Published:Updated:

`இந்தக் கோப்பை ஏற்கெனவே உடைந்துவிட்டது!'

ஜென் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
ஜென் கதைகள்

ஜி.எஸ்.எஸ்

`இந்தக் கோப்பை ஏற்கெனவே உடைந்துவிட்டது!'

ஜி.எஸ்.எஸ்

Published:Updated:
ஜென் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
ஜென் கதைகள்

மிக அழகிய வேலைப்பாடுகள் அமைந்த கண்ணாடிக் கோப்பை ஒன்று அந்த ஜென் குருவுக்குப் பரிசாக அளிக்கப் பட்டது. அ​தைத் தனக்குப் பரிசளித்த மாணவன் குறித்து​ப் பிறரிடம் பெருமையாகப் பேசினார் குரு; அந்தக் கோப்பையை ஆனந்தம் பொங்க அனைவரிடமும் காட்டினார்.

`இந்தக் கோப்பை ஏற்கெனவே உடைந்துவிட்டது!'

அதேநேரம் அவர் வேறொன்றையும் செய்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் சில நொடிகள் அந்தக் கோப்பையைக் கையில் வைத்தபடி, ‘இந்தக் கண்ணாடிக் கோப்பை ஏற்கெனவே உடைந்துவிட்டது’ என்று கூறிக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.

ஒரு நாள், குருவைப் பார்க்க வந்த ஒருவரின் தவறுதலான கையாளுதலால் அந்தக் கோப்பை கீழே விழுந்து நொறுங்கியது. அருகிலிருந்த மற்றவர்கள் அதிர்ச்சியடைய, குரு அமைதியாக இருந்தார். பின் ஒரு துடைப்பத்​தை எடுத்து கண்ணாடித் துண்டுகளைப் பெருக்கத் தொடங்கினார்.

`இந்தக் கோப்பை ஏற்கெனவே உடைந்துவிட்டது!'
narith_2527

கீதை உணர்த்தும் பாதையும் இதுதானே... `எதைக் கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு?’ தொடக்கத்திலிருந்து அந்தக் கண்ணாடி கோப்பை தன்னுடையது அல்ல என்பதையும், அதற்கு எதுவும் நேரலாம் என்பதையும் அந்த குரு உணர்ந்தது உத்தமம். வாழ்க்கையில் சோதனையான நிகழ்வுகள் நேரும்போது, இப்படியான எண்ணம் நமக்கும் உதவும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான வாசிம் அக்ரம் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர். அவர் கிரிக்கெட் வாழ்வில் உச்சத்தைத் தொட்ட காலம் அது. அவரிடம் ஒரு தகவல் கூறப்பட்டது. `நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்' இதுதான் அந்தத் தகவல். வாசிம் அக்ரமால் இதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ‘ஐம்பது வயதைத் தாண்டினால்தானே இதுபோன்ற பிரச்னைகள் வரும். தவிர, நான் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவன்... எனக்கு எப்படி...' என்றெல்லாம் சிந்தித்தார். ஆனாலும் யதார்த்தத்தை ஏற்றுக்கொண் டார்.

யாருக்கு வேண்டுமானாலும் இது நேரலாம் என்பதையும், ஆசியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகமாகவே உள்ளது என்பதையும் அறிந்துகொண்டார்.

அப்போதும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள சில வாரங்கள் பிடித்தன அவருக்கு.

“எனக்கு நெருங்கியவர்கள் என்னை எச்சரித் தார்கள். எனக்கு ஏற்பட்ட சர்க்கரைநோய் பாதிப்பை பகிரங்கப்படுத்தவேண்டாம் என்றார்கள். ஆனால், அதில் எனக்கு உடன் பாடு இல்லை. இதன் மூலம் அந்த நோய் குறித்து ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம் என்றே எண்ணினேன். மட்டுமன்றி, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டாலும் சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதை நிரூபிக்கவும் விரும்பினேன்’’ என்றார்.

உண்மைதான்! அதன் பிறகே அவர் 250 விக்கெட்டுகள் வீழ்த்தினாராம்.

`எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொண் டிருந்தால் மட்டும் போதாது. மன இறுக்கம் கொண்ட வாழ்க்கை முறையாலும் சர்க்கரை நோய் உண்டாகலாம். கார், கணினி, தொலைக்காட்சி என்றே வாழ்க்கையைச் செலவிட்டால், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் என்று நாம் கொடுக்கும் விலையும் அதிகமாக இருக்கும் என்றும் கருத்து வெளியிட்டார்.

கிடைக்காததை எண்ணி வருத்தப்படாமல் இருப்பதே வாழ்க்கையை மகிழ்ச்சிப் படுத்தும். கிடைத்த ஒன்றை இழக்க நேர்ந்தாலும் அதுகுறித்து வருந்தாமல் இருப்பது, அந்த மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும்.

`இந்தக் கோப்பை ஏற்கெனவே உடைந்துவிட்டது!'

`அயோத்தி ஈடாகுமா?'

தவியைப் பற்றி சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால் - பிறர் உங்களுக்குச் செய்த உதவியை மறக்காதீர்கள். பிறருக்கு நீங்கள் செய்த உதவியை அந்த நொடியே மறந்துவிடுங்கள். ஒருவர் நமக்குச் செய்த நன்மையை நினைவில் கொள்ளுதலும், செய்த தீமையை மறந்து விடுதலும் சிறந்த அறம் என்கின்றன ஞானநூல்கள்.

தினை அளவு உதவி செய்தாலும், அதன் பயன் பனை அளவுக்கு உயர்ந்து நிற்கிறது. பெரியோர், சிறிய உபகாரத்தையும், பெரிய உபகாரமாகக் கொள்வர். ஒரு காலத்தில், எவரோ கொடுத்த சிறு தொகையை முதலீடாகக் கொண்டு ஒருவர் முன்னேறி இருக்கலாம். இதை மனதில் கொண்டு அதே அளவுக்கு பதிலுதவி செய்ய வேண்டும் என்று பொருள் அல்ல. உதவி பெற்றவர் தனது தகுதியைப் பொறுத்து, அதைவிட அதிகமாகவே செய்ய வேண்டும்.

கடல் கடந்து சென்று, திரும்பி வந்து, ‘கண்டேன் சீதையை’ என்று தன் முன் குதித்த ஆஞ்சநேயரைப் பார்த்தார் ராமபிரான். எப்பேர்ப்பட்ட உதவி! இதற்கு அயோத்தி சாம்ராஜ்ஜியத்தை கொடுத்தால் ஈடாகுமா... மூவுலகத்தைக் கொடுத்தால் ஈடாகுமா... என்றெல்லாம் யோசித்து, எதுவும் ஈடாகாது என்று நினைத்து, தனது நன்றியை வெளிப்படுத்த அவரை ஆலிங்கனம் செய்து கொண்டாராம் ராமர்.

(சுவாமி ஓம்காராநந்தரின் அருளுரைகளில் இருந்து...)


- எம்.ராமு, மதுரை