Published:Updated:

திருவாவடுதுறை ஆதீனப் பட்டணப் பிரவேசம்- ஜனவரி 28 -ல் தொடக்கம்!

திருவாவடுதுறை ஆதீன பட்டணப் பிரவேசம்

ஐந்தாம் நாள் உற்சவமாக கோமுக்தீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி வழங்கும் விழாவும், சிகர நிகழ்வாக 28-ம் தேதி குருமுதல்வர் நமசிவாய மூர்த்திகள் சந்நிதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படும்.

திருவாவடுதுறை ஆதீனப் பட்டணப் பிரவேசம்- ஜனவரி 28 -ல் தொடக்கம்!

ஐந்தாம் நாள் உற்சவமாக கோமுக்தீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி வழங்கும் விழாவும், சிகர நிகழ்வாக 28-ம் தேதி குருமுதல்வர் நமசிவாய மூர்த்திகள் சந்நிதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படும்.

Published:Updated:
திருவாவடுதுறை ஆதீன பட்டணப் பிரவேசம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவாவடுதுறை சைவ ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு, ஆதீன குருமுதல்வர் நமசிவாய மூர்த்திகளின் ஆண்டுப் பெருவிழா மற்றும் பட்டணப்பிரவேசம் வரும்  ஜனவரி 28 -ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தவிழா நேற்று (19.01.2023) ஆதீன மடத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவாவடுதுறை ஆதீன பட்டணப் பிரவேசம்
திருவாவடுதுறை ஆதீன பட்டணப் பிரவேசம்

முன்னதாக, கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அன்னக்கொடி ஏற்றப்பட்டது. பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் நாள்தோறும் சிறப்பு பூஜைகளும், சிறப்பான சமயப் பணியாற்றி வருபவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும், ஆன்மிகப் புத்தகங்கள் வெளியீடும் நடைபெறும். 

ஐந்தாம் நாள் உற்சவமாக கோமுக்தீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி வழங்கும் விழாவும், சிகர நிகழ்வாக 28-ம் தேதி குருமுதல்வர் நமசிவாய மூர்த்திகள் சந்நிதியில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, அன்றிரவு திருவாவடுதுறை ஆதினம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாசார்ய சுவாமிகள் பல்லக்கில் வீதியுலா சென்று, ஞானகொலுக்காட்சி எழுந்தருளும் பட்டணப்பிரவேசமும் நடைபெறுகிறது.

திருவாவடுதுறை ஆதீன பட்டணப் பிரவேசம்
திருவாவடுதுறை ஆதீன பட்டணப் பிரவேசம்

கொடியேற்று விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். கடந்தாண்டு பட்டணப் பிரவேச நிகழ்வின்போது, திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு காரணமாகக் கடைசி நேரத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வில், ஆதீனகர்த்தர் பல்லக்கில் எழுந்தருளப் போலீசார் விதித்த தடை விதித்ததும் அதனை மீறி பட்டணப்பிரவேச விழா நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.