Published:Updated:

நிழல் விழாத கோபுரம், ஒரே கல் விமானம், வளரும் நந்தி... தஞ்சை பெரியகோயில் குறித்த நம்பிக்கைகள் உண்மையா?

கே.குணசீலன்
ம.அரவிந்த்
சி.வெற்றிவேல்

தஞ்சைப் பெரியகோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக் கலை என்று பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. 216 அடி உயரம் கொண்ட விமான கோபுரம் மற்றும் அதன் கட்டுமான அமைப்புகளை உலகப் பொறியியல் வல்லுநர்கள் பார்த்து வியக்கிறார்கள்.

தஞ்சைப் பெரிய கோயில்
தஞ்சைப் பெரிய கோயில்

தமிழர்களின் கட்டடக் கலைத்திறனுக்குச் சான்றாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது தஞ்சைப் பெரியகோயில், `ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து, நம் கண் முன்னே நிற்கும் பிரமாண்டம்’ என்று பெரிய கோயில் கட்டுமானத்தைப் பற்றி வரலாற்று வல்லுநர்கள் மெய்சிலிர்த்துக் கூறுகிறார்கள்.

தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்

பெருமைமிகு தஞ்சை பெரிய கோயிலைப் பற்றி, மக்களிடையே பல்வேறு வகையான நம்பிக்கைகள் பரவியுள்ளன. குறிப்பாக, `பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது' என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள்.

DoubtOfCommonMan
DoubtOfCommonMan

சண்முகசுந்தரம் என்ற வாசகர், விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் இதுகுறித்து ஒரு கேள்வியெழுப்பியிருந்தார். "தஞ்சைப் பெரியகோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுமா, விழாதா?" என்பதுதான் அவர் எழுப்பிய கேள்வி.

இந்தக் கேள்வியைக் கல்வெட்டு ஆய்வாளர் மணி.மாறன் முன்னால் வைத்தோம்...

``தஞ்சைப் பெரியகோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக் கலை என்று பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. 216 அடி உயரம் கொண்ட விமானக் கோபுரம் மற்றும் அதன் கட்டுமான அமைப்புகளை உலகப் பொறியியல் வல்லுநர்கள் பார்த்து வியக்கிறார்கள்.

மரம், இரும்பு போன்ற பொருள்களைப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்கக் கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டது இந்தக் கோயில். இவை எல்லாவற்றையும் கடந்து கோபுர விமானத்தின் உட்புறம், ஒரு டம்ளரைக் கவிழ்த்து வைத்திருப்பது போன்ற உள்கூடாகக் காட்சியளிக்கும். கற்களை ஒன்றோடு இணைத்து, நுட்பமான முறையில் கட்டப்பட்டிருக்கிறது இக்கோயில். இங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து விட்டுத்தான் விமானக் கோபுரத்தை எழுப்பியிருக்கிறார்கள்.

'கோயிலில் உள்ள பெரிய நந்தி வளர்கிறது!'
'ஒரே இரவில் பெரிய கோயிலைப் பூதம் கட்டியது!'
'விமானத்தின் கோபுரம் 80 டன் எடைகொண்ட ஒரே கல்லால் கட்டப்பட்டது.'
'இரவு நேரத்தில் பெரிய கோயில் நந்தி எழுந்து மேய்வதற்குச் செல்லும்!'
தஞ்சைப் பெரிய கோயில் வதந்திகள்

`கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது’ என்பது கோயிலின் பிரமாண்டத்தை விளக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட ஒரு பிழையான செய்தி. பெரும்பாலானோர் அதை உண்மை என்று நம்புகிறார்கள்.

பெரிய கோயில்
பெரிய கோயில்

காலை நேரத்தில் கோபுரத்திற்குப் பின்பக்கமும், மாலை நேரத்தில் கோபுரத்தின் முன்பக்கமும் கோபுரத்தின் நிழல் தரையில் விழும் (பார்க்க- வீடியோ, போட்டோ).

