Published:Updated:

அழகுத் தீவில் அழகன் முருகனுக்குத் தைப்பூசம்!

படங்கள்: நாஷ் கணேஷ்

பிரீமியம் ஸ்டோரி
மிழர்கள் இருக்கும் இடங்களில் எப்படித் தமிழ் இருக்குமோ அதேபோன்று தமிழ் இருக்கும் இடங்களிலெல்லாம் முருகனும் இருப்பான். எங்கிருந்தாலும் தம்மைத் தாங்கிக் காப்பான் அந்தத் தமிழ்க்கடவுள் என்பது தமிழர் நம்பிக்கை.

அந்த நம்பிக்கைதான் அவர்களை எங்கும் சீரோடு வாழவைக்கிறது. நியூசிலாந்தில் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து ஒரு கணபதி கோயிலை எழுப்ப வேண்டும் என்று பேராவல் கொண்டு அதற்கான முயற்சியில் இறங்கி கிறிஸ்டு சர்ச் என்னும் ஊரில் அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர். அதன் முதல் கட்டமாகக் கடந்த தைப்பூச நன்னாளில் 250 பேர் கூடி கோலாகலமாகத் தைப்பூசப் பெருவிழாவைக் கொண்டாடினர்.

தைப்பூசம்
தைப்பூசம்
நியூசிலாந்தில் தைப்பூசம்
நியூசிலாந்தில் தைப்பூசம்

விழாவில் முருகப்பெருமானுக்குக் காவடி, பால்குடம் எடுத்து வேண்டுதலைச் செலுத்தினர் பக்தர்கள். அதன்பின் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமி புறப்பாடும் வீதியுலாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்வில் பரதநாட்டியக் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நியூசிலாந்து வீட்டுவசதி வாரிய மந்திரி டாக்டர். மேகன் வுட்ஸ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தைப்பூச பால்குடம்
தைப்பூச பால்குடம்
தைப்பூசம்
தைப்பூசம்
தைப்பூசம்
தைப்பூசம்
தைப்பூசம்
தைப்பூசம்
தைப்பூசம்
தைப்பூசம்
தைப்பூசம்
தைப்பூசம்
தைப்பூசம்
தைப்பூசம்

இந்த நிகழ்ச்சியை தி கணேஷா ட்ரஸ்ட் (கிறிஸ்ட் சர்ச்) அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதுகுறித்த தகவலை அமைப்பின் செயல்குழு உறுப்பினர்களில் ஒருவரான நாஷ் கணேஷ் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு