Published:Updated:

சிந்தனை விருந்து! - உள்ளே என்ன இருக்கு?

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

தென்கச்சி சுவாமிநாதன், ஓவியம்: சேகர்

ருவன், நீண்ட நாள்களுக்குப் பிறகு கல்யாணம் செய்துகொண்டான்.

‘மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி’ என்று யோசித்து அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

ஒருநாள் கடை வீதிக்குப் போனான். கடையில் ஒரு பொருளைப் பார்த்தான். அதுவரையிலும் அவனுக்குப் பரிச்சயம் இல்லாத பொருள் அது. ஆகவே, தனக்குத் தெரியாதது... தன் மனைவிக்கும் தெரியாது என்கிற முடிவுக்கு வந்தான்.

‘‘அது என்னங்க’’ என்று விசாரித்தான்.

‘‘அதன் பெயர் தெர்மாஸ்ஃபிளாஸ்க்’’ என்றார் கடைக்காரர்.

‘‘அப்படின்னா என்னங்க... அது எதுக்கு உபயோகம்?’’

‘‘இதுக்குள்ளே சூடான பொருளை வெச்சா சூடாவே இருக்கும். குளிர்ச்சியான பொருளை வெச்சா குளிர்ச்சியாவே இருக்கும்!’’

‘‘அப்படியா சொல்றீங்க...?’’

‘‘ஆமாங்க!’’

‘‘அப்படின்னா அதுலே ஒண்ணு கொடுங்க!’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

அவனுக்குள் உற்சாகம் உற்பத்தியாயிற்று.

மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவேண்டும் என்பது அவன் திட்டம். அந்தத் திட்டப்படி மேலும் சில பொருள்களை வாங்கிக்கொண்டு வேகமாக நடந்து வீட்டுக்குள் நுழைந்தான்.

‘‘சீக்கிரம் இங்கே வா’’ என்று மனைவியை அழைத்தான்.

அவள் வந்தாள். கவனித்தாள்.

‘‘என்னங்க இது?’’

‘‘இது ஒரு புதுமையான பாத்திரம்!’’

‘‘அப்படியா?’’

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து

‘‘ஆமாம்! இதன் பெயர் தெர்மாஸ்ஃபிளாஸ்க்!’’

‘‘எதுக்கு இது’’ என்று தெரியாதது போல கேட்டாள்.

‘‘இது சூடான பொருளைச் சூடாகவும், குளிர்ச்சி யான பொருளைக் குளிர்ச்சியாகவும் அப்படியே வெச்சிருக்கும். உனக்காக வாங்கிட்டு வந்திருக்கேன்'’ என்றபடி கணவன் தலைநிமிர்ந்து நின்றான்.

மனைவி கேட்டாள்: ‘‘உள்ளே என்ன இருக்கு?’’

அவன் சொன்னான்: ‘‘அதுவும் உனக்காகத்தான் வாங்கி வந்தேன்!’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘அப்படியா? என்ன அது... சொல்லுங்களேன்.’’

‘‘ஒரு கப் காபியும் ஒரு கப் ஐஸ்க்ரீமும்!’’

மனைவி மயங்கி விழுந்தாள்!

நண்பர்களே, ஒன்றைத் தெரிந்துகொள்வது என்பது வேறு; அதைப் புரிந்துகொள்வது என்பது வேறு. ஆன்மிகம் என்பது புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. அதைத் தெரிந்துகொள்வதோடு நிறுத்திவிடுகிறவர்களுக்குத்தான், தேவையில்லாத குழப்பங்கள் எல்லாம் வந்து சேருகின்றன.

‘‘விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் என்ன வேறுபாடு’’ என்று பெர்னாட்ஷாவிடம் கேட்டார்கள். அவர் சொன்னார்... ‘‘விஞ்ஞானம் இருக்கிறதே.... புதிதாகப் பத்துப் பிரச்னைகளை உருவாக்காமல் எந்த ஒரு பிரச்னைக்கும் அது தீர்வு கண்டதில்லை!’’

அறிவால் ஏற்படுகிற வெளிச்சம் - விஞ்ஞானம்; ஆன்மாவால் ஏற்படுகிற வெளிச்சம் - மெய்ஞ்ஞானம்!

(9 மார்ச் 2006 இதழிலிருந்து...)