Published:Updated:

திருவருள் திருவுலா

மருதாநல்லூர் ஶ்ரீஸத்குரு ஸ்வாமிகள்
பிரீமியம் ஸ்டோரி
மருதாநல்லூர் ஶ்ரீஸத்குரு ஸ்வாமிகள்

ஶ்ரீராம நாமம் ஜபிப்பதையே தன் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் ஸத்குரு ஸ்வாமிகள்.

திருவருள் திருவுலா

ஶ்ரீராம நாமம் ஜபிப்பதையே தன் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் ஸத்குரு ஸ்வாமிகள்.

Published:Updated:
மருதாநல்லூர் ஶ்ரீஸத்குரு ஸ்வாமிகள்
பிரீமியம் ஸ்டோரி
மருதாநல்லூர் ஶ்ரீஸத்குரு ஸ்வாமிகள்

மருதாநல்லூர் ஶ்ரீஸத்குரு ஸ்வாமிகள்

ஞ்சை மாவட்டம், திருவிசநல்லூர் கிராமத்தில் கி.பி. 1777-ஆம் ஆண்டில் அவதரித்தவர் மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள். இவரது இயற்பெயர் வேங்கடராமன். மகான் ஶ்ரீதர ஐயாவாள், உய்யவந்த தேவநாயனார் ஆகியோர் பிறந்த புண்ணிய பூமியில் பிறந்ததாலோ என்னவோ, ஸத்குரு ஸ்வாமிகளும் மகானாகவே வளர்ந்தருளினார். 3 வயது வரை பேச்சில்லாமல் வளர்ந்த இவர் ராமநாம மகிமையால் வாக்கு வன்மை பெற்றார்.

அற்புதங்கள்: ஶ்ரீராம நாமம் ஜபிப்பதையே தன் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் ஸத்குரு ஸ்வாமிகள். தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை ராம நாமத்தை ஜபித்து வாழ்ந்த ஸத்குரு ஸ்வாமிகள், ஶ்ரீராமபிரானின் பரிபூரண ஆசியைப் பெற்றவர். இவருக்காக ஶ்ரீராம பிரானே மனித வடிவம் தாங்கிவந்து செய்த அற்புதங்கள் பலவுண்டு.

மருதாநல்லூர் ஶ்ரீஸத்குரு ஸ்வாமிகள்
மருதாநல்லூர் ஶ்ரீஸத்குரு ஸ்வாமிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகளின் காலத்தில், கோவிந்தபுரத்தில் உள்ள ஶ்ரீபோதேந்திரரின் அதிஷ்டானத்தைப் பக்தர்கள் தரிசிக்க முடியாத நிலை. காரணம், அப்போது கரைபுரண்டு ஓடிய காவிரியின் வெள்ளம் ஶ்ரீபோதேந்திரரின் அதிஷ்டானத்தை முழுவதுமாக மூழ்கடித்து மறைத்திருந்தது. இந்த நிலையில் தஞ்சை மகாராஜாவின் விருப்பப்படி, காவிரி நதியைச் சற்றே திசை (வடப் பக்கம்) திருப்பி போதேந்திராளின் அதிஷ்டானத்தைக் கண்டறிந்து வழிபட்டவர் இவர். ஸத்குரு ஸ்வாமிகளுக்கு, திருவிசலூருக்கு அடுத்து இருக்கும் கிராமம் ஒன்றை, சாசனம் எழுதிக் கொடுத்தார் தஞ்சை மகாராஜா. அதுவே ‘பாகவதபுரம்’ என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

தரிசனம்: 1817- ம் ஆண்டு ஶ்ரீராம நவமிக்கு முந்தைய தினம் ஆடுதுறை பெருமாள் கோயிலில் ராமநாமத்தைக் கூறியபடியே பகவான் சொரூபத்துடன் கலந்து விட்டார் ஸ்வாமிகள். பகவான் சொரூபத்தில் கலந்து விட்டதால், ஶ்ரீஸத்குரு ஸ்வாமிகளுக்கு அதிஷ்டானம் இல்லை. அவர் ஆராதித்த மருதாநல்லூர் ஶ்ரீராதாகிருஷ்ண திருமடமே, அவரது நினைவாலயமாகப் போற்றப்படுகிறது.

எங்கே இருக்கிறது?: கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில், சுமார் 6 கி.மீ. தொலைவு. மருதாநல்லூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து மெயின் சாலையிலேயே சிறிது தொலைவு நடந்தால், இந்த மடத்தை அடையலாம். தரிசன நேரம் காலை 9- 12 மணி; மாலை 5 - 7.30 மணி வரை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருப்போரூர் ஶ்ரீசிதம்பர சுவாமிகள்

துரையம்பதியில் 400 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மகான் இவர். மதுரை மீனாட்சியம்மை மற்றும் முருகப்பெருமானின் பூரண அருளைப் பெற்றவர். ஶ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் குருவாக விளங்கியவர் ஶ்ரீமத் குமாரதேவர். திருப்போரூர் சந்நிதிமுறை, மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா, திருக்கழுக்குன்றம் வேதகிரிசுரர் பதிகம், விருத்தாசலம் குமாரதேவர் நெஞ்சுவிடு தூது, பஞ்சதிகார விளக்கம் ஆகிய நூல்களை அருளியவர்.

அற்புதம்: `வடக்கே யுத்தபுரி என்ற தலம் உள்ளது. அங்கு சென்று என் குமாரனாகிய சுப்பிரமணிய மூர்த்தியின் ஆலயத்தைப் புதுப்பிப்பாய்’ என்று மீனாட்சியம்பிகை கட்டளையிட்டபடி, திருப்போரூரை அடைந்தார் சுவாமிகள். ஊர் எல்லையில் வேம்படி விநாயகர் கோயிலை வழிபட்டு அங்குள்ள பனங்காட்டில் முருகன் ஆலயத்தைத் தேடித் திரிகையில், பெண் பனைமரம் ஒன்றின் கீழ் சுயம்பு மூர்த்தமாக சுப்பிரமணியக் கடவுள் இருப்பதைக் கண்டு பரவசமடைந்தார். தொடர்ந்து, ஒருநாள் முருகனே, சுவாமிகளின் குருநாதரின் உருவில் வந்து, பனை மரத்தடிக்கு அழைத்துச்சென்று திருக்கோயில் முன்பு இருந்த அமைப்பைக் காட்டியருளினார்.

திருப்போரூர் ஶ்ரீசிதம்பர சுவாமிகள்
திருப்போரூர் ஶ்ரீசிதம்பர சுவாமிகள்

நோயுற்றுத் தம்மைத் தேடி வந்தவர்களுக்குத் திருநீற்றையே மருந்தாகத் தந்து அதன் மூலம் பலரும் குணமடைந்து அப்படியாகத் திருப்பணிக்குப் பொருள் சேர்த்துத் திருப்பணி நிறைவுபெற்று கோயில் உருவாயிற்று என்பர். கோயில் திருப்பணிக்கு வைத்திருந்த செல்வங்களைக் கொள்ளையிட வந்த திருடர்களையும் மனம் திருந்தச்செய்து, அடியார்களாக மாற்றிய அருளாளர் இவர்.

தரிசனம்: கோயிலை கட்டி முடித்ததும், கண்ணகப்பட்டு எனும் ஊரில் மடாலயம் அமைத்து வாழ்ந்தார். கி.பி. 1659- ஆம் ஆண்டு வைகாசி விசாகத்தன்று சுரங்கம் வழியே சென்று திருப்போரூர் ஆலயத்தில், மூலவர் திருமேனியுடன் இரண்டறக் கலந்தார். கண்ணகப்பட்டில் அமைந்த சுவாமிகளின் திருக்கோயில், ‘மத் சிதம்பர சுவாமிகள் மடாலயத் திருக்கோயில்’ என்றே வழங்கப்படுகிறது.

எங்கே இருக்கிறது? திருப்போரூரிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது கண்ணகப்பட்டு மடாலயம். தரிசன நேரம் - காலை 8 முதல் 10 மணி வரை, மாலை 5 முதல் 7 மணி வரை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘பறவைச் சித்தர்’ ஶ்ரீசக்கரை அம்மா’

முந்தைய வடஆற்காடு மாவட்டம், போளூர் அருகிலுள்ள தேவிகாபுரத்தில் வசித்த சேஷ குருக்கள் என்ற சிவாசார்யரின் குடும்பத்தில் பிறந்தவர் அனந்தாம்பாள் என்ற ஶ்ரீசக்கரை அம்மா. 9 வயதில் சென்னையில் மணமுடித்து வந்து 20 வயதில் கைம்பெண்ணானவர், பின்னர் சிவனருளால் சித்தபுருஷியாக மாறியவர்.

அற்புதங்கள்: 20 வயதில் தொடங்கிய தவ வாழ்வை 10 ஆண்டுகள் தொடர்ந்தார் சக்கரை அம்மா. உணவு, உறக்கம், நீர் எதுவும் எடுத்துக் கொள்ளாத தீவிர தவ வாழ்வு அது. இந்தக் கடுமையான யோகத்தால் அட்டமா ஸித்திகளை அடைந்த இந்த அம்மையார் நினைத்த இடத்துக்கு பறந்து செல்லும் ஸித்து அறிந்தவராம். ஶ்ரீசக்கர வழிபாட்டை தொடர்ந்து செய்ததால் ஶ்ரீசக்கர அம்மாள் எளிய மக்களின் மொழியால் சக்கரை அம்மா என்றானார்.

