ஹாரம்; தண்டு விரதம்! -பழநி மலையில் களைகட்டிய சஷ்டி விழா

Palani Murugan
Palani Murugan

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 2) மாலை, அடிவாரத்திலுள்ள கிரிவீதிகளில் நடைபெறவுள்ளது.

சிவபெருமானின் மறுவடிவமே முருகக்கடவுள். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானை 'ஆறுமுகச்சிவனார்' என்று தம் பாடல்களில் குறிப்பிடுகிறார். தாய் பார்வதியும் முருகனை விட்டு அகலுவதில்லை. சூரபத்மனை வெல்ல, பார்வதி தன் சக்தியை ஒன்றுதிரட்டி சக்திவேல் தந்தாள். அறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான பழநியில் கந்த சஷ்டி விழாவின் ஆறாம்நாள் நிகழ்வில் நடைபெறும் சூரசம்ஹாரம் மிகப் பிரசித்தி.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, கந்த சஷ்டி விழா. இவ்விழாவையொட்டி மலைக்கோயிலில் தினமும் பல்வேறு வாகனங்களில் சின்னக்குமாரசாமி உலா வந்து அருள்பாலித்தார்.

`திருச்செந்தூரின் கடலோரத்தில்...'- நவம்பர் 2-ம் தேதி சூரசம்ஹாரம்!
palani temple
palani temple

கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 2) மாலை, அடிவாரத்திலுள்ள கிரிவீதிகளில் நடைபெறவுள்ளது. முன்னதாக மலைக்கோயில் பராசக்தி அம்மனிடம் சின்னக்குமார சுவாமி வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

மலைக்கோயிலிலிருந்து இறங்கிவரும் சுவாமி மாலை 6 மணிக்குக் கிரிவீதிகளில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகிய நான்கு சூரர்களை வதம்செய்யும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். சூரபொம்மைகளின் கைகள், தலை போன்ற உடற்பாகங்களை கடந்த மூன்று தலைமுறைகளாய் பழநியைச்சேர்ந்த இராமசாமி என்பவரின் மகன் செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தார் தயாரித்துக் கொடுக்கின்றனர்.

முன்னேற்பாடாக, மலையடிவாரப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சூரசம்ஹாரத்தைக் காண பழநி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் பிற மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளுகின்றனர். நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பழநி மலை
பழநி மலை
நிகழ்த்துகலைபோல் வீரபாகு தூது... சூரசம்ஹாரம்...  களைகட்டும் கழுகுமலை கந்த சஷ்டித் திருவிழா!

சூரர்களை வதம் செய்தபின் சுவாமி அங்கிருந்து புறப்பாடாகி மலைக்கோயில் சென்றவுடன் `சம்ரோக்ஷண பூஜை' நடைபெறும். இன்று காலை பத்து மணி முதலே ரோப்கார், இழுவை இரயில் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன. சூரசம்ஹாரத்துக்காக சுவாமி கிரிவீதி வருவதால் இன்று மலைக்கோயிலில் தங்கரதப் புறப்பாடு கிடையாது.

சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து நாளை காலை 11.30 மணிக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ஏழு நாள்கள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் பக்தர்கள் 6 -ம் நாளான இன்று காலை காய்கறி, தண்டு மட்டும் உட்கொள்ளுகிற 'தண்டு விரதத்தை' மேற்கொள்வர். இந்த விரதத்தை சூரசம்ஹாரம் முடிந்தவுடன் நிறைவு செய்வர்.

நிகழ்த்துகலைபோல் வீரபாகு தூது... சூரசம்ஹாரம்...  களைகட்டும் கழுகுமலை கந்த சஷ்டித் திருவிழா!

முருகப்பெருமானை சஷ்டி விரதம் அனுஷ்டித்து வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு