Published:Updated:

அன்னம் பாலிக்கும் தில்லை!

ஐப்பசி அன்னாபிஷேகத் திருநாளில் தில்லை நடராஜரை தரிசித்தால், நம் தேகத்தால் செய்த பாவ - தோஷங்களையும் நீக்கி நலமருள் வார் அவர்.

பிரீமியம் ஸ்டோரி

ஞ்சபூதங்களாக விளங்குபவன் இறைவன். அப்பேர்ப்பட்ட இறைவன், ஆகாய ரூபமாய் திகழும் தலம்தான் சிதம்பரம். இங்கே, உருவம், அருவம், அருவுருவம் என்று மூன்று நிலைகளில் சிவப்பரம்பொருள் காட்சி தருகிறார்.

அதாவது, ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் ஆனந்த நடராஜராகவும், அன்னை சிவகாமி அம்மையாகவும் காட்சி தருவது உருவ நிலை. திருமூலட்டானத்தில், சிவலிங்க சொரூபமா காட்சி தருவது அருவுருவ நிலை. இங்கே, இறைவன்- திருமூலநாதர்; இறைவி - உமையபார்வதி. அடுத்து, அருவமாக தரிசனம் தருவதுதான், சிதம்பர ரகசிய ஸ்தானம். பொற்சபையில், ஆடல்வல்லானின் வலப்பக்கச் சுவற்றில், சக்கரம் இருக்கும் இடம்தான் அது!

இதை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றெல்லாம் சொல்வார்கள். ஸ்ரீசுதர்சனச் சக்கரத்தால் செல்வம் கொழிக்கும் திருத் தலமாக திகழ்வது திருப்பதி. இங்கே இந்த அன்னாகர்ஷண சக்கரத்தால், அன்னத்தில் செழிக்கறது, சிதம்பரம். ‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்’ என்ற சிறப்பும் சிதம்பரத்துக்கு உண்டு.

அன்னம் பாலிக்கும் தில்லை!

ஆக, ஐப்பசி அன்னாபிஷேகத் திருநாளில் தில்லை நடராஜரை தரிசித்தால், நம் தேகத்தால் செய்த பாவ - தோஷங்களையும் நீக்கி நலமருள் வார் அவர். மட்டுமன்றி, அன்னாபிஷேகத் திருநாளில் தில்லைக்கு வந்து வணங்குபவர்களின் ஏழேழ் தலைமுறையும் அன்ன ஆகார குறைவு இல்லாமல் சௌக்கியத்துடன் வாழ சிவனருள் கிடைக்குமாம்.

- நமசிவாயம், சென்னை-44

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு