Published:Updated:

திருவண்ணாமலை மகா தீபம் மற்றும் பரணி தீபம்... பக்தர்களுக்குத் தடை! கட்டுப்பாடுகள் என்னென்ன?

திருவண்ணாமலை தீபம்
திருவண்ணாமலை தீபம்

"திருவண்ணாமலை மகா தீபம் மற்றும் பரணி தீபத்தைக் காண பக்தர்களுக்கு முற்றிலும் தடை!" - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை (20.11.2020) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் கடைசி நாளான 29-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோயிலின் கருவறை முன்பு பரணி தீபமும் அன்று மாலை 6 மணி அளவில் கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மகாதீப மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும்.

திருவண்ணாமலை தீபம்
திருவண்ணாமலை தீபம்

கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு பரணி தீபம் மற்றும் மகாதீபத்திற்குப் பக்தர்கள் தரிசனம் செய்ய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வருகிற 29-ஆம் தேதி மகா தீபத்தின்போது பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தீபத் திருவிழாவையொட்டி இந்த ஆண்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது, வழக்கமான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வருகின்ற 28, 29 தேதிகளில் திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் மக்கள் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே திருவண்ணாமலை நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

அதேபோன்று நாளை முதல் வருகிற 28-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்யப்பட்ட ஐந்தாயிரம் பக்தர்களும், அதேபோன்று நேரடியாகக் கோயிலுக்கு வரும் மூன்றாயிரம் பக்தர்களும் என ஒரு நாளைக்கு 8 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோயில் மாடவீதியிலும் கோயிலிலும் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்று 29-ம் தேதி மகா தீபத்தன்று தீபமலை மீது ஏற முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர் தெரிவித்து இருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு