சித்தர்களும் யோகிகளும், நந்தவனத்தைச் சூழ்ந்துகிடக்கும் வண்டுகள்போல ஸ்தூல வடிவிலும் சூட்சும வடிவிலும் அங்கு நிறைந்து காணப்படுவர். அத்தகைய சிறப்புகளையுடைய திருவண்ணாமலை தலத்துக்கு இணையான ஒரு தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. ஒருமுறை திருவண்ணாமலையை வலம் வந்தால் பிறவிப்பிணி தீரும் என்பது ஐதிகம். சித்தர்கள் குடிகொண்டுள்ள தேனிமலையை ஏழு முறை சுற்றிவந்தால், ஒருமுறை திருவண்ணாமலையைச் சுற்றிவந்த பேறு கிட்டும் என்கின்றனர் அடியவர்கள்.

திருச்சியிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது தேனிமலை. தோற்றத்தில் சிறிய மலையாகத் தோன்றினாலும் கீர்த்தியில் பெருமலையாக விளங்குகிறது, தேனிமலை. தேவர்கள் விரும்பி வாழும் அந்தச் சிறுமலையில் உறையும் முருகப்பெருமானை வணங்க மலைப்படிகளில் கால் பதிக்கும் முன்பாக, அடிவாரத்தில் கோயில் கொண்டுள்ள தேனிப் பிள்ளையாரை வழிபட வேண்டும். அந்தக் கண நாதனின் அருளோடு படியேறிச் செல்லவேண்டும். உச்சி வெயிலில் வெறுங்காலுடன் ஏறினாலும், வெயிலின் உக்கிரம் தெரியாமதவண்ணம் - ஓடையில் கால்பதித்து நடப்பதுபோன்ற குளுமையைக் கால்கள் தழுவுவது இங்கு அதிசயம்.

கந்தனின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே மலை ஏறினால் 250 படிகள் இலகுவாக முடிந்துவிடுகிறது. மலையேறி நின்றதும் புத்துணர்வூட்டும் குளுமையான காற்று வீசி நம்மை உற்சாகமாக வரவேற்கும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். ராஜகோபுரத்தை அடுத்து மகா மண்டபம். அங்கே முருகப்பெருமானின் புகழ்பாடும் மயில்வாகனம் காணப்படுகிறது. அதையடுத்த அர்த்த மண்டபத்தில் விநாயகர், சிவன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நந்தி தேவர், நாகர் ஆகியோர் சந்நிதி கொண்டு அருள்கின்றனர். கருவறையில் மூலவராக வள்ளி தேவசேனா சமேதராக சுப்ரமணியர் காட்சியருள்கிறார். பக்தர்களைக் காக்கும் ‘சக்திவேல்’ முருகனின் திருக்கரங்களில் அணி செய்கிறது.

இந்தத் தலத்தின் சிறப்புகளைக் கூறும் பாடல் இது...

பச்சிலை சாறு பதியும் பாறை தேவ

எச்சிலில் தீரும் சதிகால் நோய்கள்

உச்சிலைப் பேறு விதியும் மாறும்

அச்சிலைதானே ஆறுமுகத் தேனீ!

`இந்த மலைக்கு வந்து ஆறுமுகப் பெருமானை வேண்டிக்கொள்ள, பிறவிப்பிணியான விதி மாறுவதோடு, இந்தப் பிறவியில் உண்டாகும் தீராத நோய்கள் எல்லாம் தீரும்' என்பது இந்தப் பாடலின் பொருள். இந்தத் திருக்கோயிலின் தலவரலாறும் அதை உறுதி செய்கிறது.

முன்னொரு காலத்தில் புதுக்கோட்டையை ஆண்ட மன்னர் ஒருவர் இந்த மலைக்கு அருகிலிருக் கும் திருக்களம்பூர் வனப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தார். வந்த இடத்தில் அவருக்குத் தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. வனத்தில் வலி தீர்க்கும் வைத்தியர் எவரேனும் கிடைப்பாரா எனத் தேடி அலைந்தனர் மந்திரிகள். எவரும் கண்ணில் படவில்லை. ஒரே ஒரு சிறுவன் அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான்.

தோற்றமோ சிறுவனுடையது. ஆனால், அவன் முகத்திலோ ஞானியின் கனிவு.

“இங்கு வைத்தியர் யாராவது உள்ளார்களா...” என்று மந்திரி அந்தச் சிறுவனிடம் கேட்டார்.

