Published:Updated:

கொரோனா வைரஸ் பரவல்.. திருவாரூர் ஆழித்தேரோட்டம் ஒத்திவைப்பு!

ஆழித்தேரோட்டம்
ஆழித்தேரோட்டம்

பழனி பங்குனி உத்திரம், திருநள்ளாறு பிரமோற்சவம், திருக்கடையூர் ஸ்ரீ காலசம்ஹாரமூர்த்தி பெருவிழா, மதுரை கள்ளழகர் திருவிழா போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் தேரோடும் வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க காத்திருக்கும் உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம், கொரோனா ஊரடங்கு காரணமாய் ஒத்திவைக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் கோயில்
திருவாரூர் கோயில்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறவேண்டிய பல்வேறு கோயில்களின் பாரம்பரிய விழாக்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. குறிப்பாக பழனி பங்குனி உத்திரம், திருநள்ளாறு பிரமோற்சவம், திருக்கடையூர் ஸ்ரீ காலசம்ஹாரமூர்த்தி பெருவிழா, மதுரை கள்ளழகர் திருவிழா போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மே மாதம் 3 - ம் தேதி வரை உள்ள ஊரடங்கு மேலும் நீடிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. இந்நிலையில் கொரோனாவை தீவிரமாக கட்டுப்படுத்த தமிழக அரசு சென்னை, மதுரை கோவை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் இன்று முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

தஞ்சை, நாகை, திருவாரூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

திருவாரூர் கோயில்
திருவாரூர் கோயில்

இச்சூழ்நிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் "கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பொதுமக்கள் ஒரிடத்தில் அதிக அளவில் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு அடுத்த மாதம் 4-ம் தேதி நடைபெறுவதாக இருந்த திருவாரூர் ஆழித்தேரோட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு