முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் மயிலம், கூத்தாண்டவர் அருள்புரியும் கூவாகம், அரங்கநாதர் பள்ளிகொண்டிருக்கும் சிங்கவரம், அங்காளபரமேஸ்வரி அருள்புரியும் மேல்மலையனூர்... இப்படியான அற்புத க்ஷேத்திரங்களைத் தன்னகத்தே கொண்டது, விழுப்புரம் மாவட்டம்.

மேற்சொன்ன ஆலயங்கள் மட்டுமல்ல, ஆன்மிகச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் ஒருங்கேபெற்ற வேறுபல தலங்களும் இந்த மாவட்டத்தில் உண்டு. அவற்றில் ஐந்து குறிப்பிடத்தக்கவை.

தோஷங்கள் போக்கும் திந்திரிணீஸ் வரர் கோயில், முன்ஜன்ம பாவங்களைப் போக்கும் கோலியனூர் வாலீஸ்வரர் கோயில், கலைகளில் திறமையை அருளும் இரும்பை மகாகாளேஸ்வரர் கோயில், வக்கிரசனியின் கஷ்டங்கள் தீர்க்கும் திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர், ஞானம் அருளும் தாதாபுரம் ரவிகுல மாணிக்கம் ஈஸ்வரர் கோயில் ஆகிய ஐந்து தலங்களின் சிறப்புத் தகவல்கள் உங்களுக்காக....

திண்டிவனம் பஞ்சலிங்க க்ஷேத்திரம்!

இறைவன் : அருள்மிகு திந்திரிணீஸ்வரர்

இறைவி : அருள்மிகு மரகதாம்பிகை

தலச்சிறப்பு: குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் 900 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்தது. வால்மீகி முனிவர் வழிபட்ட இந்தத் திருத்தலத்தில் இறைவன் பஞ்சலிங்க வடிவங்கள்கொண்டு அருள்பாலிக்கிறார். திந்திரிணீஸ்வரர், திருமூலநாதர், கரகண்டேஸ்வரர், ஞானபுரீஸ்வரர், பக்தபிரகலாதீஸ்வரர் ஆகிய ஐந்து திருமேனிகளோடு ஈசன் எழுந்தருளியிருப்பதால் இந்தத் தலத்துக்குப் ‘பஞ்சலிங்க க்ஷேத்திரம்’ என்றும் பெயர். வால்மீகி மட்டுமன்றி திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி ஆகிய முனிவர்களாலும் வழிபடப்பட்ட சிறப்பினையுடையது இந்தத் தலம். திருநாவுக்கரசர் இந்தத் தலத்தை வைப்புத்தலமாகப் பாடியுள்ளார். இந்தத் தலத்தில் மகாசிவராத்திரியன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படர, சிவலிங்கம் ஜோதிரூபமாய்க் காட்சி தருமாம்.

வழிபாட்டுச் சிறப்பு: இங்கு மூலவராகத் திகழும் அருள்மிகு திந்திரிணீஸ்வரரின் தரிசனம் சகல பாவங்களையும் போக்கும் என்கிறது தலபுராணம். இந்தத் தலத்தில் கருணாமூர்த்தியாகத் திகழும் ஈசனை வழிபட்டு முனிவர்களும் ரிஷிகளும் நிலையான கீர்த்தியடைந்தனர்.

இந்த ஆலயத்தில் அன்னை மரகதாம்பிகை, வேண்டும் வரம் அருளும் தாயாகக் குடிகொண்டிருக்கிறாள். அம்மனுக்குப் பச்சைப் புடவை சாத்தி வழிபட்டால் வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதிகம். இந்த ஆலயத்தில் உள்ள விஷ்ணு மற்றும் துர்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம். இதனால் திருமணத்தடை நீங்கும் என்றும் புத்ர பாக்கியம் கைகூடும் என்றும் சொல்கிறார்கள். இங்குள்ள பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமி வழிபாடு விசேஷம்.கடன் பிரச்னை உள்ளவர்கள் அந்த நாளில் இங்கு வந்து வழிபட்டால், வறுமை நீங்கி சகல செல்வங்களும் கிடைக்கும்.

எப்படிச் செல்வது: திண்டிவனம் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே உள்ளது இந்த ஆலயம் (தொடர்புக்கு: ராதா குருக்கள் - 98439 83483).

கோலியனூர் துளசியும் வில்வமும்!

இறைவன்: அருள்மிகு வாலீஸ்வரர்

இறைவி:  அருள்மிகு பெரியநாயகி

தலச்சிறப்பு: கிஷ்கிந்தையின் அரசன் வாலி வழிபட்ட சிறப்பினையுடையது இந்தத் திருத்தலம். அதனால், இறைவன் ‘வாலீஸ்வரர்’ என்றே அழைக்கப்படுகிறார். இங்கு மேற்கு நோக்கிய கருவறையில் ஈசன் அருள்பாலிக்கிறார்.

கி.பி 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மவர்மனால் எழுப்பப்பட்ட இந்த ஆலயம், பிற்காலத்தில் ராஜராஜ சோழனால் புனரமைக்கப்பட்டு விரிவுபடுத்தப் பட்டது என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அன்னை பெரியநாயகி அம்மனும் சனி பகவானும் தெற்கு நோக்கிய தனிச் சந்நிதிகளில் கோயில்கொண்டு அருள்புரிகிறார்கள்.

வழிபாட்டுச் சிறப்பு: வாலி, சிவபெருமானிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இங்கு வழிபடும் பக்தர்களின் முன்வினைப் பாவங்களை நீக்கி வாலீஸ்வரர் அருள்கிறார் என்பது ஐதிகம். பதினொரு திங்கட்கிழமைகள் இந்தத் தலத்துக்கு வந்து இலுப்பை எண்ணெய் அல்லது நெய் தீபமேற்றி வில்வம், துளசியால் வாலீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், சகல துன்பங்களும் நீங்கும் என்பது சிறப்பு. இங்கு சனி பகவான் தனிச்சந்நிதி கொண்டருள்வதால் இது சனி தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

சனிக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து ஸ்வாமி மற்றும் அம்பாளை வழிபடுவதுடன், நல்லெண்ணெய் தீபமேற்றி சனீஸ்வரரை வழிபட்டு வறியவர்களுக்கு அன்னதானம் செய்வது விசேஷம். இதன் மூலம், ஜாதகத்தில் சனி பகவானின் நிலையால் ஏற்படும் பாதகங்கள் விலகும்; சனி பகவானின் கருணைப்பார்வை கிடைத்து வாழ்வில் செல்வ வளம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

எப்படிச் செல்வது: விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம். விழுப்புரத்திலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உண்டு (தொடர்புக்கு: சிவக்குமார் சிவாசார்யர் - 94432 93061).

இரும்பை மாகாளம் தாமரையாள் குயில்மொழியாள்

இறைவன்: அருள்மிகு மகாகாளேஸ்வரர்

இறைவி: அருள்மிகு மதுரசுந்தரநாயகி

தலச் சிறப்பு: மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோயிலில், மூலவர் மூன்றாகப் பிளவுபட்ட லிங்கத் திருமேனியராகக் காட்சியளிக்கிறார். முன்னொரு காலத்தில் கடுவெளிச்சித்தருக்கு நேர்ந்த அவமானத்தைப் பொறுக்காது, ஈசன் வெகுண்டதே, லிங்கம் மூன்று முகங்களாக உடைந்ததன் காரணம் என்கின்றனர் பக்தர்கள். மூன்று பாகங்களும் மூன்று முகங்கள் என்றும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் ஈசனே என்று உணர்த்தும் திருக்கோலமே இது என்றும் சொல்கின்றனர். இங்கு ஈசனை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு அம்பிகைக்கு குயில்மொழி நாயகி என்றும் மதுரசுந்தரநாயகி என்றும் பெயர். கடுவெளிச்சித்தர் இங்கு தவமியற்றியபோது, அம்பிகை குயில்வடிவாகி நின்று சிவபெருமானிடம் சித்தரின் தவத்தின் மேன்மையை எடுத்துரைத்தாராம். இங்குள்ள நடராஜரின் திருமேனியில் கால் சற்று கீழே மடங்கிய நிலையில் காணப்படுகிறது. இதை நடராஜரின் சந்தோஷ நிலை என்கின்றனர் பக்தர்கள்.

வழிபாட்டுச் சிறப்பு: இசை பயில்பவர்களும் குரல்வளம் வேண்டுபவர்களும் இங்கு வந்து குயில்மொழி நாயகிக்குத் தேனாபிஷேகம் செய்து அதைப் பிரசாதமாகக் கொள்கிறார்கள். அவ்வாறு செய்தால் குயில்போன்ற இனிமையான குரல் கிடைக்கும் என்பது ஐதிகம். மேலும், அம்பிகை தாமரை மலரோடு மகாலட்சுமியின் சொரூபமாகவும் அமர்ந்தருள்வதால், இங்கு வழிபடும் பக்தர்களுக்குச் செல்வவளம் கிட்டும் என்பது நம்பிக்கை. இங்கு சந்திர பகவான் கையில் ஓலைச்சுவடி ஒன்றை ஏந்தி கலாசந்திரனாகத் தனிச்சந்நிதி கொண்டு அருள்கிறார். கலையில் மேன்மை வேண்டுவோர் இந்தச் சந்திரனை வழிபடுவது சிறப்பாகும்.

எப்படிச் செல்வது : திருவக்கரை - பாண்டிச்சேரி மார்க்கத்தில் திருவக்கரையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது இரும்பை மாகாளம் (தொடர்புக்கு: சுவாமிநாதன் - 94434 65502).

திருவக்கரை சகலதோஷ நிவர்த்தி!

இறைவன்: அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர்

இறைவி: அருள்மிகு வடிவாம்பிகை

தலச் சிறப்பு: திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற இந்தத் தலத்து மூலவர், மும்மூர்த்தி களின் முகங்கள்கொண்ட அதிஅற்புத லிங்க வடிவமாகக் காட்சியருள்கிறார். இந்தத் தலத்து இறைவனை பூஜித்து வரம்பெற்ற வக்ராசுரனும் அவன் தங்கை துன்முகியும் மூவுலகையும் துன்புறுத்தத் தொடங்கினர். இவர்களிடமிருந்து தங்களைக் காக்கவேண்டி தேவர்களும் முனிவர்களும் ஈசனைச் சரணடைந்தனர்.

ஈசன், அசுரர்களை அழிக்குமாறு விஷ்ணுவையும் பார்வதி தேவியையும் கேட்டுக் கொண்டார். அதன்படி விஷ்ணு தன் சக்கராயுத்தை ஏவி வக்ராசுரனை வதம் செய்தார். துன்முகியை காளிரூபம்கொண்ட அன்னை வதம் செய்தார். இதன் காரணமாக விஷ்ணு, இந்தத் தலத்தில் வரதராஜப் பெருமாளாகக் கோயில்கொண்டுள்ளார். அம்பிகையோ வக்கிரகாளியம்மனாக அருள்பாலிக்கிறார்.

வழிபாட்டுச் சிறப்பு: சகலதோஷ நிவர்த்தித் தலமாகத் திகழ்கிறது இந்தக் கோயில். இங்கு அருள்புரியும் துர்கையை செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்து வழிபடுவது சிறப்பு. தொடர்ந்து மூன்று மாதம் பௌர்ணமி நாள்களில் வக்கிரகாளியை வந்து வழிபடுபவர்களுக்கு நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.

இந்தத் தலத்து மூலவரை பூச நட்சத்திரத்தன்று வழிபடுவது சிறப்பு. இங்குள்ள தீபலட்சுமி சந்நிதியில் ராகு காலத்தில் விளக்கேற்றி, சந்நிதி யைச் சுற்றி மாங்கல்யம் கட்டி வழிபட திருமணம் விரைவில் கைகூடும். காகத்தின் மீதமர்ந்து அருள்பாலிக்கும் வக்கிர சனீஸ்வரருக்கு கறுப்பு ஆடை சாத்தி எள் தீபமேற்றி வழிபட, வக்கிர சனியின் தொல்லைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

எப்படிச் செல்வது: கோலியனூர் - திருக்கனூர் மார்க்கத்தில் சுமார் 26 கி.மீ தொலைவில் உள்ளது திருவக்கரைத் தலம் (தொடர்புக்கு: சேகர் குருக்கள் - 96558 29615).

தாதாபுரம் பிரம்ம சூத்திர அற்புதம்!

இறைவன் : அருள்மிகு ரவிகுல மாணிக்க ஈஸ்வரர்

இறைவி : அருள்மிகு மாணிக்கவல்லி (அருள்மிகு காமாட்சி அம்மன்)

தலச் சிறப்பு: ராஜராஜ சோழனின் தமக்கையான குந்தவை நாச்சியார் எழுப்பிய இந்தத் திருக்கோயில் 1,000 ஆண்டுக்கால பழைமை வாய்ந்தது. இந்தத் தலத்தின் தற்போதைய பெயர் ‘தாதாபுரம்’ என்று வழங்கப்பட்டாலும் இதன் வரலாற்றுக் காலப் பெயர் ‘ராஜராஜபுரம்’ என்பதாகும்.

கிழக்கு நோக்கிய இந்த ஆலயம் கருவறை, அர்த்த மண்டபம், இடைநாழி, மகா மண்டபம், முகமார்பு எனும் வடிவமைப்பில் உள்ளது. கருவறையையும் அர்த்த மண்டபத் தையும் இணைக்கும் இடைநாழியில் காணப்படும் துவாரபாலகர்கள் உடல்களில் யானையை விழுங்கும் பாம்புகள் (ஆனைகொண்டான்) வியக்கும்வண்ணம் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்து ஈசன், ராஜராஜனின் பெயரான ‘ரவிகுல மாணிக்கம்’ என்னும் பெயர்கொண்டு ‘ரவிகுல மாணிக்க ஈஸ்வரர்’ என்றே அழைக்கப்படுகிறார்.

இத்தலத்து அம்பிகை மாணிக்கவல்லி, காமாட்சி அம்மன் என்னும் திருநாமங்களோடு அருள்பாலிக்கிறாள். பிராகாரத்தில் நடன கணபதி, தட்சிணாமூர்த்தி, திருமால், துர்கை, நான்முகன், பைரவர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், சூரியபகவான், காளிங்கநாதர், நவகிரகங்கள் ஆகியோர் அருள்புரிகின்றனர்.

வழிபாட்டுச் சிறப்பு: மூலவரான லிங்கத்திருமேனியின் மீது பிரம்ம சூத்திரக்கோடுகள் காணப்படுகின்றன. ஆகவே, இந்தத் தல இறைவனை வணங்கி வழிபட்டால் சகல ஞானங்களும் ஸித்திக்கும் என்பது ஐதிகம். இந்தத் தலத்தில் நடைபெறும் ஆடிப்பூர வளைகாப்பில் கலந்துகொண்டால், குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

எப்படிச் செல்வது : திண்டிவனத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாதாபுரம். திண்டிவனத்திலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன (தொடர்புக்கு : குமாரசுவாமி - 82200 32408).