உடனே அந்தச் சிறுவனோ, “இங்கு வைத்தியர் எவருமில்லை. ஆனால், வைத்தியம் உண்டு. இதோ இந்த மலையின் மேல் மாமருந்தான முருகனின் வேல் உள்ளது. பக்தர் பிணி தீர்க்கும் அந்த வேல் விளங்கும் இடத்துக்கு அருகிலேயே ஒரு சுனை உண்டு. அந்தச் சுனை நீரை எடுத்துவந்து அருந்தக் கொடுங்கள். மன்னரின் பிணி தீரும்” என்று வழிகாட்டியிருக்கிறான் அந்த மாயச் சிறுவன். மந்திரிகளும் அப்படியே செய்ய, தீர்த்தம் அருந்திய அடுத்த நொடி தன் துன்பம் தீரப்பெற்றார் மன்னர்.

வலிதீர வழிகாட்டிய அந்தச் சிறுவனைத் தேடினார்கள். அவனைக் காணவில்லை. மன்னர் உடனடியாக மலையேறி வேலை தரிசித்து அங்கு வேலவனுக்கு ஓர் ஆலயத்தை எழுப்பினார்.

குமரன் குடியிருக்கும் இந்தக் குன்றின் சிறப்புகளைக் கண்விரியச் சொல்கிறார்கள் அடியவர்கள். இந்தச் சிறு மலையில் பாறைகள் எல்லாம் வெறும் பாறைகள் அல்ல. சித்தர்களும் ஞானியரும், தாங்கள் குடிகொண்ட இந்த மகிமை பொருந்திய மலையிலிருந்து அகல மனமின்றி அற்புதப் பாறைகளாயினர் என்கின்றனர்.

இந்த மலையில் உள்ள பாறைகளைக் கொப்புப் பாறை, குடகுப் பாறை, சிரிகிரிப் பாறை, அருணோதயப் பாறை, தேவசந்திரப் பாறை என்று வகைப்படுத்திச் சொல்கிறார்கள் பக்தர்கள். ஒவ்வொரு பாறைகளும் அற்புத சக்திகள் வாய்ந்தவை என்கின்றனர் ஊர்மக்கள். இந்தப் பாறைகள் அனைத்தும் நீரோட்டம் நிரம்பியவை. உடம்பில் நரம்பு ஓடுவதுபோல இந்தப் பாறைகளில் நரம்பு போன்ற அமைப்புகள் காணப்படுகிறது. இந்த நரம்புகளிலிருந்து நீர் கசிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நீரைப் ‘பிருகு நீர்’ என்கின்றனர். இந்தப் பிருகு நீரைத் தீர்த்தமாகக் கருதி உட்கொள்கின்றனர். இதனால் தீராத நோய்களும் தீர்கின்றன என்பது அவர்களின் நம்பிக்கை.

இங்கு காணப்படும் பாறைகளில் விசித்திரமான பாறை சிரிகிரி பாறை. இந்தப் பாறை, தம்மைச் சுற்றியிருக்கும் பகுதியில் சூரியனின் வெப்பத்தை உள்வாங்கி, மனிதர்கள் தாங்கிக் கொள்ளும்வகையில் சீதோஷ்ணத்தை மாற்றுகின்றன என்பது நம்பிக்கை. இதனால்தான் கொளுத்தும் வெயிலிலும் வெறும்காலுடன் மலையேற முடிகிறதாம்.

அந்தப் பாறையின் மகிமையை எண்ணிச் சிலிர்த்தோம். அதேபோல், அருணோதயப் பாறையில் முளைக்கும் ஒரு மூலிகை கண் நோய்க்கு அருமருந்தாகத் திகழ்கிறது என்கின்றனர்.

இத்தனை மருத்துவ குணங்கள் இந்த மலையில் எப்படி?

இந்தக் கேள்வியை முன்வைத்தபோது ஸ்ரீபெருமானந்த சித்தர் சுவாமிகளின் பெயரைச் சொல்லி அவரின் சாந்நித்தியமே காரணம் என்கிறார்கள். இங்குதான் இவரது ஜீவசமாதி அமைந்துள்ளது. பதினெண் சித்தர் மரபில் தன்வந்திரி சித்தர் பெருமானின் குருகுல சக்கரவாக சீலராகத் திகழ்ந்தவர் ஸ்ரீ பெருமானந்த சித்தர் சுவாமிகள். ‘ஔஷத ருத்ர பூஷண சித்தர்கள் சங்க வகையைச் சார்ந்தவர் இவர்' என்கிறார்கள். `ஔஷதம்' என்றால் மருந்து.

தேனிமலையில் வாசம் செய்யும் சரவணனின் ‘ஸ்கந்தாக்னி’ மற்றும் ‘ருத்ர சித்தாக்னி’ சக்திகள், இந்தப் பகுதிகளில் பரவி இந்தப் பாறைகளின் உள்நீரோட்டத்தில் கலந்து தெய்விக சக்திகளாக வெளிப்படுகின்றன. இன்றும் தன் சூட்சும உடலோடு அருள்பணி செய்கிறாராம், ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகள்.

மருந்து மலையாக விளங்கும் இந்தத் தேனி மலையின் சுற்றுப்பாதை 3 கி.மீ. இந்தப் பாதையில் கிரிவலம் வந்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். குறிப்பாக, முருகப்பெருமானுக்கு உகந்த மாதாந்திர கார்த்திகை நட்சத்திர தினங்களிலும், விசாகம், பரணி, அஸ்வினி போன்ற நட்சத்திர நாள்களிலும், பௌர்ணமி, செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களும் கிரிவலம் செய்வது மகிமை வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த கிரிவலப் பாதையில்தான் ஸ்ரீபெருமானந்த சுவாமிகளின் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது.

ஸ்ரீபெருமானந்த சுவாமிகள் இன்றும் அங்கு உறைந்து பக்தர்களின் வேண்டுதல்களுக்கு செவி சாய்க்கிறார் என்று பார்த்தோம் அல்லவா... கண்ணீரோடு அவர் சந்நிதிக்கு வந்து தம் குறைகளைச் சொன்னவர்கள், விரைவில் தங்கள் குறைகள் நீங்கப்பெற்று மனநிம்மதி பெறுகிறார்கள். சுவாமிகளின் ஜீவ சமாதியில் அடிப்பிரதட்சணம் செய்து வேண்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கி நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.

பஞ்சபூதங்களின் திரட்சியாக அமைந்துள்ள தேனிமலைத் திருத்தலம் ஒருமுறையேனும் சென்று தரிசிக்கவேண்டிய புண்ணியத் தலம்.

1937-ம் ஆண்டு வாழ்ந்த ஸ்ரீபெருமானந்த சுவாமிகளின் சீடரான அடைக்கப்ப சுவாமிகள் இங்கு கல்வெட்டு ஒன்றை நிறுவியிருக்கிறார். அதில் உள்ள செய்தியானது (கல்வெட்டில் உள்ளபடி) 68 செண்டு நிலத்தை யாரும் விற்கக்கூடாது என்றும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கோயில் திருப்பணிகளைச் செய்துவர வேண்டும் என்றும் கூறுகிறது.

கல்வெட்டில் உள்ள விவரம்...

‘சர்வ வல்லமை பொருந்திய கடவுலும் இப்பூமிக்கு அரசரும் துணை செம்பூ திகுஅ அடைக்கப்பசாமியார் எழுதியது, எண் ஞான குருவாகிய பெருமானந்த சுவாமி பேருக்கும் என் பேருக்கும் வாங்கிய புஞ்சை செண்டு சுயஅ (68)

மேற்படி சாமியார் ஏற்படுத்திய இடும்பற் வேல்மலை நாச்சி பெருமானந்த வேல்

சிவ சத்தி பெருமானந்தம் ஆலயம் மேற்படி ஆலயங்களை பூசித்து மேல்ப்பார்த்துவரு பவற்மேல்க் கண்ட இந்த புஞ்சைக்கு வரியை செலுத்தி

வர பலனை அனுபவித்து வருகிறது. எங்கள் இருவர் வாரிசுகளும் மேற்படியூர் திபளதித்தப்ப செட்டியார் வாரிசுகளும் மேல் பார்த்து பூசித்து அதனால் வரும் செல்வங்களை அடைய வேண்டியது. மேற்படி புஞ்சையை விலையீடு வயக்க ஒருவருக்கும் பாத்தியம் இல்லை இதன் தஸ்த்தாவேஜி மேல் கண்ட தீ.பழ. பொன்னயா செட்டியாரிடம் இருக்கிறது. மேல்கண்ட ஆலயங்களை யாரும் பாராவிட்டால் அரசர் பார்வை மேல்க்கண்ட தருமத்திற்கு கெடுதி நினைப்பவர் கெடுதி யடைவார் நன்மை நினைத்தவர் நன்மை அடைவார் இது சத்தியவாக்கு

மேல்கண்ட ஆலயம் கலி வருஷம் 5000, 1899 வருஷம். இந்த கால் ஊணியது 13.12.1937’

மலையில் கோபுரத்துக்கு அருகேயுள்ள சுனையை அனைவரும் பயன்படுத்து கின்றனர். இதன் நீர் நோய்கள் தீர்க்கும் மாமருந்து என்று நம்புகிறார்கள் பக்தர்கள். ஆனால், மலையேறி கோயிலுக்குள் செல்லும்போது, வலப்புறம் உள்ள சுனையை பக்தர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. இந்தச் சுனை நீர் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. எனவே, இந்தச் சுனையின் நீர் ஆலயப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.