Published:Updated:

தேவாரத் தலத்தில் தீமிதி திருவிழா...திருவண்ணாமலையில் ஆடி பிரம்மோற்சவம் நாளை தொடங்குகிறது!

சி.வெற்றிவேல்

திருவண்ணாமலையில், ஆடி பிரம்மோற்சவம் நாளை தொடங்குகிறது!

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

'தீமிதி திருவிழா' என்றாலே அம்மன் கோயில்கள்தான் நினைவுக்குவரும். ஆடிமாதத்தில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபடுவார்கள். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில், தீமிதி திருவிழா கொண்டாடப்படுவதில்லை.

அருணாச்சலேஸ்வரர்
அருணாச்சலேஸ்வரர்

ஆனால், இதற்கு விதிவிலக்காக சிவபெருமான் அக்னி ரூபத்தில் எழுந்தருளியிருக்கும் 'திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில், 'தீமிதி திருவிழா' நடைபெறும். ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், ஆடிப்பூரத்தன்று  தீமிதி திருவிழா கொண்டாடப்படும். 

சிவபெருமான், ஐம்பூதங்களின் வடிவமாக எழுந்தருளியிருக்கும் தலங்களில் நெருப்புத் தலமாக திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் ஆலயம் விளங்குகிறது . இங்கு, ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவதுண்டு.

தீமிதி திருவிழா
தீமிதி திருவிழா

நாளை  (24.7.19) தொடங்கும் ஆடிப்பூரம் பிரம்மோற்சவத் திருவிழாவில், தொடர்ந்து 10 நாள்கள் விநாயகர், பராசக்தி அம்மன் உற்சவத் திருவிழாக்கள் நடைபெறும். இந்தத் திருவிழாவின்போது அம்மனுக்கு அபிஷேகம், வளைகாப்பு வைபவங்கள் ஆகியவை நடைபெறும்.

Vikatan

ஆடிப்பூரம் நன்னாளில் (3.8.19) உண்ணாமுலையம்மன் சந்நிதிக்கு முன்பு பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.  

தீமிதி திருவிழா
தீமிதி திருவிழா

சிவபெருமான் நெருப்பு ரூபத்தில் எழுந்தருளும் திருவண்ணாமலையில், தீமிதித்து உண்ணாமுலையம்மனிடம் வேண்டிக்கொண்டால், பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.