சகல கிரக தோஷங்களையும் தன் பார்வை யாலேயே நீக்கியருளும் சக்திகொண்ட, கோடி நன்மைகளை அள்ளித்தரும் ஸ்ரீராஜ குரு பகவான் தனிச் சந்நிதியில் அருளும் ஒப்பற்ற திருத்தலம், திட்டை. இங்கே அருளும் இறைவனின் திருப் பெயர் ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்; அம்பிகை ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை.

பிரளய காலத்தில், பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் அழியாமல் திட்டு போலக் காட்சியளித்த தாம். அந்தப் பகுதியே திட்டை திருத்தலம்.

பஞ்சபூதங்களுக்குமாக ஐந்து சிவலிங்கங்கள் இத்தலத்தில் உள்ளன. நான்கு மூலைகளில் நான்கு லிங்கங்களும், கருவறையில் வசிஷ்டர் வழிபட்ட ஐந்தாவது சிவலிங்கத் திருமேனியும் உள்ளன.

இங்கே சிவனாருக்கு இணையாக மிக உயர்ந்த பீடத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை. அவளின் திருச்சந்நிதிக்கு மேலே, விதானத்தில் 12 ராசிக் கட்டங்களும் செதுக்கப்பட்டுள்ளன. அனைத்து ராசிக்காரர்களின் கஷ்டங்களையும் நீக்கி அருள்கிறாள் தேவி.

குருவுக்கு, குரு பதவியையும் குரு யோகத்தையும் தந்தருளிய புண்ணியம் நிறைந்த தலம் திட்டை. இங்கே தெற்கு நோக்கி தனிச் சந்நிதியில் அருள்கிறார் ராஜகுரு. இவரை வழிபட்டால் ராஜயோகம் கிட்டும் என்பது நம்பிக்கை.

சந்திரனுக்கும் உகந்த தலம் இது. திங்களூரில் தன் சாபம் தீர்த்த சிவனாருக்குத் திட்டையில் தன் நன்றியைச் செலுத்துகிறார் சந்திர பகவான் என்பர். அதாவது, சிவலிங்கத் திருமேனிக்கு மேலே சந்திரகாந்தக் கல்லாக இருந்து, காற்றிலிருந்து ஈரப்பதத்தை எடுத்து, 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நித்ய அபிஷேகம் செய்கிறார் சந்திரன்.

திட்டை, பைரவரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலமும்கூட. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் இங்கு அருளும் பைரவமூர்த்தியை வழிபட்டால், விரைவில் தோஷங்கள் நீங்கும்; சந்தோஷம் பெருகும் என்பது ஐதிகம்.

எப்படிச் செல்வது?: தஞ்சாவூரி லிருந்து மெலட்டூர் செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது, தென்குடித் திட்டை என்னும் திட்டை திருத்தலம். தஞ்சையி லிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.