கட்டுரைகள்
Published:Updated:

அயோத்தியில் என்ன ஸ்பெஷல்?

ராமர் கோவில்
பிரீமியம் ஸ்டோரி
News
ராமர் கோவில்

ராமர் கோவில்

ல ஆண்டு சர்ச்சைகள் ஓய்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுவிட்டது. உத்தரப்பிரதேசத்துக்கு வெளியே உள்ள இந்தியர்களுக்கும் உலகம் முழுக்க இருக்கும் வெளிநாட்டினருக்கும் இனி முக்கியமான சுற்றுலாத்தலங்கள் லிஸ்ட்டில் அயோத்தி ராமர் கோயிலும் சேரும். வேறு என்னென்ன ஸ்பெஷல்?

அயோத்தியில் என்ன ஸ்பெஷல்?

பரந்துவிரிந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள பெரிய கோயில் வரிசையில் கம்போடியா அங்கூர்வாட் விஷ்ணு ஆலயம், ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது அயோத்தி ராமர் கோயில். 120 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் வளாகம் அமையவிருக்கிறது.

மூன்று தளங்களாக அமையவிருக்கும் இந்தக் கோயிலில் ஒவ்வொரு தளத்திலும் 106 தூண்கள் வீதம் மொத்தம் 318 தூண்கள் அமைய வுள்ளன.

அயோத்தியில் என்ன ஸ்பெஷல்?

300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் இந்தக் கோயிலின் கட்டுமானப் பொறுப்பைப் பிரபல கட்டடக் கலை நிபுணர் சந்திரகாந்த்பாய் சோம்புரா ஏற்றுள்ளார்.

அயோத்தியில் என்ன ஸ்பெஷல்?

கோயிலைச் சுற்றியிருக்கும் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்க 1,000 கோடி ரூபாய் வரையிலும் செலவாகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, விமான நிலையம், சாலை வசதி விரிவாக்கம் போன்ற 500 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

கோயில் கட்டிமுடிக்க சுமார் 3.5 ஆண்டுகள்வரை ஆகலாம்.

அயோத்தியில் என்ன ஸ்பெஷல்?

முக்கூடல் எனப்படும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ரங்கம் ஆகிய இடங்களிலிருந்து நீர் மற்றும் மண் ஆகியன பூஜை செய்து அனுப்பிவைக்கப்பட்டன. இதேபோன்று நாட்டின் பிற பகுதிகளிலுள்ள 2,000 கோயில்களிலிருந்து மண்ணும் சுமார் 100 நதிகளிலிருந்து தீர்த்தமும் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு அனுப்பப்பட்டன.

சேலத்திலிருந்து பொதுமக்கள் மற்றும் வெள்ளி வியாபாரிகளின் பங்களிப்புடன் 11,30,000 ரூபாய் செலவில் 17.4 கிலோ எடை கொண்ட வெள்ளிச் செங்கல் பூஜை செய்து அனுப்பி வைக்கப்பட்டது.

அயோத்தியில் என்ன ஸ்பெஷல்?

அதேபோன்று உத்திரப்பிரதேச புல்லியன் அசோஷியேஷன் சார்பில் 33 கிலோ எடை கொண்ட வெள்ளிச் செங்கல் அயோத்திக்கு அனுப்பப்பட்டது.

அயோத்தியில் என்ன ஸ்பெஷல்?

கோயிலின் உட்புறம் கலை நுணுக்கத் தோடு கூடிய கல் வேலைப்பாடுகளோடும் நான்கு ஐந்து வளைந்த கூரைகள் (Dooms) அமைக்கப்படவுள்ளன.

குழந்தை ராமர் விக்கிரகமே மூல விக்கிரகமாக அமைந்துள்ளது.

அயோத்தியில் என்ன ஸ்பெஷல்?

கோயில் வளாகத்தில் பிரார்த்தனைக் கூடம், சொற்பொழிவுக்கூடம் (ராம்கதா குன்ச்), வேதபாடசாலை, சாதுக்கள் தங்கும் விடுதி மற்றும் பயணிகள் தங்கும் விடுதிகள் அமையவுள்ளன. இவை தவிர ஒரு அருங்காட்சியகமும் உணவு விடுதிகளும் அமையவுள்ளன.