Published:Updated:

மதுரையைத் தொடர்ந்து தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவும் ஒத்திவைப்பு!

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா
தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

கொரோனா ஊரடங்கு காரணமாக, கோயில் திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரபாண்டி ஸ்ரீ கெளமாரியம்மன் கோயில் திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, கோயில் திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

corona
corona
ஒரு வாரத்தில் 13 பேர்.. தேனி போலீஸுக்கு அதிர்ச்சிகொடுக்கும் கள்ளச்சாராயம்!

இது தொடர்பாக கெளமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``ஆண்டுதோறும் சித்திரை முதல் செவ்வாய்க்கிழமையில் கொடியேற்றம் செய்யப்பட்டு, அன்றிலிருந்து 21வது நாளில் திருவிழா தொடங்கி எட்டு நாள்கள் நடைபெறும். இந்தத் திருவிழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்வர்.

அதன்படி, இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 22ம் தேதி திருக்கம்பம் நடப்பட்டு மே மாதம் 12 முதல் 19ம் தேதிவரை முக்கிய திருவிழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் கோயிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்கும் பொருட்டு வரும் 22ம் தேதி திருக்கம்பம் நடப்படுவது தொடங்கி, சித்திரை திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

File Image
File Image
`ஒரே நாளில் 18 பேர் டிஸ்சார்ஜ்; கைதட்டி வழியனுப்பிய மருத்துவர்கள்!’- நம்பிக்கையளிக்கும் தேனி

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பக்தர்கள் சிலர், ``இதுவரை வீரபாண்டி கோயில் திருவிழா சரியான நேரத்தில் நடக்கும். ஒத்திவைக்கப்பட்டதாக வரலாறு ஏதும் இல்லை. அப்படி இருக்கையில், தற்போது கொரோனா காரணமாக, திருவிழா ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இது எங்களுக்கு ஏமாற்றமாகவும் கவலையாகவும் இருக்கிறது. இருந்தாலும், திருவிழா ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், கொரோனா நோய் முற்றிலும் ஒழிந்து, மக்கள் அனைவரும் கூடி, திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். எங்களுக்கு கெளமாரியம்மன் துணையாக இருப்பார்” என்கின்றனர். இதேபோல், மதுரையில் நடைபெற இருந்த சித்திரைத் திருவிழாவும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு