திருத்தலங்கள்
Published:Updated:

வீடு-மனை வாங்கும் யோகம் அருள்வார் பூமிநாதர்!

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவபெருமான்

ஆன்மிகத் துணுக்குகள்

வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்!

திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது மண்ணச்சநல்லூர். இந்த மண்ணுக்கான, பூமியில் கட்ட நினைக்கிற, கட்டுகிற அனைத்துக் கட்டடங்களுக்கான தேவதை வீற்றிருக்கும் தலம் இது.

வீடு-மனை வாங்கும் 
யோகம் அருள்வார் பூமிநாதர்!
rawpixel.com

சமயபுரம் டோல்கேட்டில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளதுஇந்தத் தலத்து இறைவன் வீடு- மனை வாங்கும் யோகத்தை அருள்பவர் என்பதால், இவருக்கு ஸ்ரீபூமிநாதர் என்று திருநாமம். அம்பாள்- ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி. அமாவாசை நாளில் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு. அதிலும், அமாவாசையும் புதன்கிழமையும் சேர்ந்து வரும் நாளில், வீடு- மனை தொடர்பான சிக்கல்களில் இருப்பவர்களும், வாங்க வேண்டுமே என்கிற ஆவலில் இருப்ப வர்களும் வழிபடுவது கூடுதல் பலனைத் தரும் என்பது நம்பிக்கை.

- வி.கந்தகுமார், திருச்சி

வீடு-மனை வாங்கும் 
யோகம் அருள்வார் பூமிநாதர்!
aijohn784

மூன்று வகை வெற்றி!

வெற்றி... வெற்றி... வெற்றி... என்று ஜெயிப்பதற்கான அத்தனை சூட்சுமங்களையும் செய்தருளினார் கண்ணபிரான். அதேநேரம்... தோல்வியின் மூலமாகவும் ஜெயிக்கலாம் என்பதை உலகுக்கு உணர்த்தினார்.கணவன்- மனைவிக்கு இடையே சின்னதாக ஓர் ஊடல். சிறிது நேரம் கழித்து எவர் விட்டுக் கொடுக்கிறாரோ, அவர் தோல்வி அடைந்ததாக ஆகிப்போகும்.

ஆனால், சமரசத்துக்கு வருபவரோ, விட்டுக் கொடுப்பவரோ தோற்றுப் போனதாகத் தெரியலாமே தவிர, உண்மையில் வெற்றி பெற்றவர் அவர்தான் என்பது புரிய வரும். ஜெயிப்பதில் 3 மூன்று வகை உண்டு. ஜயம் என்கிற வெற்றி என்பது ஒன்று; தோல்வி என்பது மற்றொன்று. வெற்றியோ தோல்வியோ... அதை ஆழ்ந்து ரசிக்கிற மனோபாவம் ரொம்பவே முக்கியம். இது மூன்றாவது!கிருஷ்ணர் மகாபாரத யுத்தத்தின் போது, பாண்டவர்களுக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்திருக்கிறார். பல தருணங்களில், எல்லோரிடமுமே விட்டுக் கொடுத்து, தோற்றுப் போவதன் மூலம் வெற்றி வாகை சூடியிருக்கிறார்!

- வி. ரங்கநாதன், சென்னை-5

வீடு-மனை வாங்கும் 
யோகம் அருள்வார் பூமிநாதர்!

பெளர்ணமியில் விளக்கு பூஜை!

பெளர்ணமி தினங்களில் திருவிளக்கு வழிபாடு செய்வது மிகச்சிறந்த நற்பலன்களைத் தரும். ஒவ்வொரு மாத பெளர்ணமி திருவிளக்கு பூஜைக்கும் ஒரு பலன் உண்டு.

சித்திரை - தானிய வளம் உண்டாகும்.

வைகாசி - செல்வம் செழிக்கும்.

ஆனி - திருமண பாக்கியம் உண்டாகும்.

ஆடி - ஆயுள்பலம் கூடும்.

ஆவணி - புத்தித்தடை நீங்கும்

புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும்

ஐப்பசி - நோய்கள் நிவர்த்தியாகும்

கார்த்திகை - நற்பேறு கிட்டும்

மார்கழி - ஆரோக்கியம் கூடும்.

தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.

மாசி - துன்பங்கள் நீங்கும்.

பங்குனி - தர்மசிந்தனை வளரும்.

- கே.ருத்ரா, தூத்துக்குடி