Published:Updated:

யோகங்கள் அருளும் குருவித்துறை குரு பகவான்!

குருவித்துறை குருபகவான்

தேவலோகத்திலிருந்த குரு பகவான் பூலோகத்துக்கு வந்து, இங்கு வீற்றிருந்து பெருமாளைத் தரிசித்த இடம் என்பதால், 'குரு வீற்றிருந்த துறை' என ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டது இந்தத் தலம். பின்னாளில் இதுவே மருவி, 'குருவித்துறை' ஆனது என்கிறார்கள்.

யோகங்கள் அருளும் குருவித்துறை குரு பகவான்!

தேவலோகத்திலிருந்த குரு பகவான் பூலோகத்துக்கு வந்து, இங்கு வீற்றிருந்து பெருமாளைத் தரிசித்த இடம் என்பதால், 'குரு வீற்றிருந்த துறை' என ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டது இந்தத் தலம். பின்னாளில் இதுவே மருவி, 'குருவித்துறை' ஆனது என்கிறார்கள்.

Published:Updated:
குருவித்துறை குருபகவான்

வியாழன் என்று அழைக்கப்படும் குரு பகவான், நவகிரக வரிசையில் முக்கியமானவர். இவரை வணங்கினால் ஞானம், செல்வம் முதலானவற்றை அடையலாம். 'குரு' என்றால், 'இருளை நீக்குபவர்' என்று பொருள். அதாவது, நம்மிடம் இருந்து வரும் அறியாமையாகிய இருளை நீக்குபவர். பொதுவாக, சிவாலயங்களில் குரு பகவான் எழுந்தருளி இருப்பது சாதாரணமாகப் பார்க்கக் கூடிய ஒன்று. ஆனால், வைணவத் தலம் ஒன்றில் குருபகவான் எழுந்தருளி இருப்பது, சற்று வித்தியாசமானதுதான்.

குருவித்துறை
குருவித்துறை

தேவலோகத்திலிருந்த குரு பகவான் பூலோகத்துக்கு வந்து, இங்கு வீற்றிருந்து பெருமாளைத் தரிசித்த இடம் என்பதால், 'குரு வீற்றிருந்த துறை' என ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டது இந்தத் தலம். பின்னாளில் இதுவே மருவி, 'குருவித்துறை' ஆனது என்கிறார்கள்.

இடைக்காலப் பாண்டிய மன்னர்களில் ஒருவனான சடாவர்மன் ஸ்ரீவல்லபன் (கி.பி.1101- 1124) காலத்தில் இந்தப் பகுதிக்குக் 'குருவிக்கல்' என்ற பெயர் வழங்கப்பட்டது. வைகை ஆற்றில் ஒரு சிற்றணையை ஒட்டி இருந்த ஆற்றுத் துறை, 'குருவிக்கல்துறை' என அழைக்கப்பட்டதாம். இதுவே சுருங்கி, குருவித்துறை ஆனது என்றும் தகவல் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருவிளை யாடற் புராணத்தில் 'பன்றிக்குட்டிக்கு பால் கொடுத்த படலம்' என்று ஓர் அத்தியாயம் இருக்கிறது. அதில், குருவித்துறையில் எழுந்தருளி இருக்கும் குரு பகவான் பற்றிய குறிப்பு காணப் படுகிறது. குருவித்துறை என்கிற இந்த ஊர், 'குருவிருந்த துறை' என்று, திருவிளையாடற் புராணத்தில் குறிக்கப்பெற்றுள்ளது.

குருவித்துறை ஆலயத்தின் மூலவர் ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள். தாயார் ஶ்ரீ செண்பகவல்லி. குரு பகவானின் மகன் கசனுக்கு ஒருமுறை ஆபத்து ஏற்பட்டது.

குருவித்துறை
குருவித்துறை

மிருதசஞ்சீவினி மந்திரம் கற்க அசுர லோகம் சென்றவன் வெகு நாள்கள் ஆகியும் திரும்ப வராததால் தவித்துப் போனார் தேவகுரு. நாரதரிடம் ஆலோசனை கேட்க, அவர் தன் ஞான திருஷ்டியால் கசனுக்கு அசுரர்களால் ஏற்பட்ட இன்னல் பற்றி விளக்கினார். தேவகுரு இதற்குப் பரிகாரம் என்ன என்று கேட்க, 'பூலோகம் சென்று வேகவதி ஆற்றின் (வைகை) கரையில் அமர்ந்து ஸ்ரீமந் நாராயணனை நோக்கி தவம் செய்யுங்கள். அவர் உங்களின் இன்னல் தீர்ப்பார்' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி, குருவித்துறையில் அமைந்த இந்த வைகைக் கரைக்கு வந்து தேவகுரு தவம் இருந்தார். குருவின் தவத்துக்கு இரங்கி, பெருமாள் காட்சிகொடுத்ததோடு கசனை மீட்க ஸ்ரீசுதர்சன ஆழ்வாரை அனுப்பினார். ஸ்ரீசுதர்சன ஆழ்வார், அசுரர்களை விரட்டி கசனை பத்திரமாக மீட்டு வந்து குரு பகவானிடம் ஒப்படைத்தார்!

பெருமாள், சித்திரங்கள் வரையப்பட்ட ரதம் (தேர்) ஒன்றில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சி கொடுத்தார் என்பதால் இந்தப் பெருமாளுக்கு 'சித்திர ரத வல்லப பெருமாள்' என்று திருநாமம் ஏற்பட்டது. இந்தப் பெருமாளுக்கு இந்தத் திருநாமத்தைச் சூட்டியவரே குரு பகவான்தான் என்கிறது தல புராணம். குரு பகவானுக்குப் பெருமாள் காட்சி கொடுத்தது- சித்திரை மாதம் சித்திரை நட்சத்திர தினம் என்று சொல்லப்படுகிறது. தனக்குத் தரிசனம் தந்த பெருமாள் என்றென்றும் இங்கேயே இருந்து பக்தர்களின் குறைகளையும் களைய வேண்டும் என குரு பகவான் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்க... சித்திர ரத வல்லப பெருமாள் இங்கேயே கோயில் கொண்டு, இங்கே வரும் பக்தர்களுக்குச் சகல வளங்களையும் அளித்துக்காக்கிறார்.

மூன்று பிராகாரங்களைக் கொண்ட விரிவான இந்தக் கோயில், வைகைக் கரையில் அமைந்துள்ளது. பெருமாளை தரிசனம் செய்யச் செல்வதற்கு முன் வெளியே குரு பகவானின் திருச்சந்நிதி. பெருமாள் கிழக்கு நோக்கிக் காட்சி தர, அவரை தரிசிக்கும் கோலத்தில் மேற்கு நோக்கிக் காணப்படுகிறார் குரு. இவருக்கு அருகே ஸ்ரீசக்கரத்தாழ்வார் எழுந்தருளியிருக்கிறார். இங்கே குரு பகவான், யோக குருவாகக் காட்சிகொடுக்கிறார். கைகளை நெஞ்சில் குவித்து வணங்கும் பாவனையில் காட்சி தருகிறார்.

வரும் நவம்பர் 13-ம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த நன்னாளில் குருவித்துறை யோக குருவை தியானித்து அருள்பெறுவோம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism