Published:Updated:

தை மாத விரதங்கள்

தை மாத விரதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
தை மாத விரதங்கள்

தீவினைகளை தீர்க்கும் பைரவ வழிபாடு

தை மாத விரதங்கள்

தீவினைகளை தீர்க்கும் பைரவ வழிபாடு

Published:Updated:
தை மாத விரதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
தை மாத விரதங்கள்

தைப்பொங்கல் திருநாள் முதலாக, தை அமாவாசை, ரத சப்தமி, தைப்பூசம், தை கிருத்திகை போன்றவை நாமறிந்த சிறப்பான வழிபாட்டு நாள்கள். இவை மட்டுமன்றி, புனிதமிகு தை மாதத்தில் நாம் அனுஷ்டிக்க வேண்டிய வேறுசில வழிபாடுகளும் உண்டு.

செல்வமும் சந்தான வரமும் அருளும் சாவித்ரி கௌரி விரதம்

தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. சிவனார் தனக்கு அருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தாராம் மார்க்கண் டேய முனிவர்.

விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன் பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக்கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவியின் வடிவம் செய்ய வேண்டும். பிறகு மௌன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 9 நாள்கள் பூஜித்து, 9-வது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும். இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களில்...

ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு- ஒன்பது மஞ்சள் கிழங்குகள் - ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும். நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம்.

தை மாத விரதங்கள்

தீவினைகளை தீர்க்கும் பைரவ வழிபாடு

தை மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் பைரவரை வடை மாலை சாற்றி வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்; தீவினைகள் நீங்கும்.

ஆயுள் பலம் அருளும் பைரவ வழிபாடு

வடமாநிலங்களில் சில பகுதிகளில், தை மாதம் முதல் நாளன்று, எமகண்ட நேரத்தில் காலன் பூஜை நடைபெறும். எமதருமனின் திருவுருவப் படத்தை அலங்கரித்து, மலர்கள் சூடி, எள்ளுருண்டை நிவேதனம் செய்து வழிபடுவர். இதனால் எமபயம் நீங்கும், துர்மரணம் மற்றும் விபத்துகள் நிகழாது என்பது நம்பிக்கை.

தை மாத விரதங்கள்

வீரபத்திர வழிபாடு

செவ்வாய்க் கிழமை தோறும் ஒரு வருட காலம் வரையிலும் வீரபத்திரரை வழிபட்டால், வல்வினைகள் நீங்கும். வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமை களிலாவது இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது சிறப்பு. கிரக பாதிப்புகள் நீங்கும்.

- கா.ராஜேஸ்வரி, மதுரை-2