Vikatan

பெரிய கோயிலின் உண்மையான பெருமை, கட்டுமான நுட்பங்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்ளாமல் இருப்பதே இது போன்ற தவறான தகவல்கள் பரவுவதற்குக் காரணம். மேலும்,'கோயிலில் உள்ள பெரிய நந்தி வளர்கிறது', 'ஒரே இரவில் பெரிய கோயிலைப் பூதம் கட்டியது', 'விமானத்தின் கோபுரம் 80 டன் எடைகொண்ட ஒரே கல்லால் கட்டப்பட்டது' என்றெல்லாம் பல தவறான தகவல்கள் பரவியிருக்கின்றன.

பெரிய கோயில்
பெரிய கோயில்

இரவு நேரத்தில் பெரிய கோயில் நந்தி எழுந்து மேய்வதற்குச் செல்லும். அப்படிச் செல்லாமல் இருப்பதற்காகக் கடப்பாரையைக் கொண்டு முதுகில் ஆணி வைத்து அடித்திருக்கின்றனர் என்ற நம்பிக்கையும், 'அரசியல் தலைவர்கள் இங்கு வந்தால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும்' என்ற நம்பிக்கையும் பொய்யான கற்பனைத் தகவல்களே.

ஆனால், பெரிய கோயில் குறித்து அறிந்து வியக்க ஆயிரமாயிரம் நுட்பங்கள் உண்டு. இங்கு கருவறை மிகத் துல்லியமான சதுரமாக நான்கு பக்கமும் சிறிதும் பிசிரின்றி கட்டப்பட்டிருக்கிறது. இதேபோல் சிவலிங்கத்தின் மையப் பகுதியில் நூல்வைத்துப் பிடித்து, கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றால் அது கோபுரத்தின் துல்லியமான மையத்தில் இருக்கும். தனித்தனி கற்களை ஆரஞ்சு பழத்தின் சுளைபோல் இணைத்து விமானக் கோபுரத்தைக் கட்டியுள்ளனர். நுழைவு வாயிலில் உள்ள 45 அடி உயரம் கொண்ட நிலைக்கால்கள் ஒரே கல்லால் கட்டப்பட்டவை.

பெரிய கோயில் கோபுரம்
பெரிய கோயில் கோபுரம்

விமானக் கோபுரத்தின் உட்புறம் உள்ள மேல் அறை ஒன்றில் 108 கர்ணங்கள் கொண்ட பரத நாட்டியச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கீழ்த் தளத்தில் ராஜராஜன் காலத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன. மேலும், மழை நீர் சேகரிப்பின் மையமாகவும் பெரிய கோயில் திகழ்ந்திருக்கிறது.

Vikatan

மழை நீர் செல்வதற்கு இரண்டு வழிகள் அமைத்திருக்கிறார்கள். முதலில் விழுகிற மழைநீர், தரையில் உள்ள அழுக்கோடு நந்தவனத்திற்குச் செல்லும். பின்னர் நல்ல நீர், சிவகங்கைப் பூங்காவில் உள்ள குளத்திற்குச் செல்லும். அந்தக் காலத்திலேயே மழை நீரைச் சேமிக்கும் வியக்கத்தக்க முறையை ராஜராஜசோழன் பெரியகோயிலில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

பெரிய கோயில் நிழல்
பெரிய கோயில் நிழல்

பெரியகோயிலில் இதுபோன்ற அற்புதங்கள் நிறைய இருக்கின்றன. பல விஷயங்கள் மக்களிடையே போய் சேராததால்தான் தவறான தகவல்களை நம்பி வருகிறார்கள். கோயிலைப் பற்றிய ஆய்வுச் செய்திகள், அதிகம் மக்களிடையே பகிரப்பட வேண்டும். பெரிய கோயில் குறித்து முழுமையாகத் தெரிந்துகொண்டு அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்றார் அவர்.

Doubt Of Common Man
Doubt Of Common Man