Published:Updated:

`அரோகரா முழக்கத்துடன் வடம்பிடித்த பக்தர்கள்!’- திருவண்ணாமலை தீபத்திருவிழா தேரோட்டம் கோலாகலம்

பெரிய தேர்
பெரிய தேர் ( கா.முரளி )

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 7-ம் நாள், அண்ணாமலையார் தேர் என்னும் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் வெகு விமரசியாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கமிட்டு தேரினை இழுத்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தித் தரும் ஸ்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். திருக்கோயிலில் 10 நாட்கள் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரசியாக நடைபெற்று வருகிறது.

`அரோகரா முழக்கத்துடன் வடம்பிடித்த பக்தர்கள்!’- திருவண்ணாமலை தீபத்திருவிழா தேரோட்டம் கோலாகலம்

கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று, அதிகாலை அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்குத் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதன்பின்பு, கோயிலில் உள்பிரகாரத்தில் வலம் வந்த பஞ்ச மூர்த்திகள் கோயிலின் ராஜகோபுரம் முன்பு உள்ள தேரில் எழுந்தருளினர். அதன்பின்பு, மகா தேரோட்டம் தொடங்கியது.

முதலாவதாகக் காலை 6 மணிக்கு விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. அதன்பின்பு முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், தேரோட்டமும் நடைபெற்றது. பராசக்தி அம்மன் தேரை முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இறுதியாக சண்டிகேசுவரர் தேரோட்டத்துடன் தேர்த் திருவிழா நிறைவுபெறுகிறது. இந்த தேரோட்டத்தையொட்டி, காலை முதலே திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

`அரோகரா முழக்கத்துடன் வடம்பிடித்த பக்தர்கள்!’- திருவண்ணாமலை தீபத்திருவிழா தேரோட்டம் கோலாகலம்

இந்த விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்சேவூர்ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு, தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி 3,800 போலீசார்பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு