Published:Updated:

சிறப்பாக நடைபெற்றது... ஸ்ரீ தன்வந்த்ரி மகா ஹோமம்!

மகா ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
News
மகா ஹோமம்

செங்கல்பட்டு - திருவடிசூலம் சப்த சைலஜ ஸ்ரீபாதாத்ரி நூற்றியெட்டு திவ்யதேசம் கோயிலில், காலை 11 மணிக்குத் தொடங்கியது ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோமம்.

தேக ஆரோக்கியம் பெற செய்யப் படும் வழிபாடுகளில் மிகச் சிறப்பானது ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோமம். இந்த ஹோமத்தால் ஸ்ரீதன்வந்த்ரி பகவான் மகிழ்ந்து பூரண ஆரோக்கியத்தை அருள்வார் என்பது நம்பிக்கை. அந்த வகையில் வாசகர் நலன் வேண்டியும், அவர்கள் உடல் ஆரோக்கியமும் பிணியற்ற வாழ்வும் பெற வேண்டியும் சக்தி விகடன் சார்பில் ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோமம் மிக அற்புதமாய் நடந்தேறியது.

சக்தி விகடன் - திருவடிசூலம் ஸ்ரீஆதி பரமேஸ்வரி ஸ்ரீகருமாரி அம்மன் அறக்கட்டளை இணைந்து வழங்கிய இந்த ஹோமம் குறித்த அறிவிப்பு, சக்தி விகடன் இதழிலும் விகடன் இணையத்திலும் வெளியான நாள் முதல், நூற்றுக்கணக்கான வாசகர்கள் சங்கல்ப முன்பதிவு செய்துகொண்டார்கள்.

சிறப்பாக நடைபெற்றது... 
ஸ்ரீ தன்வந்த்ரி மகா ஹோமம்!

புரட்டாசி மாதம் - ஞாயிற்றுக் கிழமை, பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திரமும் ஏகாதசி திதியும் இணைந்த புண்ணிய நாளில் (27.9.2020), செங்கல்பட்டு - திருவடிசூலம் சப்த சைலஜ ஸ்ரீபாதாத்ரி நூற்றியெட்டு திவ்யதேசம் கோயிலில், காலை 11 மணிக்குத் தொடங்கியது ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோமம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சிறப்பாக நடைபெற்றது... 
ஸ்ரீ தன்வந்த்ரி மகா ஹோமம்!

நடப்புச் சூழலில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி வைபவம் நிகழ்ந்தது. வாசகர்கள் பெயரில் பிரத்யேக சங்கல்பம் செய்யப்பட்டு, தொடர்ந்து ஹோமம் தொடங்கியது. உரிய வேத மந்திரங்களோடு, தேர்ந்த வேதசிரோமணியர் மிக அற்புதமான முறையில் ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோமத்தை நடத்தினர். பிரத்தியேகமான ஹோம திரவியங்கள் சேர்க்கப்பட்டு நிறைவில் பூராணாகுதியுடன் செவ்வனே நிறைவேறியது ஹோம வைபவம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தேவி ஸ்ரீகுகயோகி மதுரைமுத்து ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்ற மகா தன்வந்த்ரி ஹோம வைபவத்துடன், ஆலயத்தில் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீதன்வந்த்ரி பகவானுக்குத் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

சிறப்பாக நடைபெற்றது... 
ஸ்ரீ தன்வந்த்ரி மகா ஹோமம்!

வழிபாட்டின் நிறைவில் தேவி ஸ்ரீகுகயோகி மதுரைமுத்து ஸ்வாமிகள் இந்த ஹோமத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்லி, இந்த ஹோமத்தில் பதிவு செய்த ஒவ்வொருவருக்கும் இறையருள் கைகூட பிரார்த்தித்தார். அவர்கள் வாழ்வில் பூரண நலமும் வளமும் பெற வாழ்த்தி ஆசிபுரிந்தார்.

சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த வழிபாட்டில், சக்தி விகடன் சார்பில், உலக நன்மைக்காகவும் வாசகர்களின் நல் வாழ்வுக்காகவும் சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெற்றது. ஹோம வைபவத்துக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தின் சார்பில் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

சிறப்பாக நடைபெற்றது... 
ஸ்ரீ தன்வந்த்ரி மகா ஹோமம்!

சங்கல்ப முன்பதிவு செய்திருந்த வாசகர் களுக்கு ஹோமப் பிரசாதமாக ஹோம பஸ்மம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்திருந் தோம். அதன்படி, ஹோமம் நிறைவுற்றபின், விதிப்படி ஹோம பஸ்மம் சேகரிக்கப்பட்டு, மீண்டும் பூஜையில் வைக்கப்பட்டு, வாசகர் களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோம வைபவத்தை - சிறப்பு அபிஷேக ஆராதனைகளை சக்தி விகடன் யூடியூப் சேனலிலும் வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.