‘பறவைச் சித்தர்’ ஶ்ரீசக்கரை அம்மா’
‘பறவைச் சித்தர்’ ஶ்ரீசக்கரை அம்மா’

இவர் வாழ்ந்த புதுப்பேட்டை மடத்தில், சக்கரை அம்மா மொட்டை மாடியில் அமர்ந்து தியானம் செய்த திண்டு, அவருடைய சிலை, படங்கள் எல்லாம் இன்றும் இருக்கின்றன. பார்வையாலே வந்திருப்பவரின் குறைகளைத் தீர்த்த மகாயோகி இந்த அம்மா. இவர் புரிந்த பல ஸித்து விளையாட்டுகளால் கர்ம வினைகள் தீர்த்து நலம் பெற்றவர் அநேகம். இன்றும் இவர் அதிஷ்டானத்துக்கு வரும் பலரின் குறைகளைத் தீர்த்துவருகிறார் ஶ்ரீசக்கரை அம்மா. குறிப்பாக மனக்குறைகள் யாவும் இவரை எண்ணினாலே தீரும் என்கிறார்கள்.

தரிசனம்: சென்னை திருவான்மியூர் காலக்ஷேத்ரா காலனியில், 1901 பிப்ரவரி 28-ஆம் தேதி, தனது 47-வது வயதில் ஜீவன் முக்தி அடைந்த அம்மா, இப்போதும் கண்கண்ட தெய்வமாக விளங்கி வருகிறார். இவரின் பெருமை அறிந்த காஞ்சி மகாபெரியவர், 1948 ஜனவரியில் ஐந்து நாட்கள் இங்கே தங்கி தியானம் செய்தாராம்.

எங்கே இருக்கிறது? சென்னை திருவான்மியூர் காலக்ஷேத்ரா காலனியில், பாம்பன் ஸ்வாமி கோயில் அருகே அமைந்துள்ளது இவரின் அதிஷ்டானம். தரிசன நேரம்: தினமும் காலை 6 முதல் 12 மணி வரை, மாலை 5 முதல் 8 மணி வரை.

‘கோடகநல்லூர் ஶ்ரீசுந்தர சுவாமிகள்’

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில், 1831-ம் வருடம் டிசம்பர்-3, சனிக்கிழமை அன்று அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார் ஶ்ரீசுந்தர சுவாமிகள். ஶ்ரீவத்ஸ கோத்திரத்தைச் சேர்ந்த யக்ஞேஸ்வர சாஸ்திரிகள்- காமாட்சி அம்மாள் தம்பதியின் 2-வது மகனாகப் பிறந்தார். மகான் அப்பய்ய தீட்சிதரின் பரம்பரையில் அவதரித்தவர் சுந்தர சுவாமிகள்.

அற்புதம்: ஸ்வாமிகள், தினமும் ஒரு லட்சம் முறை பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து வந்தார். மேலும் யோகம், தவம் ஆகியவற்றிலும் கரை கண்டிருந்தார் ஸ்வாமிகள். நெல்லை சங்கர மடத்தில் சில காலம் வசித்த சுவாமிகள், பின்னர் நெல்லையை அடுத்த கோடகநல்லூரை அடைந்தார். அங்கு, தாமிரபரணிக் கரையோரத்தில் வளர்ந்திருக்கும் புதருக்குள் சென்று, நிஷ்டையில் ஆழ்ந்திருப்பார். சில தருணங்களில் அப்படியே சமாதி நிலையை எய்தி விடுவாராம்.

‘கோடகநல்லூர் ஶ்ரீசுந்தர சுவாமிகள்’
‘கோடகநல்லூர் ஶ்ரீசுந்தர சுவாமிகள்’

அன்ன ஆகாரம் எதுவும் இன்றி, சுவாமிகள் நிஷ்டையில் இருக்கும் போது, ஆதிசிவனே அந்தணர் வடிவில் அன்னப் பாத்திரத்துடன் தோன்றி பசியாற்றி அருளியது உண்டு என்கிறார்கள். திருவையாறு பகுதி யில் பல ஆலயங்களின் திருப்பணிகளைச் செய்வித்தவர். ஒருமுறை வைகாசி மாதத்தில் ஒரே நாளில்... ஒரே நேரத்தில்... ஏழு ஆலயங்களுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆச்சரியம்... ஏழு கோயில்களிலும் ஒரே நேரத்தில் இருந்தாராம் சுவாமிகள்! அதுமட்டுமா... உள்ளங்கையில் நெருப்பை வரவைத்து பூஜைகள் புரிந்தது, திருக்குளத்தின் நீரை எடுத்து நெய்யாக்கியது, புயலில் பாதிக்கப்பட இருந்த அன்பர் குடும்பத்தைப் பாதுகாத்தது என இவர் செய்த அற்புதங்கள் அநேகம்!

தரிசனம்: அரிமளத்தில் 1878-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி (ஐப்பசி 6) கிருஷ்ண பட்ச தசமி அன்று ஸித்தி அடைந்தார் சுவாமிகள். சுவாமிகளது இறுதி காரியங்களை செய்து முடித்து, சுவாமிகளது சமாதியின் மேல் அவர் பூஜித்து வழிபட்ட பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர் அன்பர்கள்.

எங்கே இருக்கிறது?: புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து தேனிப்பட்டி மற்றும் ஏம்பல் செல்லும் பேருந்துகள் அரிமளம் வழியாகச் செல்லும். தரிசன நேரம் - தினமும் காலை 7.30 முதல் 12 மணி வரை; மாலை 4 முதல் 7 மணி வரை.

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்

காளயுக்தி வருடம் (கி.பி. 1858), ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தன்று பிறந்தவர் இந்த சுவாமிகள். மாயாண்டி என்பது இயற்பெயர். மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கிறது திருப்பாச்சேத்தி, இந்த ஊருக்குத் தென் திசையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளடு கட்டிக்குளம். இந்த ஊரில்தான் சூட்டுக்கோல் ராமலிங்கம் சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார்.

அற்புதங்கள்: இவர் பூஜிக்கும்போதெல்லாம் ஒரு நல்ல பாம்பு இவர் திருமேனியில் ஊர்ந்து வந்து விளையாடுமாம். இவரின் கையில் எப்போதும் இருக்கும் சூட்டுக்கோல், அபூர்வ சக்தி வாய்ந்தது. பலரது நோய்களை தீர்த்தது அந்த கோல். பொய் சொல்லி யாரேனும் இந்த மகானிடம் வந்தால் அது சூட்டுக்கோலாக மாறி சுட்டுவிடுமாம்.

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்
சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்

உள்ளூரில் பல சித்துகளைப் புரிந்த இவர், குடும்பத்தை விட்டு துறவறம் மேற்கொண்டு தேசமெங்கும் சுற்றி பலரது குறைகளைத் தீர்த்துவந்துள்ளார். அற்ப ஆயுள் கொண்ட இருளப்ப கோனாரின் தலைவிதியை மாற்றி அவரைப் பல காலம் வாழ வைத்தவர் இந்த மகான். செல்வத்தை இழந்த பலரும் இவரால் நீங்காத செல்வத்தை அடைந்தனர். விஷ ஜந்துக்கள் தீண்டி பாத்ப்புக்குள்ளான பலரும் இவரது சூட்டுக்கோலால் உயிர் பெற்றனர்.

ஒருமுறை ரயிலில் பிரயாணித்த சுவாமியை, யாரோ பரதேசி என்று எண்ணிய வெள்ளைக்கார அதிகாரி ஒருவர் ரயிலிலிருந்து இறக்கிவிட, அந்த ரயிலே புறப்படமால் நின்றுவிட்டதாம். பிறகு சுவாமியை வணங்கி அவரை ஏற்றியபிறகே ரயில் கிளம்பியதாம்! அற்புதங்கள் பல புரிந்த இவர் இன்றும் மதுரை வட்டார மக்களின் தெய்வமாக விளங்கி வருகிறார்.

தரிசனம்: திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள திருக்கூடல்மலை (புசுண்டர் மலை) பகுதியில், சூட்டு க்கோல் ராமலிங்க விலாசம் என்ற இடத்தில் யோகத்தில் அமர்ந்து ஸ்வாமி ஜீவசமாதி அடைந்தார். இங்கு இன்றும் இவருடைய சூட்டுக்கோலை தரிசிக்கலாம்.

எங்கே இருக்கிறது?: திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள திருக் கூடல்மலை (புசுண்டர் மலை) பகுதியில் கட்டிக்குளம் சூட்டுக் கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதித் திருக்கோயில் உள்ளது. தரிசன நேரம் - தினமும் காலை 6 முதல் 2 மணி வரை; மாலை 4 முதல் 10 மணி வரை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism