Published:Updated:

திருவருள் திருவுலா: பிணி தீர்க்கும் ஆலயங்கள்!

பிணி தீர்க்கும் ஆலயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பிணி தீர்க்கும் ஆலயங்கள்!

இந்த தீர்த்தத்தில் நீராடினாலோ திருவள்ளூர் வீரராகவப் பெருமாளை தரிசித்தாலோ தீராத நோய்கள் தீரும்.

திருவருள் திருவுலா: பிணி தீர்க்கும் ஆலயங்கள்!

இந்த தீர்த்தத்தில் நீராடினாலோ திருவள்ளூர் வீரராகவப் பெருமாளை தரிசித்தாலோ தீராத நோய்கள் தீரும்.

Published:Updated:
பிணி தீர்க்கும் ஆலயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பிணி தீர்க்கும் ஆலயங்கள்!

லகெங்கும் கொரோனா வைரஸ் நோய் அச்சுறுத்தி வருகிறது. அதோடு தேவையற்ற வதந்திகளும் மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறது. கவலை வேண்டாம். தனிமைப்படுதலும் தகுந்த மருத்துவ முன்னேற்பாடுகளும் நம்மைக் காக்கும். மேலும், அதீதமான தெய்வ நம்பிக்கை நம்மை என்றும் கைவிடாது. இங்கு பிணி தீர்க்கும் ஆலயங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளோம். தற்போது நேரில் தரிசிக்க முடியாவிட்டாலும் ஒரு நிமிடம் இந்த ஆலய தெய்வங்களை மனத்தில் நிறுத்தி வணங்கி, தெரிந்த துதிப்பாடல்களைப் பாடி வணங்குங்கள். நிச்சயம் உங்களை நோய் தாக்காது. எல்லோரும் இணைந்து பிரார்த்திப் போம். தெய்வ அருளால் இந்தக் கொடிய நோயிலிருந்து மீள்வோம். சக்தி விகடனும் உங்களோடு பிரார்த்திக்கிறது. வாழ்க வையம். வாழ்க எம் மக்கள்.

பிணி தீர்க்கும் ஆலயங்கள்!
பிணி தீர்க்கும் ஆலயங்கள்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நோய் தீர்க்கும் தேனும் தினை மாவும்!

இறைவன் - ஸ்ரீவீரராகவப் பெருமாள்

அம்பாள் - ஸ்ரீகனகவல்லித் தாயார்

தல சிறப்பு : 1,600 வருடங்கள் பழைமை வாய்ந்த, பல்லவர் காலக் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இது, தொண்டை நாட்டு திவ்ய தேசத்தில் 22-வது தலம். இங்கே திருமழிசை ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்து பாடியுள்ளனர்.

நோய் தீர்க்கும் தேனும் தினை மாவும்!
நோய் தீர்க்கும் தேனும் தினை மாவும்!

வழிபாட்டு சிறப்பு : வேதத்தில் சிறந்த சாலிஹோத்ர முனிவர் இந்தத் தலத்துக்கு வந்தார். அங்குள்ள `ஹ்ருத்தாப நாசினி’ குளத்துக்கு அருகில் அமர்ந்த சாலிஹோத்ர முனிவர், அங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் நீராடுவது கண்டு வியந்து போனார். அப்போது இந்த தீர்த்தத்தில் நீராடினாலோ திருவள்ளூர் வீரராகவப் பெருமாளை தரிசித்தாலோ தீராத நோய்கள் தீரும். மன சஞ்சலங்கள் நீங்கும் என்று தேவர்களால் உணர்ந்து வழிபட்டார். இங்கு வரும் பக்தர்களுக்குத் தேன் கலந்த தினைமாவு பிரசாதம் வழங்கப்படுகிறது. இதை உட்கொண்டால், ஆரோக்கிய வாழ்வைப் பெற்று வாழ்வாங்கு வாழலாம் எனப்படுகிறது.

எங்கு உள்ளது? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள திருவள்ளூர் நகரின் மையத்தில் ஆலயம் உள்ளது.

நளிர்சுரம் நீக்கிய நாரீஸ்வரர்!

இறைவன் - ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்

அம்பாள் - ஸ்ரீபாகம்பிரியாள்

தல சிறப்பு : தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனுபூதி போன்ற தெய்விக நூல்களில் போற்றப்பட்ட தலம் இது.

நளிர்சுரம்
 நீக்கிய நாரீஸ்வரர்!
நளிர்சுரம் நீக்கிய நாரீஸ்வரர்!

வழிபாட்டு சிறப்பு : கொங்குநாட்டுப் பகுதிக்கு வந்த திருஞானசம்பந்தர், இங்கு வந்தபோது, தன்னுடைய குழுவினரையும் பிறரையும் நளிர்சுரம் (குளிர்சுரம்) தாக்கி இருப்பதைக் கண்டார். இறையனாரை வணங்கி, ‘அவ்வினைக்கு இவ்வினை’ என்று தொடங்கி, ‘தீவினை வந்து எம்மைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்’ என்று ஆணையிட்டுப் பாடினார். அடியார்களைப் பற்றியிருந்த நளிர்சுரம், அவர்களிடமிருந்து மட்டுமல்லாமல், இந்தப் பகுதியை விட்டே ஓடி விட்டது. இந்தப் பதிகம் ‘திருநீலகண்டப் பதிகம்’ எனப்படுகிறது. இதைக் கேட்டாலோ, பாடினாலோ தீராத பிணி நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள தேவ தீர்த்தமும் சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்து எனப்படுகிறது.

எங்கு உள்ளது? ஈரோட்டிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், சேலத்திலிருந்து 45 கி.மீ தொலைவிலும் உள்ளது.

பவானியில் நீராடி... பண்ணாரியில் தரிசித்தால்!

இறைவி - ஸ்ரீபண்ணாரி மாரியம்மன்

தல சிறப்பு : முற்றிய நோய் தீர்த்து, நினைத்ததை நிறைவேற்றும் கலியுகக் காவல் தெய்வம் பண்ணாரியம்மன். 300 ஆண்டுகளுக்கு முன்பு, கேரள தேசத்தில் வண்ணார்காடு என்ற ஊரிலிருந்து பொதி மாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்த தேவி இங்கேயே மக்களுக்குத் துணையாக அமர்ந்து இன்றுவரை அருளாசி தந்து தீராத நோய்களைத் தீர்த்து வருகிறாள். கருவறையில் சுயம்பு லிங்கத் திருமேனியாகவும், பிற்காலத்தில் அமைக்கப்பட்ட உருவத் திருமேனியுடனும் தரிசனம் தருகிறாள் பண்ணாரி மாரியம்மன்.

பவானியில் நீராடி... பண்ணாரியில் தரிசித்தால்!
பவானியில் நீராடி... பண்ணாரியில் தரிசித்தால்!

வழிபாட்டு சிறப்பு : அம்மனின் சந்நிதியில் தரப்படும் பிரசாத தீர்த்தத்தின் மகிமையால் பலவித நோய்களும் விலகும்; கவலைகள் பறந்தோடும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. பண்ணாரி கோயிலுக்கு தெற்கில் சுமார் 9 கி.மீ தொலைவில் ஓடுகிறது பவானி. பக்தர்கள் இந்த நதியில் குளித்துவிட்டு பண்ணாரியம்மனை வணங்கி அருள் பெறுகிறார்கள்.

எங்கு உள்ளது? கோவை, ஈரோடு, மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களிலிருந்து பண்ணாரிக்குச் செல்ல பேருந்து வசதிகள் உண்டு.

சுகவாழ்வளிக்கும் சுருளி வேலப்பர்!

இறைவன் - ஸ்ரீசுருளி வேலப்பர்

தல சிறப்பு : முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எட்டாயிரம் ரிஷிகளும், பதினெண் சித்தர்களும் தவம்புரிந்த தலம் இது. அவர்கள் தவம் செய்த குகை, `கயிலாய குகை’ என்று போற்றப்படுகிறது. குகையின் மேல் உள்ள குன்றில் கோயில்கொண்டு, அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீசுருளி வேலப்பர். இங்கே உள்ள உதக நீரான சுருளி தீர்த்தம், நோய் தீர்க்கும் மாமருந்தெனப் போற்றப்படுகிறது. போகரின் குரு காலாங்கி சித்தர் தவம் செய்த பூமி இது. பின்னர் போகரும் இங்கு வந்து தங்கி அற்புத ஒளஷதங்களைத் தயாரித்தார்.

சுகவாழ்வளிக்கும் சுருளி வேலப்பர்!
சுகவாழ்வளிக்கும் சுருளி வேலப்பர்!

வழிபாட்டு சிறப்பு : சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் உள்ளதாம். இவற்றில் ரிஷிகள், தேவர்கள், சித்த புருஷர்கள் ஆகியோர் தவமிருந்தனராம். விபூதி குகை, சர்ப்ப குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை என முக்கியமான குகைகளைக் காண மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வந்து சுருளி அருவியில் குளித்து இந்த வேலப்பரை தரிசித்தால் தீராத வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை.

எங்கு உள்ளது? தேனி மாவட்டம், கம்பம் அருகில், சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

மேனி நலம் காக்கும் திருமேனி நாதர்!

இறைவன் - திருச்சுழி ஸ்ரீதிருமேனி நாதர்

இறைவி - சகாயவல்லி, துணைமாலை நாயகி

தல சிறப்பு : மூன்று யுகங்களிலும் கொடியவர்களைக் கொன்ற பாவம் சேர்ந்து கொடிய நோயாக உருவாக அது தீர, இங்கு வந்து தீர்த்தம் உண்டு பண்ணி, அதில் நீராடி சிவனாரை வணங்கி, பாப விமோசனம் பெற்றாள் பூமாதேவி என்கிறது ஸ்தல புராணம். எனவே, இங்கே உள்ள திருக்குளம் நோய் தீர்க்கும், பாவம் தீர்க்கும் மகிமை கொண்டது என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஊரில் வந்து தங்கிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஈசன் திருக்காட்சி அளித்தாராம். இங்கே ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் காட்சி தர, பிரளய விடங்கர் எனும் பெயருடன் லிங்க மூர்த்தமாகக் காட்சி தருகிறார் சிவபெருமான்.

மேனி நலம் காக்கும் திருமேனி நாதர்!
மேனி நலம் காக்கும் திருமேனி நாதர்!

வழிபாட்டு சிறப்பு : ஓர் ஊர்; ஒரு பேர் ஒன்றுமிலாத பரபிரும்மம், திருமேனி தாங்கி நிற்பதால் இந்தத் திருச்சுழி திருமேனி நாதரை வணங்கினால் உடல் கொண்ட நோய்கள் யாவும் நீங்கும் என்பது அன்பர்களின் நம்பிக்கை.

எங்கு உள்ளது? மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை சென்று அங்கிருந்து 15 கி.மீ தொலைவில் ஆலயம் உள்ளது. பேருந்து வசதிகள் இருக்கின்றன.