Published:Updated:

திருவடிசூலம் திருமண் திருப்பதியில் பவித்ரோத்ஸ்வம்... தன்வந்திரி பகவான் பிரதிஷ்டை!

தன்வந்திரி பகவான் ஆரோக்கியம் அருள்பவர். பாற்கடலிலிருந்து அமுதகலசத்தைக் கொண்டுவர பகவான் எடுத்த அவதாரம் 'தன்வந்திரி' அவதாரம்.

திருமண் திருப்பதி
திருமண் திருப்பதி

செங்கல்பட்டுக்கு அருகே அமைந்துள்ள திருத்தலம் திருவடிசூலம். இங்கு அருள்மிகு சப்தசைலஜ ஸ்ரீவாரு வேங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது. கூடவே அன்னை ஆதிபரமேஸ்வரிதேவி ஸ்ரீகருமாரியம்மன் திருக்கோயிலும் 108 திவ்ய தேசத் திருத்தலங்களின் சுவாமி சந்நிதிகளும் அமைந்துள்ளன.

திருமண் திருப்பதி
திருமண் திருப்பதி

ஒரே இடத்தில் இத்தனை பெருமாள்களும் எழுந்தருளி இருப்பதால் இந்தத் தலத்தின் மகிமை சொல்லில் அடங்காதது.

மேலும் இந்தத் தலத்தின் மகிமையைக் கூட்ட இங்கு தன்வந்திரி பகவான் பிரதிஷ்டை நடைபெற உள்ளது. தன்வந்திரி பகவான் ஆரோக்கியம் அருள்பவர். பாற்கடலிலிருந்து அமுதகலசத்தைக் கொண்டுவர பகவான் எடுத்த அவதாரம் 'தன்வந்திரி' அவதாரம். தன்வந்திரியை அடிப்படையாகக்கொண்டே எழுந்த மருத்துவ சாஸ்திரம் ஆயுர்வேதம். தன்வந்திரி பகவானை வேண்டிக்கொள்ள உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதிகம்.

திருமண் திருப்பதி
திருமண் திருப்பதி

திருமண் திருப்பதி எனப்படும் இந்தத் திருத்தலத்தில் கார்த்திகை மாதம் 13-ம் தேதி (29.11.19) காலை முதல் 15-ம் தேதி (1.12.19) வரை பவித்ரோத்ஸவம் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி மூன்று தினங்களுக்கு இங்கு விசேஷ ஹோமம், அபிஷேகம், ஸ்வாமி புறப்பாடு, பவித்திர மாலை சாற்றுதல் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறவிருக்கின்றன.

இந்த வைபவங்கள் ஸ்ரீதேவி குகயோகி மருளாளர் புண்ணியக்கோட்டி மதுரை முத்து ஸ்வாமிகளின் ஆசியோடு நடைபெறவுள்ளது. மூன்று நாள்களும் ஹோமங்களும் விசேஷ பூஜைகளும் சிறப்புடன் நடைபெற உள்ளன.

திருமண் திருப்பதி
திருமண் திருப்பதி

இங்கு நடைபெறும் ஹோம ஜபங்களில் கலந்துகொண்டு பெருமாளை வழிபட சகல துன்பங்களும் நீங்கும் என்கின்றனர் சான்றோர்கள். குறிப்பாக தன்வந்திரி பகவான் சந்நிதி கும்பாபிஷேகத்தைக் கண்டு பகவானை தரிசனம் செய்ய நோய்நொடிகள் நீங்கி நல்ல ஆரோக்கிய மான வாழ்வு கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.