தக்ஷிணார்கா கோயில் (கயா, பீகார்)

கயாவில் உள்ள இந்தக் கோயில் பழைமையானது; விஷ்ணு பாத கோயிலுக்கு அருகில் கிழக்கு நோக்கி உள்ளது. இந்தக் கோயிலில் எண்ணற்ற சூரியனின் திருவிக்கிரகங்கள் உள்ளன. இங்குள்ள சூரிய பகவான், மார்பில் கவசம் விளங்க, இடுப்பில் ஒட்டியாணத்துடன், நீளமான காலணிகள் அணிந்து அழகாகக் காட்சியளிக்கிறார்.

கோயிலின் கிழக்குப் பகுதியில் சூரிய குண்ட் தீர்த்தம். சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருடன், சூரியன் மற்றும் துர்கை சிலையும் இங்கு உள்ளது. இன்னும் சில சூரியக் கோயில்களும் கயாவிலும் கயாவைச் சுற்றிலும் உள்ளன.

பிரம்மன்யதேவ் கோயில் (உனாவ், ம.பி)

மத்தியப் பிரதேசம் ஜான்ஸிக்கு அருகில் உள்ளது உனாவ். இங்கே புகழ்பெற்ற பிரம்மன்யதேவ் கோயில் என்ற பரம்ஜு கோயில் உள்ளது. சூரியனுக்கான இந்தக் கோயிலில் கொள்ளை அழகுடன் திகழ்கிறது சூரியனின் சிலாரூபம். பார்வைக் குறைபாடு மற்றும் தொழுநோய் உள்ளிட்ட தோல் நோய் உள்ளவர்கள் இங்கே பிரார்த்தித்து பலன் பெறுகிறார்கள். இந்தப் பகுதியை ஆண்ட பேஷ்வாக்களின் இஷ்ட தெய்வம் இந்த சூரிய பகவான்.

சூர்ய பஹார் (அஸ்ஸாம்)

அஸ்ஸாம் மாநிலம் கோல்பாராவுக்கு அருகில் உள்ள சூர்ய பஹார் மலைக்குன்றுகளில் அமைந்துள்ள சூரியன் கோயில் இது.

வட்ட வடிவ கல் மேடையில் பன்னிரு சூரியர்கள் தரிசனம் தருகின்றனர். நடுவில், சூரியனின் தந்தையான கச்யபர் காட்சி தருகிறார். கச்ய பிரஜாபதி-அதிதி தம்பதியின் புத்திரரே சூரியன். எனவே, அவர்களுக்கு இங்கே விசேஷ மரியாதை!

காலிக புராணத்தில், சூரியன் மலை மற்றும் சிகரம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளதாம். அது இதுதான் என்கிறார்கள். இந்தச் சிகரத்தின் அடியில் ஒரு லட்சம் சிவலிங்கங்கள் இருந்தனவாம். காலப் போக்கில் பல காணாமல் போய்விட்டன. தற்போதும் அதிகளவில் சிவலிங்கங்களை இந்த மலையின் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் காணலாம்.

அரசவில்லி சூரியநாராயண ஸ்வாமி (ஆந்திரா)

7-ஆம் நூற்றாண்டுக் கோயில் இது! கலிங்க அரசரால் கட்டப் பட்டது. ஐந்தடி உயரத்துடன், கையில் தாமரை மொட்டினை வைத்தபடி, உஷை- சாயா தேவியருடன் காட்சி தருகிறார். எனவே இவருக்கு பத்மபாணி என்று பெயர். கையில் உள்ள தாமரை, ஞானத்தைக் குறிக்கிறதாம். ஆந்திர மாநிலம்-காகுளத்துக்கு அருகில் உள்ளது இந்தக் கோயில்.

மோதேரா சூரியன் கோயில் (குஜராத்)

கி.பி.1026-ல் கோனார்க் கோயிலைப் போன்றே கட்டப்பட்டது. உத்தராயனம், தட்சிணாயனமான தை மற்றும் ஆடி மாத முதல் நாளில் சூரியனாரின் விக்கிரகத்தின் மீது, கதிரவ கிரணங்கள் விழுகின்றன. மண்டபத் தூண்களில் சூரியனின் வெவ்வேறு வித சிற்பங்கள் அழகுறக் காட்சி அளிக்கின்றன. இங்குதான் வருடந்தோறும் ஜனவரி மாதம் ‘மோத்ரா நாட்டிய விழா’ சிறப்பாக நடைபெறும்.