Published:Updated:

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா - இந்த ஆண்டு எப்போது? #Tirupati

எஸ்.கதிரேசன்

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை நிகழ்ச்சி அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

திருப்பதி
திருப்பதி

திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறும். புராண - இதிகாச காலத்தில் பிரம்மனே திருமலைக்கு வந்து மலையப்பசாமிக்கு பிரம்மோற்சவ விழாவைக் கொண்டாடியதாக ஐதிகம். இதையொட்டி வைகாநஸ ஆகம விதிமுறைகளின்படி, பிரம்மோற்சவ தினங்களில் வேங்கடேச பெருமாளுக்கு தினமும் பூஜைகளும் அலங்காரங்களும் செய்விக்கப்பட்டு நான்கு மாடவீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெறும்.

கருடாழ்வார்
கருடாழ்வார்

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி தொடங்கி, அக்டோபர் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் பலரும் இந்த பிரமோற்சவ விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். குறிப்பாகப் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை நிகழ்ச்சி அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

சிறப்பு தரிசன சலுகைகள் ரத்து!

பிரம்மோற்சவத்தில் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள இருப்பதால் விழா நடைபெறும் நாள்களில், அனைத்து வகையான சிறப்பு தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள், மூத்தக் குடிமக்கள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கிவரும் சிறப்பு தரிசன சலுகைகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை தவிர வி.ஐ.பி. தரிசனம், பரிந்துரை மற்றும் சிபாரிசுக் கடிதங்களின் அடிப்படையில் வருபவர்களுக்கும் சிறப்பு தரிசன அனுமதி மறுக்கப்படுகிறது.

மலையப்பசாமி
மலையப்பசாமி

பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் விவரம்:

30-9-19 - கருடக் கொடியேற்றம் இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதி உலா

1-10-19 - சிறிய சேஷ வாகன வீதி உலா, இரவு 7 மணிக்கு ஹம்ச (அன்னப்பறவை) வாகன வீதி உலா

2-10-19 - சிம்ம வாகன வீதி உலா, இரவு 7 மணிக்கு முத்துப்பந்தல் நிகழ்ச்சி

3-10-19 - கற்பக விருட்ச வாகன வீதி உலா, இரவு 7 மணிக்கு சர்வ பூபால வாகன வீதி உலா

4-10-19 - மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதி உலா, இரவு 7 மணிக்கு கருட சேவை

கற்பக விருட்ச வாகனம்
கற்பக விருட்ச வாகனம்

5 -10-19 - அனுமன் வாகன வீதி உலா, மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா,

6 -10-19 சூர்ய பிரபை வாகன வீதி உலா, இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா

7-10-19 தேரோட்டம், இரவு 7 மணிக்கு குதிரை வாகன வீதி உலா,

திரும்லை திருப்பதி
திரும்லை திருப்பதி

8-10-19 சக்கர ஸ்நானம் இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு.